Ezhuna

எழுநா

Society TA ↓ Επεισόδια: 949

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Δημιουργός

Ezhuna

Κατηγορία

Society

Ιστοσελίδα του podcast

ezhunaonline.com

Τελευταίο επεισόδιο

29 Μαϊ 2025

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android σχεδόν 10 εκατ. λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் 14.12.2022

வவுனியா வடக்கில் நெடுங்கேணியின் தென்னெல்லையில் உள்ள பெரியமடு பிரதேசத்தின் நயினாமடு கிரமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட கோடலிபறிச்சான் என்ற காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. இவ்விடத்தை  இங்குள்ள சிறிய நடைபாதையில் இருந்து அடர்ந்த காடுகள் ஊடாக நீண்ட நேரக் கால்நடைப் பயணத்தின் பின்னரே அடையமுடிந்தது. இவ்விடத்திற்கு மிக அருகில் பாழடைந்த சிறிய கேணியொன்று காணப்படுகின்றது. அக்கேணியைச் சுற்றி பொழிந்த வெள்ளைக...

இலங்கையின் பாலுற்பத்தியும் கால்நடை உணவுகளும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. S. கிருபானந்தகுமாரன் 13.12.2022

மாடு ஆடு போன்ற கால்நடைகள் இயற்கையில் கிடைக்கும் புற்களை செரிமானம் செய்யத் தக்க உணவுக் கால்வாய் தொகுதியை கொண்டவை. குறிப்பாக அவற்றின் அசையூன் இரப்பையில் உள்ள நுண்ணுயிர்கள் [Rumen microbes] புற்களில்  உள்ள நார்ச்சத்தையும் [fiber]  ஏனைய உயிர்ச்சத்துகளையும் சமிபாடடையச் செய்வதன் மூலம் தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கின்றன. ஆரம்ப காலத்தில் மாடுகள் முற்று முழுதாக புற்களையும் மர இலைகளையும் செடிக...

மதமும் மரபினமும் இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் இன மரபும் | பண்பாட்டுச் சமூகவியலும் | ஜிஃப்ரி ஹாசன் 11.12.2022

இலங்கை முஸ்லிம்கள் ஒரு பன்மையான இனக் கலப்பைக்கொண்ட முஸ்லிம் என்ற மத அடையாளத்தினூடே ஒரு புள்ளியில் இணைந்த இனம் என்பதையும், அவர்களை மரபினரீதியாக முழுமையாக அரபு வேரோடு தொடர்புறுத்த முடியாது என்பதையும் மரபணுவியல் ஆய்வுகளை முன்வைத்து முதலாம் அத்தியாயத்தில் விவாதித்திருந்தேன். தவிர, அவர்களின் இனத்துவ மூலமானது இந்திய-இலங்கைத் தன்மையுள்ள இனத்துவ மரபை, பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கொண்டிருப்பதையும் எடுத்துக்க...

கனடாவின் பழங்குடி மக்கள் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம் 08.12.2022

ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்ற இரு நாடுகளையும் போன்றே கனடாவும், குடியேறிகள் பெரும்பான்மையினராக அமைந்த குடியேறிகள் சமூகம் (Settler Society ) ஆகும். குடியேறிகள் சமூகங்கள் உள்ள நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர் சுதேசிகளான பழங்குடியினரை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு துரத்தி விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளினர். 1763ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசுப் பிரகடனத்தில் சுதேசிகளுக்கும் ஐரோப்பியர்களுக்குமிடையிலா...

வணிக எழுச்சி தொடக்கி வைத்த சமூகமுறைமை | தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன் 07.12.2022

“தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” எனும் பேசுபொருளின் முதல் தளமாக “திணை வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு” பற்றிப் பேசி வருகிறோம். இதுவரை பேசப்பட்டு வரும் ‘வர்க்கங்கள் உருவாகிய போது ஏற்பட்ட அவசியம் காரணமாக அரசு தோற்றம் பெற்றது’ என்பதற்கு மாறுபட்ட விடயமாக இங்குள்ள பேசு பொருள் அமைந்துள்ளது. இவ்வகையிலான புதிய தொடக்கம் ஒன்றையும் அதன் தொடர்ச்சியாக மாற்று வடிவிலான இயக்கப் போக்கையும் தமிழ்ப் பண...

கொத்தடிமை முறைமைகளும் எதிர்க்குரல்களும் | கண்டி சீமை | இரா.சடகோபன் 06.12.2022

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதற்காக கல்விகற்ற இலங்கையர்கள்  உரத்துக் குரல் கொடுத்திருந்தனர். இதற்கு முன்னர், ஆளுநரிடமும், படைத்தளபதிகளிடமும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கரங்களிலும் இருந்த அரசியல் அதிகாரங்கள் இப்போது  மக்கள் பிரதிநிதிகளிடமும் செல்ல ஆரம்பித்தன. ஆரம்பத்தில் 1832 ஆம் ஆண்டில் கோல்புறூக் - க...

தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்த அமெரிக்கர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 06.12.2022

மருத்துவர் கிறீன், தமிழில் விஞ்ஞானம் அறிமுகமாகாத காலத்தில் ஆங்கில மருத்துவத்தைத் தமிழிற் கற்பித்தவர்; தமிழில் விஞ்ஞானந் தந்த தந்தை; மருத்துவத் தமிழ் முன்னோடி; தமிழ்க் கலைச்சொல்லாக்க முன்னோடி என்று தமிழறிஞர்களால் விதந்துரைக்கப்படுகிறார். “தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க முடியுமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு இருந்தது. தமிழர்களுக்கே தமிழ்மொழி மீதிருந்த நம்பிக்கையிலும் பார்க்க அமெரிக்க நாட்டவரான மருத்துவர் கிற...

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் பருப்பு வகைகள் – பகுதி 2 | மாறுபாடில்லா உண்டி | Dr தி.சுதர்மன் 04.12.2022

கடலை - வயிறு ஊத வைக்கும், அஜீரணத்தை உண்டாக்கி குடலை வலித்து மலம் போக்கும். மருந்தை முறிக்கும். ஆதலால் மருந்துண்ணுங்காலத்தில் கடலை உண்ணலாகாது. மருந்துக்கு அபத்தியமாகும். சோர்வையுண்டாக்குவதுடன் வாயுவையும் அதிகரிக்கும். கொள்ளானது குடல் வாதத்தையும் (குடல் முறுக்கல்) குன்மத்தையும் (வயிற்றுப்புண்) உண்டாக்கும். உட்கொள்ளும் மருந்துகளை முறிக்கும். பித்தம் அதிகரிக்கும். எனவே கொள்ளினை உடல்மெலிவுக்கென நீண்டகா...

பட்டினியும் விவசாயப் புரட்சியும் | இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் | கந்தையா பகீரதன் 01.12.2022

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி, பஞ்சம், இயற்கை அழிவு, போர், நாடுகளுக்கு இடையிலான போட்டி இவை அனைத்தும் மனிதக் குடித்தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட விளைவுகளே. இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் COVID-19 வந்ததே மக்களை அழித்து உலகை சமநிலைப்படுத்தவேயாகும். நாம் எமது விஞ்ஞான முன்னேற்றத்தால் தடுப்பூசி போட்டு கொவிட்டைத் தடுத்துவிட்டோம் என நினைத்து யாரும் சந்தோசப்படக்கூடாது. இன்னும் பல பேரழிவுகள் பூமிய...

மூலிகை மருந்துகள் – பகுதி 3 | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம் 30.11.2022

ஆயுள்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளுள் கடுகுரோகிணியும் ஒன்று. ஈரல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சட்காமாலை (செங்கமாரி) அலேர்ஜி ஆஸ்த்மா போன்ற நோய்களின் சிகிச்சையில் பெரிதும் பயன்படும் இம்மூலிகை, அருகிவரும் தாவர இனங்களுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனைத்திப்பிலி ­ - தோல்வியாதிகள் ஆஸ்த்மா வயிற்றோட்டம் நீரிழிவு என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகி...

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : பாளி சிங்கள இலக்கியங்கள் | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன் 29.11.2022

கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும். புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப்...

யாழ்ப்பாணக் குயர் விழா: சூழலியலும் குயர் மக்களும் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்சி கபிலன் 28.11.2022

குயர் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் சமூக ஏற்பையும் நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் மற்றும் குயர் நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல்வேறு தளங்களிலும் குயர் மக்கள் தமக்கான வெளிகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை நோக்கியே நகரசெய்கின்றன. இலங்கையின் முதலாவது சுயமரியாதை நிகழ்வு (Pride Event) 2005 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தாஜ்சமுத...

தமிழ் குடும்பத் தலைவன் குட்டன் பற்றிய சேருவில கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம் 27.11.2022

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. சேறுவில்லு எனும் பெயரே செருவில என திரிபடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விடத்தைச் சுற்றி சேறு நிறைந்த பல வில்லுக் குளங்கள் இருந்ததாகவும், இதன் காரணமாக இப்பெயர் உருவானதாகவும் தெரிகிறது. பண்டைய காலத்தில் இது “சேறுநகரம்” எனப் பெயர் பெற்று விளங்கியது. சிங்கள மொழியில் இது “ச...

யாழ். போதனா மருத்துவமனையின் தோற்றமும் மருத்துவர் கிறீனும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 24.11.2022

சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். டைக் 01.10.1829 அன்று யாழ்ப்பாணத்தின் கலெக்டராகப் பதவியேற்றார். கோல்புறூக் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கலெக்டர் பதவி அரசாங்க அதிபர் பதவி எனப் பெயர் மாற்றப்பட்டது. கலெக்டராகப் பதவி வகித்த டைக் 01.10.1833 அன்று யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகப் பதவியேற்றார் டைக் அவர்களது மனதில் யாழ்ப்பாணத்திலே ஒரு பொது...

பக்கவாட்டுச் சிந்தனைகள் மூலம் முக்கிய சிக்கல்களை தீர்ப்பது (Using Lateral Thinking to Solve Important Problems) | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | ரூபன் கணபதிபிள்ளை 23.11.2022

என்பதாக அர்த்தப்படாது. அது அறிவியல் பாதி, செய்கலை பாதி கலந்து செய்த நுட்பத்தினூடாகவே புதிய சிந்தனைகளும், அதன் வழியே புதிய தொழில்களும் பிறப்பெடுக்கின்றன. அப்படியான புதுமைகளுக்கு அடிநாதமாக இருப்பதுதான் பக்கவாட்டுச் சிந்தனை(Lateral Thinking). இந்தப் பக்கவாட்டுச் சிந்தனையால் வென்றவர்கள் வரிசையில் வாழும் உதாரணமாக இருப்பவர்,  உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அமேசான் (Amazon.com) நிறுவனத்தின்...

இலங்கையின் பாலுற்பத்தித் துறை சந்திக்கும் சவால்கள் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன் 23.11.2022

  இலங்கையிலுள்ள பசு மாடுகளும் எருமை மாடுகளும் அதிகளவு உள்ளூர் வகையை சேர்ந்தவை. அவற்றின் சாராசரி உற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும்.  இந்த மாடுகளைக்  கொண்டு எதிர்பார்த்த பாலுற்பத்தியை பெற்று தன்னிறைவு காண முடியாது. அதிக பாலுற்பத்தியைக் கொண்ட மாடுகளை பெற இரண்டு வழிமுறைகள்தான் உள்ளன. ஒன்று நல்லின மாடுகளை இறக்குமதி செய்ய வேண்டும். இந்த முறையில் பல தடவைகள் மாடுகள் இறக்குமதி செய்ய...

மக்களுக்காக குரல் கொடுத்த மணிலாலும், நாடு கடத்திய காலனித்துவ அரசும் | கண்டிசீமை | இரா.சடகோபன் 22.11.2022

இந்திய வம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் ஸ்தாபனப்படுவதற்கு முன்னரே அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பிலும், சர்வதேச ரீதியாகவும் பலமாக குரல் எழுப்பப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இலங்கையில் மாத்திரம் அன்றி பல்வேறு உலக நாடுகளிலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி பல்வேறு அமைப...

இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் : இன மரபும் பண்பாட்டுச் சமூகவியலும் | இலங்கை முஸ்லிம்கள் : இனத்துவ மரபும் சமூகவியலும் | ஜிஃப்ரி ஹாசன் 21.11.2022

இலங்கை முஸ்லிம்கள் என முன்பு அறியப்பட்டவர்கள் யார்? இந்த முஸ்லிம் என்கிற இன அடையாளத்துக்குள் பெரும்பான்மையாக இருக்கும் இனக்குழுமம் எது எனப் பார்த்தால் அது இலங்கைச் சோனகர்தான். இலங்கையில் முஸ்லிம் அடையாளத்துக்குள்ளிருக்கும் இனக்குழுமங்களில் இலங்கைத் தன்மையையும், பூர்வீகத்தையும் சோனகரிலேயே காண முடியும்.  இந்த ‘சோனகர்’, ‘முஸ்லிம்’ போன்ற இனப்பெயரிடலே பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் நோக்கங்...

எண்மிய மரபுரிமை : அவசியமும் அவசரமும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 18.11.2022

எண்மிய மரபுரிமை என்பது பண்பாட்டு மரபுரிமை மற்றும் இயற்கை மரபுரிமையை புரிந்துகொள்ளல், பாதுகாத்தலில் எண்மியத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மூலமாக உருவாக்கப்படும் மரபுரிமையாகும். சிலபோதிலது எண்மிய பண்பாட்டு மரபுரிமை (digital cultural heritage), எண்மிய இயற்கை மரபுரிமை (digital natural heritage)  எனவும் இரண்டாகப் பிரித்து நோக்கப்படுவதுமுண்டு. “இது பண்பாடு, கல்வி, அறிவியல் மற்றும் நிர்வாக வளங்கள் ம...

தேயிலைத் தோட்டங்களிலே பெண்களது பின்தங்கிய நிலை | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி 17.11.2022

பெண்களது கடந்தகால - நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர்தினம் (International Women’s Day) முதன்முதலாக 1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலமுடிவில் 2011ஆம் ஆண்டு அது நினைவுகூரப்பட்டதோடு, ஒவ்வொரு வருடமும் அதேதினத்தில் பூகோளரீதியாகத் தொடர்ந்து அது கொண்டாடப்பட்டும் வருகிறது. அவ்வாறு கொண்டாடப்படும்போது ஏதாவதொரு முக்கிய விடயத்தைக் கருப்பொருளாக வைத்தே அத்தினம...

திருகோணமலை திருமங்கலாய் காட்டுப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பரமு புஸ்பரட்ணம் 16.11.2022

இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில்  இந்து மதமும். அம்மதம் சார்ந்த  ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன.  அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது போர...

கோல்புரூக் – கமரூன் அரசியல் சீர்திருத்தம் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | பி.ஏ. காதர் 13.11.2022

1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஜெர்மி பெந்தம் (Jeremy Bentham) மற்றும் ஜேம்ஸ் மில் (James Mill) ஆகியோரால் அப்போது முன்வைக்க...

வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு - பகுதி 2 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 11.11.2022

வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி  குறித்த நுண்ணாய்வு -  பகுதி 2 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் பருப்பு வகைகள் – பகுதி 1 | மாறுபாடில்லா உண்டி | தியாகராஜா சுதர்மன் 09.11.2022

உளுந்து, சிறுபயறு, பயறு, கடலை, காராமணி (கௌபி), துவரை, கொள்ளு, எள் என்பன பொதுவாக எமது பாரம்பரிய உணவுகளில் பாவிக்கப்படும் பருப்பு வகைகளாகும். இவற்றைவிட மொச்சை, பட்டாணி, பொட்டுக்கடலை போன்று வேறுவகை பருப்புவகைகளும் பாவனையில் இருந்துவருகின்றன.

மூலிகை மருந்துகள் பகுதி 2 | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால. சிவகடாட்சம் 08.11.2022

வாய்விளங்கத்தின் மிக முக்கியமான மருத்துவப்பயன் ஒன்றை இரசவர்க்கம் குறிப்பிடத்தவறிவிட்டது. நாடாப்புழு (tapeworm) ,கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்களுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. உலகப்பிரசித்திபெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செற்’ (The Lancet) 1887 ஆம் ஆண்டிலேயே நாடாப்புழுவுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகப்பயன்படக்கூடியது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

Άκου το podcast எழுநா στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS