Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
அமர்ஜீத் சதா: உலகின் மிக இளவயது சீரியல் கில்லர் - இப்போது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்! 06.10.2023 4:38
10 வயதுக்குள் 3 பேரின் உயிரை பறித்த இவர், இப்போது எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியாது. எளிமையாக மரமேறி விளையாடும் கிராமத்து சிறுவனான இவரது வாழ்வில் நடந்தது என்ன? -Newssensetn
உலகை நடுங்க வைத்த சீரியல் கில்லர்கள்: அதிகமாக இருக்கும் 10 நாடுகள்- இந்தியாவின் இடம் என்ன? 06.10.2023 3:27
பெரும்பாலான சீரியல் கில்லர் திரைப்படங்கள் என்னவோ அமெரிக்காவில் தான் எடுக்கப்பட்டுள்ளன. அங்குதான் அதிக சீரியல் கில்லர்கள் இருக்கிறார்களா? அல்லது அங்கு அதிக படங்கள் எடுக்கப்படுகின்றனவா? உலகில் அதிக சீரியல் கில்லர்கள் இருக்கும் டாப் 10 நாடுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். -Newssensetn
Health : தினமும் 10 மணி நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் மூளையைப் பாதிக்குமா? 05.10.2023 1:29
நவீன வாழ்க்கைமுறையில் இது ஒரு வழக்கமாகிவிட்டாலும் நிபுணர்களின் கூற்றுப்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது மூளையின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர். -Newssensetn
Safest Countries 2023 : உலகின் பாதுகாப்பான டாப் 10 நாடுகள் - இந்தியாவுக்கு இடம் இருக்கா? 05.10.2023 1:11
இந்த பட்டியலில் உள்ள பல நாடுகள் உலகின் பாதுகாப்பான நாடுகள் மட்டுமல்ல, அவை அமைதியான நாடாகவும் உள்ளன. ஐஸ்லாந்து முதல் பரபரப்பான சுவிட்சர்லாந்து வரை, ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல இடங்கள் உள்ளன. -Newssensetn
Bhaja Caves: பசுமையான மலையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான குகை - உள்ளே என்ன இருக்கிறது? 04.10.2023 2:06
இந்திய வரலாற்றை முழுவதுமாக புரிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த இடத்தைச் சென்று பார்வையிட வேண்டும். -Newssensetn
Mossad : உலகின் சிறந்த 'உளவுத்துறை' செய்த 5 சம்பவங்கள் - வியக்க வைக்கும் தகவல்! 03.10.2023 9:40
கூர்மையான உளவாளிகள் முதல் திறமையான ஜேம்ஸ் பான்ட்கள் வரை மொசாட் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை. -Newssensetn
Maldives: 20,000 மக்கள், 7000 கட்டிடங்கள்; மாலத்தீவில் உருவாகும் மிதக்கும் நகரம் - எதற்கு? 02.10.2023 2:03
மாறிவரும் காலநிலை சூழல், கடல் மட்டம் உயரச் செய்து, இந்த தீவின் குறிப்பிடத்தக்க பகுதியை நீரில் மூழ்கச் செய்யும் என்றும், 2100ஆம் ஆண்டுக்குள் இந்த நகரமே இருக்காது என்றும் மதிப்பிடுகின்றனர் -Newssensetn
மணிப்பூர் முழுவதும் AFSPA அமல் ஏன்? 5 மாதங்களாக தொடரும் வன்முறை - விரிவான தகவல்கள்! 02.10.2023 2:30
மெய்தி கலவரக்காரர்கள் காவக்துறையில் இருந்தும் பாதுகாப்பு படையினரிடம் இருந்தும் எடுத்துக்கொண்ட ஆயுதங்கள் தீவிரவாத குழுக்களுக்கு கிடைத்திருக்கலாம் எனப் பாதுகாப்புபடையினர் சந்தேகிக்கின்றனர். AFSPA அமலில் இருந்தால் காவல்துறை அனுமதி இல்லாமலே இராணுவம் உயிரைப் பறிக்கும் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். -Newssensetn
Mark Antony: U/A சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட தனிக்கை துறை? நடிகர் விஷால் குற்றச்சாட்டு 01.10.2023 2:14
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தனது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகர் , எவ்வளவு பணம், எத்தனை முறை பரிமாற்றப்பட்டது உள்பட தகவல்களை வெளியிட்டு பதிவிட்டிருந்தார். -Newssensetn
Sweden: 6000 மனிதர்கள், கட்டிடங்கள் என ஒரு முழு நகரமே இடம்பெயர காரணம் என்ன?| Explained 01.10.2023 3:45
சுமார் 6000 பேர் இடம்பெயர்கின்றனர். இவர்கள் தற்போது கிருனா அமைந்துள்ள இடத்தில் இருந்து 1.9 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குப் பக்கமாக நகர்கின்றனர். இவர்களுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் என்று கணிக்கின்றனர். -Newssensetn
ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை? 30.09.2023 2:46
சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், ஐந்து ஆண்டுகள் முன்னர் தான் இப்போது இருக்கும் இடத்திற்கு இடம்மாற்றப்பட்டது. -Newssensetn
யுபிஎஸ்சியில் 5 முறை தோல்வி: ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய நடிகை - யார் இந்த கீர்த்தனா? 30.09.2023 1:17
48 தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்ட கீர்த்தனா வளர்ந்ததும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று முடிவெடுத்தார். -Newssensetn
Google 25: கராஜில் தொடங்கப்பட்ட நிறுவனம் தொழில்நுட்ப ஜாம்பவான் ஆனது எப்படி? சுவாரஸ்ய கதை! 29.09.2023 2:35
லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இரு மாணவர்களின் நட்பு உலக டிஜிட்டல் தளத்தில் என்றென்றைக்குமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை அவர்கள் அறியவில்லை. -Newssensetn
ஊட்டியை மிஞ்சிய 'உல்லாடா' - நீலகிரியில் இப்படி ஒரு இடமா? குடும்பமாக செல்ல சூப்பர் ஸ்பாட்! 29.09.2023 2:01
உல்லாடாவில் ஒரு அழகிய நீர்வீழ்ச்சியும் பெரிய பாறைகளும் உள்ளது. அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனுக்குப் பிறகு இரண்டாவது-பெரிய செங்குத்து மலை இடைவெளியும் (Gorge) இங்கு உள்ளது. -Newssensetn
முதலையின் பாதுகாப்பில் இருந்ததா அனந்தபத்மநாப கோவில்? - இந்தியாவின் மர்மமான 5 கோவில்கள் 29.09.2023 2:31
ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவமான பின்னணிகள் காணப்படுகின்றன. இந்த பதிவில் இந்தியாவின் மர்மமான ஐந்து கோவில்கள் குறித்து பார்க்க போகிறோம். -Newssensetn
உலகின் முதல் மிதக்கும் 3 அடுக்கு மசூதி; நீருக்கடியில் தொழுகை - எங்கே தெரியுமா? 28.09.2023 1:41
மசூதி மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை மண்டபம் தண்ணீருக்கு அடியில் அமைந்துள்ளது. இது 50 முதல் 75 வழிபாடுகளுக்கு இடமளிக்கும். பார்வையாளர்கள் மசூதிக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்யலாம். -Newssensetn
Health: பாதாம் டூ அத்தி - கால்சியம் அளவை கூட்ட உதவும் உணவுகள் 28.09.2023 2:06
கால்சியம் எலும்புகளின் வலுவைக் கூட்ட அவசியமான ஒரு ஊட்டம் ஆகும். எளிதில் கிடைக்கக் கூடிய, நம்மால் தினமும் சாப்பிடக் கூடிய இந்த ஐந்து உணவு வகைகள் கால்சியம் சத்து பெற உதவும். -Newssensetn
கையில் விலங்கு போட்டு 'பேய் பொம்மையை' கைது செய்த காவல்துறை - ஏன்? 27.09.2023 1:13
சக்கி (Chucky) என்ற பெயருள்ள அது ஒரு பப்பட் பொம்மை. இதனை கையாளும் உரிமையாளரும் வடக்கு மெக்சிகோவில் கைது செய்யப்பட்டுள்ளார். -Newssensetn
கொடைக்கானல் மூணாறை இணைக்கும் Escape Road - ஆங்கிலேயர் அமைத்த இந்த வழியில் செல்ல ஏன் தடை? 27.09.2023 3:29
ஆங்கிலேயர்கள், பெரிஜாம் ஏரி வழியாக டாப் ஸ்டேஷனுக்கு தப்பித்து ஓட திட்டமிட்டனர். அங்கிருந்து மூணாறு சென்று மூணாரிலிருந்து கப்பல் வழியாக கொச்சி செல்வது தான் இவர்களின் திட்டம். -Newssensetn
உடைந்த ADMK - BJP கூட்டணி: நாடகமா? முடிவா? - திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன? 26.09.2023 1:56
"அண்ணாமலையை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்." -Newssensetn
உலகின் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட அழகிய சுற்றுலா தலங்கள் பற்றி தெரியுமா? 26.09.2023 1:28
தாய்லாந்தில் உள்ள கிராபி என்ற இடம் ஓர் அடர்ந்த காடுகள் நிறைந்த தீவு. இந்த இடம் குகைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள் போன்ற ஏராளமான இயற்கை அழகை கொண்டுள்ளது. -Newssennsetn
டிஜிட்டல் மாந்திரீகம்: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முடியுமா? 26.09.2023 2:10
இறந்தவர்களின் எழுத்துகள், உரையாடல்கள், புகைப்படங்கள், அவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களுடனான பிணைப்பை நீட்டிக்க முடியும். ரோமான்சம் என்ற மலையாள படத்தில் இறந்த பேயுடன் பேசும் காட்சி உங்கள் நினைவுக்கு வரலாம். -Newssensetn
எரிமலையின் உச்சியில் அமைந்திருக்கும் விநாயகர் சிலை - எங்கே? 25.09.2023 1:47
இந்தோனேசியாவில் எரிமலைகளுக்கும் பஞ்சமில்லை. அங்கிருக்கும் சுமார் 141 எரிமலைகளில் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. -Newssensetn
உலகின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய குடும்பம் - சொத்து மதிப்பு? 25.09.2023 3:09
இந்த ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியல் குறித்தும், இதில் இடம் பெற்ற இந்திய குடும்பம் குறித்தும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். -Newssensetn
Tadiandamol: கர்நாடகாவின் 3வது பெரிய மலை - ஒரு ட்ரெக் செல்லலாமா? 24.09.2023 0:55
அடர்ந்த காட்டுக்கு நடுவில் நடந்து சென்றுதான் இந்த மலையின் உச்சியை அடைய முடியும். இந்த சாகச பயணம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். -Newssensetn
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet