Ramanan
Ramanan's Podcast
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: www.buzzsprout.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
நமக்குள் இருக்கும் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து வெற்றிகரமாக வாழ்வது எப்படி ? 03.01.2025 11:18
நம்முடைய சிந்தனை, நம்பிக்கை மற்றும் நடவடிக்கை போன்றவற்றை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் நாம் நம் வாழ்க்கையை மிகவும் சிறப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும். நம் வாழ்க்கை விலைமதிப்பற்றது. நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தும் உணராமலும் இந்த வாழ்க்கையை அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் முக்கிய மான கேள்வி ஒன்று இருக்கிறது. நம் வாழ்க்கையை நாம் சாதாரணமாக வாழ நினைக்கிறோமா அல்லது மிகச் சிறப்பான வாழ்க்க...
தைரியம் Courage என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர் . 27.11.2024 9:36
தைரியம் Courage என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர் . எண்ணத்தின் உயரம் தான், வாழ்க்கையின் உயரமாகும். எனவே, நமது எண்ணம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தைரியம் தான் வாழ்க்கை; பயம் தான் மரணம். எதையும் தைரியமாக பேச வேண்டும். அதே நேரத்தில் தன்னை உயர்த்திக் கொள்ள, பிறரை காயப்படுத்தியும், மனது புண்படும்படியும் நடந்து கொள்ளக் கூடாது.
The Diary of a CEO: The 33 Laws of Business and Life 08.11.2024 14:01
நாம் சிறப்பான நிலையை அடைய வேண்டும் எனில், அதற்குத் தேவை யானவை என்னென்ன என்பதைச் சொல்லும் The Diary Of a CEO என்கிற புத்தகத்தைதான் இந்த Episode இல் கேட்கப்போகின்றோம்.
Ikigai எனும் ஜப்பானியத் தத்துவம் 26.12.2023 10:26
Iki” (வாழ்க்கை) மற்றும் “gai” (மதிப்பு) ஆகிய இரண்டு ஜப்பானிய வார்த்தைகளில் இருந்து வந்தது தான் Ikigai எனும் வார்த்தை அதாவது நாம் உயிருடன் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஒரு கலை என இதனை ஜப்பானியர்கள் பின்வற்றி வருகின்றனர். இக்கணம் இப்போது மட்டுமே இருக்கும். மீண்டும் ஒருபோதும் திரும்பி வராது’.நாம் கடந்தகாலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நிகழ...
மகிழ்ச்சியான வாழ்கை 25.12.2023 9:15
நீங்கள் வெற்றிபெறுவதல்ல உங்களின் மகிழ்ச்சியான வாழ்கை நீங்கள் எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வது தான் உங்கள் வாழ்வின் வெற்றி மகிழ்ச்சியே மனநிறைவு. வாழ்க்கை என்பது…ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதிருங்கள் ! ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்!! ஒரு இலட்சியம் – சாதியுங்கள்!!! ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்!!!! ஒரு போராட்டம் – வென்றுகாட்டுங்கள்!!!!! ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்!!!!!!
சாக்ரடீஸ் தத்துவம் என்பது என்ன? 25.12.2023 3:39
தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர். ஃபிலாஸ் என்றால் அறிவு; ஸோஃபியா என்றால் நேசிப்பது என்று பொருள். அப்படியானால் தத்துவம் என்பது 'அறிவை நேசிப்பது' என்று விளக்கமே பிறக்கிறதல்லவா? கலை - இலக்கியம் - நாகரிகம் எனப் புகழ்பெற்ற பண்டைய கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவஞானி சாக்ரட்டீ...
அவமானங்கள் வாழ்க்கையின் ஆசான். 25.12.2023 13:12
மனித மனங்கள் காயப்படுவதைத்தான் அவமானம் என்கிறோம். கத்தி... துப்பாக்கி... வெடிகுண்டு... அணு ஆயுதங்களைவிட மனிதர்களையும், மனித சமூகத்தையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும், சக்திவாய்ந்த ஆயுதம் எது தெரியுமா? அவமானம்தான் அது. வார்த்தைகளாலும், செய்கைகளாலும், ஏற்படுத்தப்படும் அவமானம்தான் மனிதர்களைச் சிதைத்துக் கொல்லும் சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்படுகிறது. "வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம...
ஒப்பீடு என்பது சுயமரியாதைக்கு ஒரு விஷம் 25.12.2023 12:26
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். - ஆலன் ஸ்டிரைக் ஒப்பீடு என்பது சுயமரியாதைக்கு ஒரு விஷம், பொறாமையின் வேர். ஒப்பீடுகள் வாழ்க்கைக்கு மதிப்பையோ, அர்த்தத்தையோ, மகிழ்ச்சியையோ சேர்க்காது. அதையெல்லாம் எடுத்துச் சென்றுவிடும். மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதன் மூலம், நீங்கள் எதையும் பெற மாட்டீர்கள், ஆனால...
உறக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம் 25.12.2023 8:02
தூக்கம் என்பது உங்களுக்குத் தேவைப்படும் ஓர் ஓய்வு. அந்த ஓய்வு இன்றி உங்களால் வாழ முடியாது. உங்கள் உடலைவிட மனதுக்கு நிச்சயமாக ஓய்வு தேவைப்படுகிறது. எனவேதான் உடலளவிலும் மனதளவிலும் ஓய்வு கிடைக்கும்படியாக இயற்கை தூக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தூக்கத்திலும்கூட மனம் தொடர்ந்து செயல்படுவதை தற்போது விஞ்ஞானத்தில் கண்டறிந்து இருக்கிறார்கள் உறக்கத்தின் அவசியம் குறித்து உலக அளவில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும...
பழிவாங்குதல் எண்ணம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது. 24.12.2023 11:49
பழிவாங்குதல் எண்ணம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது. இதனால் சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர். ஒருவர் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்தால் அவருக்குள் கோபம், வெறுப்பு, பயம் போன்ற தீய உணர்வுகள் இருக்கும். ஒருவரை பற்றி ஒழுங்காக புரிந்து கொள்ளாமல் அவரை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தி கொள்வதே பழிவாங்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பழிவாங்க நினைப்பவர்கள் தங்களைவிட பலவீனமாக இருப்பவர்களை மட்டுமே பழிவா...
பகட்டு உலகின் Plastic மனிதர்கள் 24.12.2023 8:03
பகட்டு உலகின் பிளாஸ்டிக் மனிதர்கள் பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நிலை இன்று பலிடம் தோன்றியுள்ளது. உங்கள் ஆசையும் முயற்சியும் இருக்கும் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது. வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல சூழலைக் கெடுத்துவிடக் கூடாது. வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை வாடிக்கையாக மாறும்போது கொண்ட வியப்பு எல்லாம் விரக்தியாய் மாறும் என எதிர்ப்பார்த்தில்லை.
உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது Self Talk மன நோயல்ல... ஆரோக்கியமான மனநிலை 22.12.2023 10:43
மனம் பல்வேறு எண்ணங்களாலும், நினைவுகளாலும் நிறைந்தது. அது ஓய்வாக இருக்கும்போதுகூட எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். நம்மையும் அறியாமல் மனதின் உள்ளே ஓர் உரையாடல் நடந்துகொண்டே இருக்கும். உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது ( Self Talk ) மன நோயல்ல... ஆரோக்கியமான மனநிலை... அதிக அறிவாற்றல் கொண்ட செயல்பாடு' என்கிறது சமீபத்திய ஆய்வு.
பயம் இல்லாதவர்கள் வெற்றி அடைவார்கள் 17.12.2023 12:14
வாழ்க்கையில் எவர் ஒருவருக்கு, தொடர் வெற்றிகள் வந்து கொண்டே இருக்கின்றதோ அவர் தைரியசாலியாக வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே, எவர் ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர் தோல்வி ஏற்படுகிறதோ, கட்டாயம் அவர்களது மனதில் பயம் ஏற்பட்டு விடும். ஆனால், இதையே சற்று மாற்றி கூறிப் பாருங்கள்! மனபயம் ஏற்பட்டாலே தோல்வியைத் தழுவுவார்கள். பயம் இல்லாதவர்கள் வெற்றி அடைவார்கள். வாழ்க்கையில் சாதனை புரிவதற்கு மிகவும் முக்கியமான ஒரு...
பெற்றோரியம் என்றால் என்ன ? 17.12.2023 8:25
குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு நிலைகள் எவ்வாறு இருக்க வேண்டும் ? கல்வியே எங்கள் மூலதனம். எமது இளம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிகான தீர்வுகள்இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் எதிர் கொண்டுள்ள சவால்கள் அதனை எதிர் கொள்ளும் முறைகள் பெற்றோரியத்தில் முக்கியமானவை
மனஅழுத்தம் ( Strees ) நம்மை என்ன செய்யும்? 17.12.2023 5:06
மனிதனாய் பிறக்கும் அனைவருக்குமே மன அழுத்தம் இருக்கும். ஏனென்றால், இன்றைய சூழலில் மனிதர்களிடம் பேசுவதை மறந்து இயந்திரங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம். நாம் எல்லோருமே மகிழ்ச்சியாக, பிரச்னைகளே இல்லாத ஒரு வாழ்வை தேடிச் சென்று கொண்டிருக்கிறோம். அப்படியில்லாமல், பிரச்னைகளும் இருக்கும் அதுதான் வாழ்க்கை என்று உணர வேண்டும். சில பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. சில பிரச்னைகளுக்குத் தீர்வில்லை. சில பிரச்ன...
'அருள்' Blessing இல்லை என்றால் வெற்றியும் மகிழ்ச்சியும் இல்லை! 13.12.2023 7:52
ஓர் உயிர் துன்பப்படும் வரை காத்திருக்காமல், அது என்றுமே ஆனந்தமாய் வாழ உங்களால் முடிந்தவற்றைச் செய்யுங்கள், பிரபஞ்சம் உங்களுக்கு "அருளை" அள்ளி வழங்கும்.
குப்பைகளால் நிரம்பி வழிகிறது உலகம் 12.12.2023 8:37
உலகமே குப்பைகளால் நிரம்பி வழிகிறது. ஆனால், யாரோ உற்பத்தி செய்யும் கழிவுகள், வேறு யாருடையதோ பொறுப்பாகிறது. எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் மனிதனின் இழிநிலை, மனிதகுலத்தின் மாண்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இன்று உலகளாவிய கழிவு மற்றும் கழிவு நெருக்கடி தோன்றியுள்ளது, உலக அளவில் உள்ள பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி 'பிளாஸ்டிக்' கழிவுகள் மிதந்து கொண்டிருப்பதாக ஆய்வு முடிவ...
உங்கள் உயிரியல் கடிகாரம் (Biological Clock) எப்படி இயங்குகிறது 12.12.2023 12:18
இந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'மும் (Biological Clock) 'சர்காடியன் இசைவு'ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. 2017-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோரின் ஆராய்ச்சியும் நமது உடலின் ஒவ்வொரு செல்களிலும் இயங்கும் உயிரியல் கடிகாரம் மற்றும் அத...
உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை," 10.12.2023 10:17
உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை," ஒவ்வோர் ஆண்டும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் கால் பங்கில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில், ஒரு மனிதன் ஆயுள் முழுமைக்கும் உயிரோடு வாழத் தேவ...
கேள்வி கேட்பதென்பது ஒரு கலை. 10.12.2023 10:03
கேள்வி கேட்பதென்பது ஒரு கலை. அதற்குப் பதில் சொல்வதென்பது அதை விட பெரிய கலை. பல அறியப்படாத விஷயங்கள் அறியப்பட, அனைவரின் மனதிலும் புரியப்பட காரணமாக அமைந்தது கேள்விகள் தான். அதனால் தான் கேள்விகளாலே ஒரு வேள்விகள் செய்வோம் என்பார்கள். கேள்விகளால் மனதில் உள்ள ஐயங்கள் களையப்பட்டு, மனம் அமைதியடைந்து நம்மையும் அடுத்த இலக்கை நோக்கி வெற்றிநடை போட வைக்கிறது. 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல...
பெற்றோர், பிள்ளைகள் உறவு 10.12.2023 11:36
பெற்றோர், பிள்ளைகள் உறவு என்பது எந்தவொரு எதிர்பார்ப்போ, சுயநலமோ, உடன்படிக்கைகளோ அற்ற ஒர் உறவாகும். மற்ற உறவுகளைப் போன்று இடையில் கோர்க்கப்பட்டதல்ல. அது ஆரம்பத்திலிருந்தே அன்பாலும், அரவனைப்பாலும் கட்டப்பட்ட சங்கிலியாகும். இந்த உறவு தான் அவன் மரணிக்கும் வரை தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி ஆறுதல் தரக்கூடிய ஒன்றாகும். எல்லாக் கவலைக், கஷ்டங்களின் போதும் ஒரு தடவையாவது கடந்து போகும் ஒர் உறவு என்றால் அ...
நிதி வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எனில், நிதித் திட்டமிடல் அவசியம் 30.11.2023 8:00
ஒருவரின் நிதி வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எனில், அவர் அவசியம் நிதித் திட்டமிடல் (Financial Plan) மேற்கொள்ள வேண்டும். நிதி இலக்குகளை சரியாக நிறைவேற்ற நிதித் திட்டமிடல் உதவி செய்கிறது. சரியான நிதி சார் அறிவினைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நிதித்த திட்டமிடலை உரிய வகையில் மேற்கொள்ள முடியும். இன்றைய நிகழ்ச்சியில் நிதி முகாமைத்துவம் குறித்து உரையாடுகின்றோம்.
மகிழ்ச்சி எப்போது வரும்? - 12 RULES OF LIFE 30.11.2023 9:59
மனித வாழ்வின் நோக்கம் என்ன? மகிழ்ச்சியாக வாழ்வதுதானே. மகிழ்ச்சி எப்போது வரும்? வசதிவாய்ப்பு, கார், பங்களா, பணம் என எல்லாம் இருந்தால் அது தானாக வந்துவிடப்போகிறது என்று சொன்னால், அதுதான் இல்லை. குழப்பம் இல்லாத ஒழுங்கு நிறைந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்டால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
வெற்றிக்கு வித்திடும் ‘கவனம்!’ - கவனச்சிதறலைத் தடுக்கும் வழிகள்! 30.11.2023 11:19
ந ம்மில் பலரும் பல காரியங்களில் வெற்றி பெற முடியாமல் போவதற்குக் காரணம், கவனச்சிதறல்தான். `கவனம் செலுத்தும் கலையைச் சரிவர நிர்வகிக்கக் கற்றுக் கொண்டால், உற்பத்தித்திறனில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்’ என்பதைச் சொல்கிறது, பெய்லி (Chris Bailey) எழுதிய ’Hyper Focus புத்தகம்.
அதிர்ஷ்டத்தை அடையத் தயாராகுங்கள் - Make Your Own Luck 30.11.2023 13:32
பரிமிதமான வெற்றியைப் பெற நீங்கள் பிறவி அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டியதில்லை என்பது புரியும். ‘அதிர்ஷ்டம் என்பது எதிர்பாராத விதமாக நடப்பது’ என்ற எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் என்பது திட்டமிட்டுப் பெறக்கூடிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்டத்தை அடையத் தயாராகுங்கள். அதற்கான வேலைகளைச் செய்யுங்கள்.
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet