aahanalvaanoli
ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)
2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu
Husk at besøge podcastens hjemmeside og støtte skaberen: podcasters.spotify.com
Forfatter
aahanalvaanoli
Kategori
Podcastens hjemmeside
Seneste episode
12. sep. 2026
Hvor kan du lytte?
Podcasts i appen Replaio Radio Kommer snartPodcasts kommer snart til appen. Installer nu, og vær den første til at se en helt ny tilgang til podcasts
Episoder
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் பணிகள்,பயிற்சிகள் மற்றும் மாதிரி தேர்வுகள்- துணை இயக்குனர் திரு.S.மணி அவர்கள் - செந்தில்குமார் - நேர்காணல் நேரம் - தொடர்-5 21.12.2021 8:08
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் பணிகள், அங்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் மற்றும் மாதிரி தேர்வுகள் குறித்து நேயர்களோடு பகிர்ந்துகொள்கிறார் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் திரு.S.மணி அவர்கள்...
வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணிக்காலியிடங்களுக்கான மாதிரி நேர்முக தேர்வு - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் - 8 21.12.2021 2:08
வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணிக்காலியிடங்களுக்கான மாதிரி நேர்முக தேர்வு வருகிற 23.12.2021 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
எப்படி ஏறினான் ? - புதிர்க்கதை -தொடர்-4 - நன்மொழி பதிப்பகம் - எ.சோதி அவர்கள்- பாலமுருகன் கணபதி 21.12.2021 6:53
"எப்படி ஏறினான்?" என்ற இப்புதிர்கதை உங்கள் சிந்திக்கும் திறனுக்கு ஒரு சவாலாக அமையும்.. தங்களுக்கு பதில் தெரிந்தால் 93616 77338 என்ற நமது நிலைய எண்ணிற்கு பதிலை வாட்சப் பண்ணுங்க. இக்கதையை எழுதியவர் எ.சோதி ஐயா அவர்கள்..முந்தைய புதிர்கதையான "எப்படி சாத்தியம்?" புதிர்கதைக்கு இத்தொடரின் முதலில் விடை கூறப்பட்டுள்ளது.
"முட்டாள் குருவும் முட்டாள் சீடர்களும் " - சிறுகதை நேரம் - தொடர்-17 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 20.12.2021 10:39
வாழ்வில் முட்டாள்களாக இருப்பது தவறு. எதையும் அறிந்துகொள்ள இயலாமல் தாமாகவே தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமான செயல்களை செய்வதால் வரும் விளைவுகளை இக்கதை நகைச்சுவையுடன் விளக்குகிறது
அந்த நாய்க்குட்டி எங்கே? - பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் - பாலமுருகன் கணபதி - தொடர்-4 20.12.2021 8:44
தமிழறிஞர் பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய இக்கதையின் நான்காம் தொடரான இத்தொடரில் சிறுவன் பூபாலன் மீண்டும் கொள்ளைக்கூட்ட தலைவனிடம் சிக்கிக்கொள்கிறான், தனது நாய்குட்டியையும் தவற விடுகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கதையினை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நேயர்களே…Music by audionautix.com...
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்று பயனடையலாம் - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் - 7 18.12.2021 5:32
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்று பயனடையலாம் வேளாண் உற்பத்திக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப அவர்கள் தகவல்
அந்த நாய்க்குட்டி எங்கே? - பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் - பாலமுருகன் கணபதி - தொடர்-3 17.12.2021 7:24
தமிழறிஞர் பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய இக்கதையின் மூன்றாம் தொடரான இத்தொடரில் சிறுவன் பூபாலன் மீண்டும் சர்க்கஸ் சுகுமாரிடம் சிக்கிக்கொள்கிறான், தனது நாய்குட்டியையும் தவற விடுகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கதையினை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நேயர்களே..Music by audionautix.com..
சேலம் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு செய்யும் விவசாயிகளுக்கு அருமையான திட்டம் - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல் - தகவல் நேரம் - 6 (16.12.2021) 17.12.2021 3:20
சேலம் மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு செய்திடும் விவசாயிகள் பிரதான் மந்திரி மீன்வளமேம்பாட்டு திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு செ. கார்மேகம் இ.ஆ.ப., தகவல்... (Music by audionautix.com)
எப்படி சாத்தியம்? - புதிர்க்கதை -தொடர்-3 - நன்மொழி பதிப்பகம் - எ.சோதி அவர்கள்- பாலமுருகன் கணபதி 16.12.2021 4:02
"எப்படி சாத்தியம்?" என்ற இப்புதிர்கதை உங்கள் சிந்திக்கும் திறனுக்கு ஒரு சவாலாக அமையும்.. தங்களுக்கு பதில் தெரிந்தால் 93616 77338 என்ற நமது நிலைய எண்ணிற்கு பதிலை வாட்சப் பண்ணுங்க. இக்கதையை எழுதியவர் எ.சோதி ஐயா அவர்கள்..முந்தைய புதிர்கதையான "யாரை தள்ளினான்" புதிர்கதைக்கு இத்தொடரின் முதலில் விடை கூறப்பட்டுள்ளது.
சிரிப்பு யோகா - ஹாஹோ சிரிப்பானந்தா - பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - பகுதி இரண்டு - தொடர்-4 16.12.2021 17:09
ஹாஹோ சிரிப்பானந்தா மற்றும் பாலமுருகன் கணபதி ஆகியோரின் கலகலப்பான சிரிப்பு யோகா நிகழ்ச்சி..
HIV விழிப்புணர்வு - மாவட்ட திட்ட மேலாளர் திரு அருணாச்சலம் அவர்கள் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பட்டு அலகு, சேலம் -பாலமுருகன் கணபதி -நேர்காணல் நேரம்-தொடர் -3 16.12.2021 16:18
HIV - எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நம்முடன் கலந்துகொண்டு விழிப்புணர்வு கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார் மாவட்ட திட்ட மேலாளர் திரு அருணாச்சலம் அவர்கள் - மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பட்டு அலகு சேலம்
சிரிப்பு யோகா - ஹாஹோ சிரிப்பானந்தா - யோகா ராஜா அவர்கள் - நேர்காணல் நேரம் - தொடர்-2 14.12.2021 37:00
ஹாஹோ சிரிப்பானந்தா, சித்திரை சிங்கர் மற்றும் யோகா ராஜா ஆகியோரின் கலகலப்பான சிரிப்பு யோகா நிகழ்ச்சி..
அந்த நாய்க்குட்டி எங்கே? - பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் - பாலமுருகன் கணபதி - தொடர்-2 13.12.2021 7:17
தமிழறிஞர் பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய இக்கதையின் இரண்டாம் தொடரான இதில், சிறுவன் பூபாலன் ஒரு சர்க்கஸ் முதலாளியிடம் சிக்கி கொள்கிறான். அங்கிருந்து மீண்டு வந்து தனது நாய்க் குட்டியை கண்டுபிடிக்கிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கதையினை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நேயர்களே..Music by audionautix.com..
"தானத்தில் சிறந்தது எது " - சிறுகதை நேரம் - தொடர்-16 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 13.12.2021 5:01
இக்கதையில் பொறுமையின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்பதன் பொருளினை நேயர்கள் இக்கதையின் வாயிலாக அறிந்துகொள்ள இயலும்
வாழ்க வளமுடன் என்றால் என்ன - பாலகிருஷ்ணன் - வாழ்ந்திட சொல்கிறேன் - தொடர்-1 13.12.2021 4:22
இத்தொடரில் வாழ்க வளமுடன் என்றால் என்ன அவ்வாறு ஒருவரை வாழ்த்தும்போது நிகழும் அற்புதங்கள் குறித்து விளக்குகிறார் மனவளக்கலை பேராசிரியர் திரு.பாலகிருஷ்ணன், சங்ககிரி அவர்கள்
யாரை தள்ளினான்? - புதிர்க்கதை -தொடர்-2 - நன்மொழி பதிப்பகம் - எ.சோதி அவர்கள்- பாலமுருகன் கணபதி 11.12.2021 4:47
"யாரை தள்ளினான்?" என்ற இப்புதிர்கதை உங்கள் சிந்திக்கும் திறனுக்கு ஒரு சவாலாக அமையும்.. தங்களுக்கு பதில் தெரிந்தால் 93616 77338 என்ற நமது நிலைய எண்ணிற்கு பதிலை வாட்சப் பண்ணுங்க. இக்கதையை எழுதியவர் எ.சோதி ஐயா அவர்கள்..முந்தைய புதிர்கதையான " காப்பற்றினால் தண்டனையா" புதிர்கதைக்கு இத்தொடரின் முதலில் விடை கூறப்பட்டுள்ளது.
Greed Never Pays - English Short Story - Music by Audionautix.com - Nandhana Devi - Episode-1 11.12.2021 2:20
The actions we take out of greed will subject us to punishment. This story illustrates the benefits of doing good deeds. Nandhana Devi, an eighth grade student of Appu Arivaalayem, told this story. Music by Audionautix.com.
அந்த நாய்க்குட்டி எங்கே? - பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் - பாலமுருகன் கணபதி - தொடர்-1 11.12.2021 10:13
தமிழறிஞர் பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய இக்கதையின் முதல் தொடரான இத்தொடரில் சிறுவன் பூபாலனுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைக்கிறது வீட்டிலுள்ளவர்களிடம் பேசி சமாளித்து அந்த நாய்க்குட்டியை தனது வீட்டில் வளர்க்க அனுமதி பெறுகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கதையினை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நேயர்களே..Music by audionautix.com..
"பெரிய மனம் " - சிறுகதை நேரம் - தொடர்-15 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 08.12.2021 7:23
தற்பெருமை விரும்பாத மேன்மை மிக்க மனிதர் ஒருவரின் பண்பினை விளக்குகிறது இக்கதை
"பெரியபையன்" - சிறுகதை நேரம் - தொடர்-14 (2021-22) - முனைவர் திரு.ஆயிக்கவுண்டன் ஐயா அவர்கள் - பாலமுருகன் கணபதி 06.12.2021 16:18
கடல் கடந்த அமெரிக்க நாடோடி வாழ்க்கையில், தமிழ்ச் சமுதாயம் தங்கள் மரபுகளை, அடையாளங்களை இளையாதலைமுறைக்கு உணர்த்த பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டு உள்ளது. உடல் சார்ந்த மரபுகள், நாம் அறியாமல் நம்முடன் ஒட்டிக்கொண்டு தொடர்கின்றன. உளம் சார்ந்த மரபுகள் மூட்டைக் கட்டப்பட்டு, பெரியவர்கள் காலத்தோடு புதைக்கப்படுகின்றன. ஒரு சமுதாய பரிணாம வளர்ச்சியில், அடுத்த தலைமுறை கலாச்சார மரபுகளையும் மதிப...
காப்பாற்றினால் தண்டனையா? - புதிர்க்கதை -தொடர்-1- நன்மொழி பதிப்பகம் - எ.சோதி அவர்கள்- பாலமுருகன் கணபதி 06.12.2021 3:03
" காப்பாற்றினால் தண்டனையா?" என்ற இப்புதிர்கதை உங்கள் சிந்திக்கும் திறனுக்கு ஒரு சவாலாக அமையும்.. தங்களுக்கு பதில் தெரிந்தால் 93616 77338 என்ற நமது நிலைய எண்ணிற்கு பதிலை வாட்சப் பண்ணுங்க. இக்கதையை எழுதியவர் எ.சோதி ஐயா அவர்கள்
வரம் தந்த வரம் - சிறுகதை நேரம் - தொடர்-13 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 03.12.2021 8:56
நகைச்சுவையை விரும்பாத மக்கள் எவரும் இலர். மற்றவர்களை சிரிக்க வைத்து அதில் இன்பம் காணும் நகைச்சுவையாளர்களை சுற்றி மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும் இக்கதையிலும் அப்படித்தான் நகைச்சுவையில் கிடைத்த வரம் ஒன்று மற்றொரு வரத்தை கதையின் நாயகனுக்கு வழங்குகிறது
யார் குற்றவாளி? - சிறுகதை நேரம் - தொடர்-12 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 01.12.2021 6:27
தனது பணத்தை இழந்த பெண்மணிக்கு நீதி கிடைப்பது போல் அமைந்த இக்கதையானது, ஒருவன் தவறு செய்துவிட்டு நீண்ட காலம் தப்பித்துக்கொண்டே இருக்க இயலாது. நிச்சயம் அவனது தவறுக்கு தண்டனை உண்டு என்பதை விளக்குகிறது.
பெண்களை தொழில்முனைவோராக்கும் அருமையான திட்டம் - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல் - தகவல் நேரம் -5 (30.11.2021) 30.11.2021 1:52
சேலம் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டு ஊரகப்பகுதிகளில் உள்ள பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கிட வெள்ளாடு / செம்மறி ஆடுகள் வழங்கப்படுகின்றன. தகுதியான பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பாம்புக்கடி விழிப்புணர்வு - செய்யவேண்டியது என்ன? - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல் - தகவல் நேரம் -6 (29.11.2021) 29.11.2021 3:31
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்துகள் உள்ளன.. சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
Lignende podcasts
Replaio er ikke podcastudgiver; programmernes navne, coverbilleder og lyd tilhører deres ophavsmænd og distribueres via offentlige RSS-feeds.