Geetha Balachandar
தமிழ் காதலி (Tamizh Kadhali)
"வணக்கம் நண்பர்களே! தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு வடிவங்களோடு அவற்றின் பொருண்மைகளையும் விவாதிக்கும் களம் இது. அறிவார்ந்த தேடலில் அகம் மகிழ்ந்து இணைவோம்!""Greetings friends! This is a space dedicated to discussing the diverse genres and deep meanings of Tamil literature. Let's connect with happy hearts on this soulful journey of intellectual discovery!"https://whatsapp.com/channel/0029VbCdIKd3AzNR8sJOro2a-
Autor
Geetha Balachandar
Kategorie
Podcast-Website
Neueste Folge
8. Jul 2026
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
நாணம் துறந்த காதல்: மரபுகளை மீறிய மடல் (The Love That Defied Shame: The Act of Madal) 08.07.2026 16:54
காதல் கை கூடாதபோது, ஒரு ஆண் தன் மானத்தையும் நாணத்தையும் துறந்து வீதியில் நிற்பது, அது வீழ்ச்சியா அல்லது வாழ்வின் மிக உயர்ந்த நிலையா? குறுந்தொகையின் 182-ஆம் பாடல், காதலன் தன் தலைவிக்காக எத்தகைய எல்லைக்கும் செல்லத் துணிந்திருக்கிறான் என்பதைப் பேசுகிறது. சமூகம் சுட்டிக்காட்டும் இகழ்ச்சியைத் தன்னுள் தாங்கிக்கொண்டு, பித்தனாகத் திரியும் அந்தத் தருணத்தில் காதல் ஒரு தவம் ஆகிறது. அந்தத் தவத்தின் வீரியத்தைய...
உறங்க மறுக்கும் விழிகள் : ஒரு காதலின் கதறல் (Sleepless Eyes: A cry of despair) 01.07.2026 13:23
"முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்..." - காதலின் தனிமை எவ்வளவு கொடியது என்பதை சங்க இலக்கியம் இவ்வளவு அழகாகச் சொல்லுமா? உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தன் காதலன் பிரிவால் வாடும் தலைவி, அந்த அமைதியான இரவில் எப்படித் தவிக்கிறாள் என்பதை உணர்த்தும் வரிகள் இவை. காற்று கூட அவளை வருத்த, அவள் விழிகள் உறக்கத்தைத் துறந்து தவிக்கின்றன. ஒரு பெண்ணின் மென்மையான அதேசமயம் வலிநிறைந்த அந்தத் தவிப்பை, இன்றைய காலத்தி...
காலில் விழுந்த துரோகம்: காதலா? நாடகமா? (Betrayed at Her feet:Love or Drama) 24.06.2026 20:00
அன்பின் பெயரால் அரங்கேறும் பொய் நாடகங்கள்! 🎭 காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல; அது செயல்களில் வெளிப்படும் உண்மை. ஆனால், தன் தவறை மறைக்க ஒருவன் தன் துணையின் காலடியில் விழுந்து கெஞ்சுவது—அது உண்மையான வருத்தமா? அல்லது அடுத்தமுறை தவறு செய்வதற்கான கால்கோள் விழாவா? கலித்தொகையின் சங்க கால வரிகள் பேசும் அதே நிதர்சனம், இன்றும் நம் நவீன காதலிலும் தொடர்கிறது. தன் மார்பில் படிந்திருந்த சந்தனம் அவன் செய்த...
பிறவிப் பெருங்கடலும் பிரியாத காதலும் ( The ocean of Births and Undying Love) 17.06.2026 12:57
"இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை..." ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சங்க இலக்கியத் தலைவி ஒருத்தி தன் காதலனிடம் முன்வைத்த அந்த உன்னதமான வேண்டுதல் என்ன? இந்த பிறவியில் மட்டுமல்ல, இனிவரும் பல பிறவிகளிலும் நீயே என் கணவனாக இருக்க வேண்டும், உன் நெஞ்சில் நிறைந்தவளாக நான் இருக்க வேண்டும் என்ற அந்த அழியாத காதலின் ஆழத்தை சங்கத் தமிழ் வரிகளோடு இன்றைய எபிசோடில் அலசுகிறோம். பிறவிகள் கடந்தும...
காதலை அளக்க முடியுமா? (Can Love be Measured) 10.06.2026 14:13
மனிதன் அறிவியல் துணை கொண்டு விண், மண், நீர் என இயற்கையின் பொருண்மைகளை அளந்து அறிந்தான். ஆனால், சங்க காலத் தலைவியோ தன் காதலின் பிரமாண்டத்தை உணர்த்த, நிலம், நீர் மற்றும் கடல் ஆகியவற்றின் அளவீடுகளைக் கையாளுகிறாள். இந்த அளவீடுகளால் காதலையும் அதன் பிரமாண்டத்தையும் உண்மையில் அளக்க முடியுமா? விடை அறிய "தமிழ் காதலி" (Tamizh Kadhali) பாட்காஸ்டின் இந்த முழு எபிசோடைக் கேளுங்கள்! 🎧 உங்கள் காதலை எதனோடு ஒப்...
சாம்பலான பேரறிவு : யாழ்ப்பாணத்து ஏட்டுச்சுவடிகள் (The Ashes of Tamil Wisdom: Jaffna Library 03.06.2026 11:10
95,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... ஈழத்தின் ஆகச்சிறந்த அறிவுப் பொக்கிஷம்... ஒரே இரவில் சாம்பலாக்கப்பட்ட கொடூரம்! 1981-ல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது, உண்மையில் அங்கே என்ன நடந்தது? அது ஏன் வெறும் 'தீ விபத்து' அல்ல, ஒரு 'இனஅழிப்பு' என்று அழைக்கப்படுகிறது? வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்கிறோம்!" "More than 95,000 books... the grandest re...
தும்பியிடம் சென்ற வழக்கு (The case of the Wandering Bee) 27.05.2026 14:52
"பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? அல்லது சூடும் பூக்களால் மட்டுமே மணம் வருகிறதா?" — இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியத்தில் கிளம்பிய இந்த சுவாரசியமான விவாதம், இன்றும் நம் திரையிசைப் பாடல்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இறைவனே நேரில் வந்து வாதாடிய குறுந்தொகையின் 2-வது பாடலான "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி..." பாடலையும், அதன் நீட்சியாக நம் மனதைக் கவர்ந்த மூன்று நவீன...
இதயத்தில் வழியும் முள்ளிவாய்க்கால் குருதி (The Blood of MULLIVAIKKAL that flows in the heart) 20.05.2026 14:52
வேர்களில் தொடங்கி இதயத்தின் நாடி நரம்புகள் வரை வழியும் முள்ளிவாய்க்கால் குருதி, காலங்கள் கடந்தாலும் தமிழினத்தின் வரலாற்றில் அழியாத வடுவாகவே இருக்கும் என்பதை இந்த எபிசோட் ஆழமாகப் பதிவு செய்கிறது. துயரின் உச்சம் அறிவதோடு தற்காக்கும் சூழலின் அவசியம் மற்றும் சுயத்தை இழந்திடக் கூடாது என்பதையும் அழுத்தமாக உரக்க கூறுகிறது உங்களின் தமிழ் காதலி. துயரத்தின் 6-வது அத்தியாயம் இப்போது உங்கள் செவிகளில்... --...
காதல் வழு: மௌன சாட்சியும் தீராத தவிப்பும் (A Love Flaw: The Mute Witness and Unending Anguish) 13.05.2026 13:03
குறுந்தொகை 25- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ (திரையிசை) ஒப்பீடு அன்று, யாரும் இல்லாத இடத்தில் அந்தத் தினைத்தாள் நாரை மட்டும் சாட்சியாக நிற்க, தன் காதலனின் பொய்யால் கலங்கி நின்றாள் ஒரு சங்க காலப் பெண். இன்று, முத்துமழை கொட்டித் தீர்த்தாலும், தீராத தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நவீனக் காதல். இந்த இரண்டு காலங்களையும் இணைக்கும் அந்த 'ஏமாற்றம்' மற்றும் 'தவிப்பு' பற்றித்தான் இன்று நாம் பேசப்போக...
நிலவால் கொண்டாட்டமா? திண்டாட்டமா? (Moonlight: A celebration or a frustration?) 06.05.2026 10:45
"நல்லை அல்லை நெடுவெண்ணிலவே"- குறுந்-47. அன்றிலிருந்து இன்றுவரை காதல் மொழிகளில் தலைவிக்கு இணையாகவும்,தனிமையில் வாடும்போது நினைவலைகளை மிகுவித்து உயிர்வரைச் சுடும் தன்மையோடும் நிலவு விளங்குவதை விளக்கும் இப்பதிவு “You are not kind, O endless white moon!” - Kurunthogai 47. From ancient times to the modern day, the moon has stood as a true counterpart to the heroine in the vocabulary of love. This pos...
மௌன மொழி- The unspoken message of Sangam literature." 29.04.2026 12:02
அன்புள்ளோர் மத்தியில் வார்த்தைகளுக்கு இடமில்லை. மௌன அசைவுகளுக்கு உள்ள வலிமை வார்த்தைகளுக்கு இல்லை. இதை உணர்த்துகிறது அகநானூற்றின் ஐந்தாம் பாடல் அறிந்து கொள்ள வாருங்கள்!😍 "In the presence of true lovers, words lose their meaning. Words can never match the sheer power of silent expressions. This is exactly what the 5th poem of Akananuru portrays. Come, discover it! 😍"
காதல் எனும் குறும்பு (The mischief called love) 22.04.2026 13:35
சின்னச் சின்ன சண்டைகள்... அதைத் தொடர்ந்து வரும் ஒரு குட்டி குறும்பு! இதுதானே காதலோட மெயின் பிக்சரே? 😉 "Tiny arguments... and then comes a sweet little prank! That’s the whole essence of love, isn't it? 😉" Tag your Naughty partner 👩❤️👨 😉❤️✨ #Tamilpodcast#Tamillovestories #Tamilliterature
கண்ணியம் நிறைந்த காதல் (Dignified love) 15.04.2026 8:25
நற்றிணை 172 ம் பாடல் - "புன்னை மரத்தைத் தங்கையாகக் கருதிய தலைவியின் கதை" ( The tale of the heroine who cherished the Punnai tree as her own sister (From Natrinai, Poem 172).
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet