rams

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Society TA ↓ 200 Folgen

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

Autor

rams

Kategorie

Society

Podcast-Website

podcasters.spotify.com

Neueste Folge

8. Jun 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

122. ரி - அ முத்துலிங்கம் 16.04.2020

இந்த இலங்கை எழுத்தாளரின் மற்றுமொரு நல்ல கதை. முதுமை அடையும் மாடு கசாப்புக் கடைக்கு அனுப்பப்படுகிறது. பாசமாய் இருக்கும் சிறுமி வத்சலாவிற்குத் தெரியாமல். அவளுடைய நண்பன் தான் கதைசொல்லி. அபூர்வமான ராகத்தில் ஒன்றிப் பாடும் பாட்டு வாத்தியார். அந்த மார்க்க ஹிந்தோள ராகம் மனோரஞ்சிதப் பூவைப் போல. கேட்கவர் மனநிலைக்கு ஏற்ப ஆனந்தமாகவும் சோகமாகவும் அமைதியாகவும் ஒலிக்கும் ராகம். அதிலும் திரும்பி வராத ரிஷபம். கதை...

121. மீன்சாமியார் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம் 14.04.2020

பலமுறை வியந்ததுண்டு எப்படிச் சில சாமியார்கள் "சக்தி" படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்று. பக்தர்களே அந்த சக்தியை அளிக்கிறார்கள் என்ற ஒரு வேறுபட்ட புரிதலைக் கொடுக்கிறது இந்தக் கதை. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் . அவரது ஒரே ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. அவரது பூர்வீகம், உறவினர்கள் எதைப்பற்றியும் தகவல் இல்லை.  1901 ல் மதுரையில் பிறந்தவர். காந்தியின் அழைப்பை ஏற்று வேலையை...

120. தரிசனம் - கு.அழகிரிசாமி 12.04.2020

வாழ்க்கை காட்டும் பல காட்சிகளில் வெகுசில மட்டுமே தரிசனமாய் தெரிகிறது. அப்படியான தரிசனங்கள் கிடைக்கப் பெறுபவரை காண்பது கூட ஒரு தரிசனம்தான். வாழ்ந்து கெட்ட ஒரு அநாதை கிழவர். திண்ணையில் ஒரு ஓரத்தைக் கொடுத்த உரிமையில் அவரை இழிவுபடுத்தும் கணவன் மனைவி. ஒண்டிக்கொள்ள வரும் இன்னொரு அநாதைச் சிறுவன். பசியால் துடிக்கும் குஞ்சுகளைக் கண்டு செய்வதறியாது பரிதவிக்கும் குருவி. இவர்கள் தான் கதைமாந்தர்கள்.

119. தேள் - க.நா.சு 11.04.2020

இப்படியும் நடக்குமா? இது உண்மையா? என்ற கேள்விகளின் பதிலை வாசகர் கையில் விட்டுவிடுகிறார் க.நா.சு. நீங்கள் சார்ந்திருக்கும் நிலைப்பாட்டைப் பொருத்து கதையின் முடிவை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். . .

118. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை 09.04.2020

ஒரு பெண் வளரும் குடும்பச் சூழ்நிலையிலேயே அவளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அவளை எந்த அளவுக்குப் பாதிக்கச் செய்கிறது என்பதை இந்தக் கதை பேசுகிறது. சிறுமி ஒருத்தி வயதுக்கு வருகிறாள். அப்போது அவளுடைய தாய் ஊரில் இல்லை. உடலில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டு அச்சமடைகிறாள். அதற்குப் பிறகு தனக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டு வியப்படைகிறாள். ஊரிலிருந்து வரப்போகும் தாயிடம் தனக்கு ஆதரவு கிடைக்கும்...

117. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன் 07.04.2020

பலரால் அறியப்படாத மற்றுமொரு அருமை எழுத்தாளர் நகுலன். இந்த சின்னஞ் சிறிய கதையில் பொதிந்திருக்கும் பலப்பல விஷயங்கள். . .தொடர்பில்லாத உரையாடல்கள் போல இருப்பவை திடீரென்று இணைந்து கொள்ளும் சாத்தியம் உங்கள் கையில் தான் இருக்கிறது. . .

116. கன்னிமை - கி.ரா 05.04.2020

மண் மணம் கமழும் இந்தக் கதையை கி.ரா கச்சிதமாக இரு பகுதிகளாக அமைத்திருக்கிறார். முதல் பகுதி திருமணமாகாத அக்காவின் புகழ் பாடும் தம்பியின் பார்வையில். இரண்டாம் பகுதி அவளை காதலித்து மணந்து கொண்ட கணவனின் பார்வையில். கன்னிப் பருவத்தில் எல்லோரிடமும் அன்பும் பரிவும் காட்டும் ஒரு பெண் எப்படி மாறிப் போகிறாள்? பிறர்க்காக என்றிருந்தவள் முழுக்க  முழுக்க தனக்கு தன் குடும்பத்திற்கு மட்டும் என்று ஒடுங்கிப் போ...

115. விரும்பிக் கேட்டவள் - எஸ். ராமகிருஷ்ணன் 03.04.2020

பழைய பாடல்களில் நிறைந்திருக்கும் அர்த்தமுள்ள வரிகளும் இதமான பின்னணி இசையும் ஒன்றிப் பாடும் குரல்களும் தான் நம்மில் எத்தனை பேரை மயங்க வைத்திருக்கின்றன? இன்பத்திலும் துன்பத்திலும் நமக்கு பாட்டு தானே வடிகாலாய் இருக்கிறது? அப்படி பாட்டே வாழ்க்கை என்றிருந்த ஒரு பெண்ணின் கதை. 

114. ஸ்டாம்பு ஆல்பம் - சுந்தர ராமசாமி 01.04.2020

ராஜப்பா, நாகராஜன் ஆகிய இரண்டு சிறுவர்களிடையே ஸ்டாம்பு சேர்ப்பதில் போட்டி ஏற்படுகிறது. ராஜப்பா அயராது உழைத்துப் பெற்ற பெயரை  வெளிநாட்டிலிருந்து வந்துசேரும் ஸ்டாம்பு ஆல்பம் நாகராஜனுக்கு எளிதில் பெற்றுத் தருகிறது. ஸ்டாம்பு சேகரிப்பதில் நாகராஜனை விஞ்சுவதற்காக ராஜப்பா செய்யும் விபரீதச் செயலும், அதன் தொடர்ச்சியாக நடப்பதும் தான் இந்தக் கதை. . .என் பள்ளிப் பருவத்தை நினைவூட்டுகிறது. . .

113. அக்பர் சாஸ்திரி - தி.ஜானகிராமன் 30.03.2020

ரயில் பயணங்களில் பலப்  பல மனிதர்களை சந்திக்கிறோம். சிலர் பேசுவது எரிச்சலாக இருக்கும், சிலர் பேசுவது வியக்க வைக்கும். நாமும் இப்படி  இருக்க வேண்டுமென்று தோன்றும்.  அப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த சாஸ்திரி. அவரது முற்போக்கான குணத்தால் அக்பர் சாஸ்திரி என்று பட்டப் பெயரிடப்படுகிறார். தி.ஜானகிராமனின் மனிதம் இழையோடும் வரிகளில் அவரின் கதை. 

112. வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன் 28.03.2020

எத்தனை எத்தனை முறை நாம் அனைவரும் வெளி மாநிலத்திலிருந்து சுற்றுலா வரும் சாதாரண அடித்தள மக்களை கேவலமாக நினைத்திருக்கிறோம்? நமது அறியாமையை அல்லது அறிவுத் திமிரை சாட்டையடி கொடுத்து சுட்டிக் காட்டும் கதை.

111. ஒரே நண்பன் - ஜெயகாந்தன் 26.03.2020

நட்பைப் பற்றிய கதை என்றாலும் உரையாடல்களில் தான் எத்தனை எத்தனை கருத்துகளை அநாயாசமாக பொருத்துகிறார் ஜெயகாந்தன்! அசர வைக்கும் மற்றுமொரு படைப்பு. . .

110. இங்கே , இங்கேயே - ஜெயமோகன் 24.03.2020

வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வருகிறார்கள். அவர்களது  விண் ஊர்தியின் தடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என நம்பப்படும் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. கல்லன்மலை உச்சியில் உள்ள தடம் விண்வெளி ஊர்தியின் தடமாக இருக்க வேண்டும் என நம்புகிறார்  நாராயணன் .  இல்லை அது அவ்வாறு இருக்க முடியாது என பத்மநாபன் கூறும் காரணங்கள்  அறிவியல் ரீதியானவை. ஜெயமோகன், தரமான அறிவியல் புனைவு என்பது...

109. சாஸ்தாப் பிரீதி-அ. மாதவையா 22.03.2020

இந்தக் கதை மாதவையாவின் 'குசிகர் குட்டிக் கதைகள்' தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் எழுதிய கதை. கடுமையான சமூக விமர்சனங்களை முன்வைத்த கதைகள் தந்த மாதவையாவைப் பற்றி கண்டனம் தெரிவித்த 'தி இந்து' நாளிதழ், ஒரே வருடத்தில், தானே முன்வந்து தன் நாளிதழில் கதைகளை ஆங்கிலத்தில் எழுத அவரை வேண்டிக் கொண்டது. அ. மாதவையா தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர்,...

108. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - இறுதிப் பகுதி - புதுமைப்பித்தன் 12.03.2020

நக்கலும் நையாண்டியும் தொடர்கிறது!

108. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - முதல் பகுதி - புதுமைப்பித்தன் 09.03.2020

கடவுளையே கேள்வி கேட்கிறார் தோற்கடிக்கிறார் நோகடிக்கிறார் புதுமைப்பித்தன் இந்தக் கதையில்.

107. போட்டி - பூமணி 23.02.2020

நடுத்தர வர்க்கத்தின் ஒரு குடும்பத்தின் விருப்பங்கள், கோபங்கள்,  எதிர்ப்புகள், சமாளிப்புகள் இழையோடும் அன்பு எல்லாவற்றையும் சொல்லும் கதை.

106. வெறும் செருப்பு - ந.பிச்சமூர்த்தி 24.01.2020

ந.பிச்சமூர்த்தியின் நுட்பமான படைப்புகளில் ஒன்று. மனித மனத்தின் முரண்பாடு, பொருள் மீதான பற்று, மூடநம்பிக்கை, தத்துவம் எல்லாம் இருக்கிறது இக்கதையில். . .

105. உத்யோக ரேகை - சார்வாகன் 19.01.2020

சார்வாகனின் சிறந்த கதைகளில் ஒன்று என்று அசோகமித்திரனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை இது.

104. அரிசி - சுஜாதா 14.01.2020

நம் நாட்டில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பெரும்பாலும் காப்பாற்றிவிடலாம். ஆனால் இந்த கதை எழுதப்பட்ட காலத்தில் விபத்து கேஸ்களை போலீஸுக்கு தெரிவித்து, அவர்கள் வந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் 90% சதவிகித விபத்துக்குள்ளானவர்கள் இறந்துபோய்விடுவார்கள். அதை விட கொடுமை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முற்படுபவர்கள் காவல் நிலையம், வழக்கு என இழுத்தடிக்...

103. புவியீர்ப்புக் கட்டணம் - அ.முத்துலிங்கம் 12.01.2020

எத்தனை எத்தனை காரணமற்ற முட்டாள்தனமான வரிவிதிப்புகள்! எள்ளி நகையாடுகிறார் முத்துலிங்கம்!!

102. காந்தி - அசோகமித்திரன் 11.01.2020

வெறுப்பு - மனிதனை ஆட்டிப்படைக்கும் உணர்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று. அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் ஒருவனின் எண்ண ஓட்டங்களின் பதிவு தான் இந்த கதை. வழக்கமான கதைகளின் ஆரம்பம், முடிவு, திருப்பங்கள் போன்ற அம்சங்கள் இல்லாததினால் கதை தானா என்று சந்தேகம் வரலாம். ஆனால் ஆசிரியரின் அருமையான படைப்புகளில் ஒன்று. காந்தியடிகளின் மொத்த வாழ்க்கையை, செய்தியை இரண்டே வரிகளில் படம் பிடித்து விட்டார் அசோகமி...

101. அப்பாவும் மகனும் - ஜெயமோகன் 09.01.2020

உணர்ச்சிமயமான எண்ணச் சிதறல்கள் நிறைந்த ஒரு கதை. அடிமனதில் புதைந்து கிடக்கும் குற்ற உணர்வு திடீரென்று பொங்கி வருகிறது தன் மகனோடு கோபம் கொள்ளும் போது. . . புத்தாண்டின் முதல் கதை. மொத்தத்தில் 101வது சிறுகதை.

100. பூசணிக்காய் அம்பி - புதுமைப்பித்தன் 03.12.2019

குறும்புக்கார சிறுவனைப் பற்றிய கதை. நகைச்சுவை தளும்பி ஓடுகிறது! சந்தடி சாக்கில் அன்றைய தமிழ் இலக்கிய சூழலையும் துப்பறியும் கதை அபத்தங்களையும் நையாண்டி செய்கிறார் இந்த மாபெரும் கதைசொல்லி!

99. அக்னி - அனுராதா ரமணன் 01.12.2019

இருப்போரை அன்புடன் கவனியாது இறந்தோருக்கு திதி செய்வோருக்கு சாட்டையடியாய் இந்தக் கதை.

Höre den Podcast தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet