Ezhuna

எழுநா

Society TA ↓ Επεισόδια: 949

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Δημιουργός

Ezhuna

Κατηγορία

Society

Ιστοσελίδα του podcast

ezhunaonline.com

Τελευταίο επεισόδιο

29 Μαϊ 2025

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

புதுத்தொழில்முனைவோர் மனத்தன்மை | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | ரூபன் கணபதிப்பிள்ளை 01.10.2022

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன.  வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும்,...

ஓய்வு நேரத்தில் பல்வேறு கலைப் பொருள்களைச் செய்வேன் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | கணேஸ் 01.10.2022

நான் ஒரு துறையில் இருப்பதில்லை. ஐந்து வருடத்துக்கு ஒருக்கா நான் தொழிலை மாற்றிக் கொள்வேன். எல்லா கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளேன். நான் பழகும் அனைத்து மனிதர்கள், உயிரினங்கள் அவற்றிடம் இருந்துதான் நான் எனக்கு தேவையான படைப்பாக்கத்திற்கான தகவல்களை பெற்றுக் கொள்கிறேன். என்னுடைய மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே படைப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால்...

பாரம்பரிய விவசாயமும் சூழல் சமநிலையும் | இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் | கலாநிதி கந்தையா பகீரதன் 30.09.2022

ஆரம்பத்தில் மனிதன் இயற்கையாக இருந்த சிறு சிறு நிலப்பரப்புக்களில் தான் வேடுவனாக இருந்தபோது சேகரித்த தானியங்களை எந்த நிலப் பண்படுத்தலை செய்யாமல்  பயிரிட்டான், அதில் வெற்றியும் கண்டான்.  இந்த வெற்றி மேலும் பயிர் செய்வதற்கு அவனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த, மெதுவாக புதர்கள் மற்றும் சிறு மரங்களை வெட்டி நிலத்தை துப்பரவு செய்து விஸ்தரிக்கப்பட்ட அளவில்  பயிர் செய்ய ஆரம்பித்தான், உணவு கிடைத்தது...

இலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என். கே. எஸ். திருச்செல்வம் 28.09.2022

இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர்.  இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள்  காணப்படு...

அரச உத்தியோகத்தரானால் அரசியல் உரிமை பறிக்கப்பட்டதாக அர்த்தமல்ல | சிவில் சமூக அமைப்புக்கள் | செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை, சமூக பொருளாதார ஆய்வாளர் 27.09.2022

இயல்பாகவே சிவில் சமூகம் என்பது மக்கள் சார்ந்த நலன்களுக்காக தான் பேசுகின்றது. குடிசார் சமூகங்கள் ஏதோ ஒரு வகையில் அரசியல் கட்சி மயப்படுத்தப்பட்டுப்போகும்போது அவை சிவில் சமூகம் என்ற அந்தஸ்திலிருந்து வெளியே போகின்றன. ஒரு மனிதன் பொது சேவை உத்தியோகத்தராக சேர்ந்து அரசாங்க உத்தியோகத்தராக போனால் அவனது அரசியல் உரிமை பறிக்கப்பட்டது என்று அர்த்தம்அல்ல. நிறைய அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களை சமூகத்தின் செயற்பாட...

இன்னொரு உலக ஒழுக்காறு : உலக நாடுகளின் இயக்கச் செல்நெறி | தமிழ் பண்பாடு :  ஊற்றுக்களும் ஓட்டங்களும் | கலாநிதி. ந. இரவீந்திரன் 27.09.2022

இன்றைய உலக நெருக்கடிக்குள் ரஷ்யாவை மட்டுமன்றிச் சீனாவையும் சேர்த்தே குற்றம் சாட்டுவதையும் காண்கிறோம். ரஷ்ய - உக்ரேன் யுத்தத்துக்கு முன்னரே அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய அணி முன்னெடுத்த உலகப் பொருளாதாரச் செயலொழுங்குகள் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்து இருந்த சூழலில்,  கொரோனாப்பெருந்தொற்று ஏற்பட்டு தனது தலைமேல் பழியை ஏற்றுக்கொண்டது. அந்தக் கொரோனாவை உருவாக்கி பரப்பியது சீனாவே எனும் பிரசா...

பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றுதல் | இலங்கையின் இனவாத அரசியல் - ஒரு வரலாற்றுப் பார்வை | பி.ஏ. காதர் 23.09.2022

இலங்கை இந்தியாவுக்கு அருகில் இருந்தபடியாலும் - இரு பருவ காற்றின் போதும் பாதுகாப்பாக கப்பல்களை நிறுத்தக்கூடிய - உலகின் இரண்டாவது பெரிய ஆழ்கடல் இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகம் இங்கிருந்தபடியாலும் காலனியல் போட்டியில் இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்தது. ஒல்லாந்தர் போர்த்துகேயரிடமிருந்து இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றியதற்கு இலங்கையில் விளையும் கறுவா ஒரு காரணமாக இருந்தாலும்  இந்தியாவில்...

பால்: உணவு முதல் வணிகம் வரை | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன் 21.09.2022

இலங்கையில் இறக்குமதியாகும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முதல்  380 /= ரூபாவாக  இருந்த 400 கிராம் பால்மா இன்று 116௦/= வரை அதிகரித்துள்ளது. இது சாதாரண மக்கள் நுகரமுடியாத அதிகரிப்பாகும். அத்துடன் வழமையாக கிராமத்தின் பெட்டிக் கடைகளிலும் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பால் மாவை நகரங்களின் பிரதான பல்பொருள் அங்காடிகளிலும் பெறமுடியாது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உள்நாட்...

மருந்தாகும் மசாலாப் பொருள்கள் - பகுதி 2 | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால. சிவகடாட்சம் 19.09.2022

செமியாக்குணம், வாய்வு என்பற்றைத்தீர்த்து வைக்கும் சிறந்த மருந்தாகப் பெருங்காயம் உள்ளது. எளிதில் சமிபாடு அடையாத போஞ்சி கடலை மற்றும் பருப்பு வகைகளைச் சமைக்கும்போது பெருங்காயத்தையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாய்வுக்கோளாறுகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம். வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மருந்தாக இஞ்சி நெடுங்காலமாகப் பயன்பட்டு வந்துள்ளது. குடல் வாயுவை வெளியேற்றவும் உணவுப்பாதையைச் சீ...

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் II | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன் 17.09.2022

இலங்கைத்தீவின் கரையோரம் மட்டக்களப்பு வாவிக்குத் தெற்கே பிறைத்துண்டு வடிவில் அமைந்திருப்பதால், களப்புகளின் அளவை அதிகரிக்கும் கடுங்காற்று, பருவப்பெயர்ச்சிக் காற்றுகள் என்பன அங்கு அவ்வளவாக செல்வாக்குச் செலுத்தவில்லை (உரு.02). அதனால் அங்கு களப்புகளின் பரப்பு தெற்கே செல்லச் செல்ல சிறுத்துச் செல்கிறது. கடலுக்குச் சமாந்தரமாக முழுநீளத்துக்கும் களப்புகளின் தொடர் சங்கிலி காணப்படுவதால், கீழைக்கரை அக்களப்புகள...

ஈழத் தமிழரும் கறுப்புச் சுற்றுலாவும் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 16.09.2022

அண்மைக் காலத்தில் அதிகம் கவனிப்புப் பெற்ற ஒரு சுற்றுலா முறையாகச் கறுப்புச் சுற்றுலா (Black tourism) காணப்படுகிறது. குறிப்பாக 1990களில் இது முக்கியமான புலமை உரையாடலாக உருவாகியது. இது ஒரு மக்கள் குழுமத்தின் அல்லது தேசத்தின் துயரடர்ந்த நிகழ்ச்சிகளான இறப்பு, கொலை, அழிவு முதலியன நடைபெற்ற இடங்களை அவற்றின் சான்றாதாரங்களை உள்ளடக்கிய சுற்றுலா முறையாகும். உலகளாவிய ரீதியில் பல கரிய மையங்கள் இனங் காணப்பட்டுள்...

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம் 15.09.2022

சர்வதேச தராதரங்களின் படியான மதிப்பீட்டில் கனடா தேசம் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் வெற்றிகண்டுள்ளது என்றே கூறவேண்டும். கனடா உலகின் சமஷ்டிகளுள் பழமையானது. அது உறுதியான ஒரு சமஷ்டியாக நிலைத்துள்ளது. பன்மைத்துவத்தின் பலபரிமாணங்களையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் வல்லமையுடைய சமஷ்டியாக அது விளங்குகிறது. கனடா பன்மைத் தேசியங்களின் நாடாக இருந்து வருவதோடு கியுபெக் பகுதியில் எழுந்த தனித்தேசி...

மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் சமூக – பொருளாதார மேம்பாடும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி 14.09.2022

இலங்கையில் கடந்த நான்கு தசாப்தகாலப்பகுதியில் ஏனைய சமூகங்கள் மூன்றாம் நிலைக்கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளன.  எழுபதாம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த எமது சகோதர முஸ்லிம் சமூகம், சமூக உணர்வுமிக்கதும் தொலைநோக்கு கொண்டதுமான அதன் அரசியற்தலைவர்கள் மேற்கொண்ட காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக, தொடர்ந்துவந்த காலப்பகுதியில் பாடசாலைக்கல்வியில் துரிதமாக முன்...

வனவளமும் வன முகாமைத்துவமும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் 13.09.2022

நிலப்பயன்பாட்டின் அடிப்படையில் 1,888,607 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில், வடமாகாணம் 889,007 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் கிழக்கு மாகாணம் 999,600 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் கொண்டிருக்கின்றது. இந்த வகையில் கிழக்கு மாகாணம் அதிக நிலப்பரப்பை கொண்டிருப்பதுடன் நீர்ப்பரப்பு என்ற வகையில் வடமாகாணத்தில் 8% நீர்ப்பரப்பும் கிழக்கு மாகாணத்தில் 6.35 சதவீதமுமாக மொத்தமாக இவ்விரு மாகாணங்களிலும்...

உலகையே அடிமையாக்கிய இலங்கைத் தேயிலை | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன் 12.09.2022

உலகிலேயே மிகச்சிறந்த தேயிலை இலங்கை தேயிலை என்ற பெயரைப் பெற்றுக்கொள்ள ஜேம்ஸ் டெய்லரின் பங்களிப்பும் உழைப்பும் மிக மகத்தானதாக இருந்தது என்றாலும் இந்த நிலையை அடைவதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதற்குக்  காரணம் இலங்கைத் தேயிலைக்கு முன்னதாகவே சீன, இந்திய தேயிலைகள் உலக சந்தையை மிக வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தமையாகும். 1885 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தேயிலை  கொள்வன...

பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்ஷி கபிலன் 10.09.2022

‘இயற்கை’, ‘இயல்பு’ என்ற வரையறைக்குள் அடங்காதவைகளை சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இயற்கையானது மற்றும் இயல்பானது என்பவைகளை யார் தீர்மானிக்கிறார்கள்? எதிர்பால் காதலைக் கொண்டாடுகின்ற இந்தச் சமூகம், குயர் மக்களின் காதலையும் அழகியலையும் இயல்பாகவாவது பார்க்கப் பக்குவப்படவேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்றைய காலகட்டத்தில் பால்நிலை சார்ந்த மாற்றுச் சிந்தனைகளின் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. இலங்கை போன...

பெரும்பான்மை சனநாயகம் பெரும்பான்மைத்துவம் அற்ற அரசை உருவாக்காது: சிலி தரும் பாடம் | சட்டம் அறி | சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் 09.09.2022

இலத்தீன் அமெரிக்க நாடான சிலியில் அண்மையில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பங்கோடல் தொடர்பாகவும் அது இலங்கையினுடைய இனப்பிரச்சினை சார்ந்தது அரசியலமைப்பு சீர்திருத்தம் சார்ந்தும் என்ன படிப்பினைகளை வழங்குகின்றது என்பது தொடர்பாக சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார். #Chile #Chilenewconstitution #ProgressiveConstitution #WorldNews #chilerefe...

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 3 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் 09.09.2022

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 3 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் கட்டுக்கரையின் பண்பாட்டுத் தொன்மையையும், தொழில்நுட்பச் சிறப்பையும் அடையாளப்படுத்திக் காட்டுவதில் அங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் சிறு கைத்தொழிற்சாலைகளுக்கு முக்கிய இடமுண்டு. தென் தமிழகத்திலும், இலங்...

மருந்தாகும் மசாலாப் பொருள்கள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம் 08.09.2022

கடுகு, பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதலான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மாருக்குப் பாற்சுரப்பை ஊக்குவிக்கும். மூல வியாதியைத் தவிர்க்கும். சமையலுக்குத் தாளிதம் செய்வதற்கு உதவும். பொதுவாக ஹோர்மோன் சமநிலை பிறழ்வு காரணமாக இளம் வயதுப் பெண்களுக்கும் நடுவயது கடந்த பெண்களுக்கும் மாதவிலக்கின்போது கூடுதலாக இரத்தம் வெளியேறுவதுண்டு. இதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மூலிகைக...

டி.எஸ். சேனநாயக்காவும் ஜி.ஜி.பொன்னம்பலமும் | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் 07.09.2022

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் 1947ம் ஆண்டு இடம்பெற்றது. பாராளுமன்றத்திற்கான 100 ஆசனங்களில் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களை வென்றது. டி.எஸ்.சேனநாயக்காவின் சமயோசித நடவடிக்கையினால் சுயேட்சை வேட்பாளர்களை தம்பக்கம் இழுத்து அரசாங்கத்தினை அமைத்துக்கொண்ட போதும் ஒரு நிச்சயமற்ற அரசாங்கமாகவே டி.எஸ்.சேனநாயக்காவின் அரசாங்கம் காணப்பட்டது. டி.எஸ்.சேனநாயக்க...

தோட்டத் தொழிலாளர்களும் அதிகார வர்க்கத்திற்கெதிரான முரண்பாடுகளும் | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன் 06.09.2022

மலையக மக்களின் வாழ்வியல், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்றவை பற்றி எல்லாம் ஆராய்ந்த ஆய்வாளர்கள் "ஏன் இந்த மக்கள் கூட்டத்தினர் தம்மை நசுக்கி, அடக்கி, ஆளுகின்றவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழவில்லை" என்று வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு துன்ப துயரங்களையும் பொறுமையாக சகித்துக் கொண்டு எவ்வாறு இவர்களால் இவ்வளவு நீண்ட காலம் வாழ முடிந்தது என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை காணவும் முயன்ற...

18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : வர்த்தகமும் முயற்சியாண்மையும் சமூக உயர்ச்சியும் | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 05.09.2022

சமூகப்பிரிவுகள் சமூகப்படிநிலையில் உயர்ச்சியடைதல் என்னும் சமூக அசைவியக்கத்திற்கான (Social Mobility) வழிகளில் வர்த்தகமும், முயற்சியாண்மையும்(Entrepreneurship) முக்கியமானவை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வர்த்தகம், அதனோடு தொடர்புடைய வட்டிக்குப் பணம் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் மரபுவழியாக ஈடுபட்டுவந்த சமூகப்பிரிவினர் மிகச் சிறிய எண்ணிக்கையினராக இருந்தனர். இதனால் இச்சிறிய வர்த்தக சமூகப்பிரிவு வேளாளர்களுக்கு...

வழமையாக வீட்டில் செய்யும் பொருள்களிலிருந்தே உற்பத்திகளை ஆரம்பித்தோம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | நடராசா ரஞ்சிதமலர் 04.09.2022

ரஞ்சி உற்பத்தி நிலையத்தை 2010இலிருந்து நடத்தி வருகின்றேன். தற்போது சத்துமா, ஒடியல் மா, வல்லாரை மா உட்பட 35 விதமான உற்பத்திகளை செய்து வருகின்றோம். அவற்றில் சத்து மாவுக்கே அதிக கேள்வியுள்ளது.  கொரோனா தொற்று மற்றும் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடியால் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு போதுமான கேள்வி இருந்தாலும், மூலப்பொருள்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கலால் ப...

யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவத்தின் வெற்றிக்கு வித்திட்ட மருத்துவர் கிறீன் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 03.09.2022

கடந்த நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத் தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்ட அந்நிய தேசத்தவர்கள் பலர் இருந்தார்கள்; யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து தன்னலமற்ற பணியாற்றி தமிழர்களின் மனதிலே இடம்பிடித்த மருத்துவத்துடன் தொடர்புடைய மறைந்துபோன இருவரை இங்கே மீள நினைவூட்டுகின்றேன். ஒருவர், வடமாகாணம் என்று அழைக்கப்பட்ட அன்றைய யாழ்ப்பாண பிராந்தியத்தின் பிரித்தானிய குடியேற்ற நாட்டுப் பிரிதிநிதி, சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக்....

அரிசிசார் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள் | மாறுபாடில்லா உண்டி | தியாகராஜா சுதர்மன் 02.09.2022

சோறு, நெற்பொரி, அவல், கஞ்சிவகைகள் போன்று அரிசி மாவில் இருந்து பல்வேறு வகையான அரிசி சார்ந்த உணவுகள் நமது பாரம்பரியத்தில் காணப்படுகின்றன. அரிசிக்கூழானது பித்த மாறுபாட்டால் ஏற்படும் நோய்நிலைகளையும், தலையில் நீர் கோர்த்து ஏற்படும் உபத்திரவங்களையும் மாற்றும்.  புளிச்சாதம் உண்டால் மேக ரோகங்கள் இல்லாது போகும். ஆனால் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது வயிற்றுப்புண், பீனிசம் என்பவற்றை உருவாக்கும். மேக ரோகம்...

Άκου το podcast எழுநா στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS