Ezhuna

எழுநா

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: ezhunaonline.com

Autor

Ezhuna

Kategorie

Society

Web podcastu

ezhunaonline.com

Nejnovější epizoda

29. kvě 2025

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

ஈழத் தமிழ் உணவு மரபுரிமை | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 28.07.2022

கொழும்பிலுள்ள பிரபலமான ‘சைவ உணவகங்கள்’ (???) என அழைக்கப்படும்  மரக்கறி உணவுச்சாலையில் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் உணவுப் பாணியிற் சமைக்கப்பட்ட அல்லது பாரம்பரிய ஈழத்தமிழ் உணவுகளை இலங்கையில் எங்கு சாப்பிடலாம் என்ற ஒரு உரையாடல் எழுந்தது. அப்படியொரு இடம் இலங்கையின் தலைநகரத்திலோ – தமிழ் மக்களின் பூர்வீகமாக வாழ்ந்து வருமிடங்களிலோ இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை....

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் |மாறுபாடில்லா உண்டி – அறிமுகம் | தியாகராஜா சுதர்மன் 28.07.2022

தமிழர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் எனும்போது அவர்கள் வாழும் இடத்துக்கு ஏற்பவும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்பவுமே அவர்களது உணவுப்பழக்கங்கள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் காணப்படுள்ளன. இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகளைக் கொண்டாலும் உணவுப்பழக்கவழக்கத்தின் அடிப்படைகள் ஒன்றாகவே இருந்துள்ளன. எமது பிரதான உணவு நெல் அரிசி சோறு ஆகும். இவற்றுடன் குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களும் பயன்பாட்டில் இரு...

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு. புஷ்பரட்ணம் 26.07.2022

1970களிலிருந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விஞ்ஞான பூர்வமான தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனித வரலாறும், நாகரிக வரலாறும் தோன்றிவிட்டதை உறுதிசெய்கின்றன. இவை தமிழ், சிங்கள மக்களின் பூர்வீகவரலாறு, பண்பாடு பற்றிய பாரம்பரிய வரலாற்றுக் கதைகளையும், நம்பிக்கைகளையும் மீளாய்வு செய்யத் தூண்டியுள்ளன. அவற்...

பண்டைய இலங்கையில் போரும் நல்லிணக்கமும் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர் 26.07.2022

பண்டைக் காலங்களில் அவ்வப்போது இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்புகளை உள்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்மீது தொடுத்த யுத்தங்களாக சில பேரினவாத சித்தாந்தவாதிகள் சித்திரிக்கின்றனர். அத்தகைய யுத்தங்கள் நிலப்பிரபுத்துவ மன்னராட்சி காலத்துக்கே உரிய லட்சணமாகும். இத்தகைய யுத்தங்கள் உலகம் பூராவும் நடைபெற்றுள்ளன.  உதாரணத்துக்கு சொல்வதானால் ரோஜாக்களின் யுத்தத்தைக் கூறலாம். கடந்த காலவரலாற்றை திரிபுபடு...

மலையக மக்களும் எட்டாக்கனியாக்கப்பட்ட கல்வியும்! | கண்டி சீமையிலே - 2 | இரா. சடகோபன் 25.07.2022

1893 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சுமார் எட்டு பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் இடம் பெற்றிருந்த போதும் பெருந்தோட்டத்துறை இதைப் பற்றி ஒன்றும் அறியாதிருந்தது போல் எதுவித ஆர்ப்பாட்டங்களும் இன்றி மிக அமைதியாகவே இருந்தது. இதற்கான முக்கியகாரணம் தோட்ட துரைமார்கள் தோட்டத் தொழிலாளரை தொழிற்சங்க ரீதியில் ஸ்தாபனப்படுத்த எந்த ஒரு வெளிச் சக்தியையும் நெருங்க விடாது தோட்டத் தொழிலாளரை தனிமைப்படுத்தி வைத்தி...

விவசாயம் வணிகமானதால் சுயசார்பு உற்பத்தி மழுங்கடிக்கப்பட்டது | உணவு நெருக்கடி | பொ. ஐங்கரநேசன் 24.07.2022

பொருளாதார நெருக்கடி உணவுத்துறையின் மீது தான் முதலாவது தாக்கத்தை செலுத்தியுள்ளது. கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது எடுத்த சில முட்டாள்தனமான நடவடிக்கைகளே உணவு நெருக்கடி ஏற்பட உடனடிக் காரணமாக அமைந்தது.  இலங்கையில் சரியான கழிவு முகாமைத்துவம் இல்லாததன் காரணமாக பல இடங்கள் குப்பைமேடுகளாக மாறிவருகின்றன. இந்தக் குப்பைகளை பயன்படுத்தி இயற்கைப் பசளைகளைத் தயாரித்திருக்க முடியும்.  10ஆண்டுத் தி...

வடபகுதிக் கடலோடும் படகுகள் | வடபுல கடலும் நெருக்கடிகளும் | கலாநிதி சூசை ஆனந்தன் 24.07.2022

2021 ஆம் ஆண்டு கணிப்பின்படி வடபகுதியில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 14,674 ஆகும். இது இலங்கையின் மொத்தப்படகுகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதமாகும். இப்பிரதேசத்தில் OFRP  எனப்படும் வெளி இணைப்பு இயந்திரம் பூட்டப்பட்ட கண்ணாடி நாரிழையிலான படகுகளே கூடுதலாக மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆரம்பகாலங்களில் மரபுவழியிலான கட்டு வள்ளங்கள் மரத்தினாலாக்கப்பட்டு, பயன்படுத்த...

ஊரில கிடைக்குற சருகுகளைக்கொண்டு சேதனப்பசளை செய்ய தொடங்கினேன் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள்| ந.சிவபாலன் 23.07.2022

சேதனப் பசளை உற்பத்தியை நான் ஐந்து வருடமாக செய்துகொண்டிருக்கின்றேன். அதோட சேர்த்து மண்புழு உரமும், காளான் உற்பத்தி செய்கிறேன். எங்களுக்கு வேம்பு, நாவல், இலுப்பை போன்ற கஞ்சல்கள் எல்லாம் தாராளமாக எடுக்கக்கூடியதாக இருக்குது. என்னட்ட மாடு இல்லை. ஆனால் மேய்ச்சல் மாட்டுச் சாணகம் தரவையில மேயுற இடங்களில இருந்து எடுத்து இதைச் செய்து வருகிறேன். என்னுடைய பசளையை வைத்து வீட்டுத் தோட்டம் செய்து அது நல்லா வந்திரு...

யாழ்ப்பாணமும் மருத்துவ – அறிவியல் கற்கைகளின் பரவுகையும்! | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 23.07.2022

மருத்துவர் ஜோன் ஸ்கடரை அடுத்து அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 2 ஆவது தகுதிவாய்ந்த மருத்துவர் நேத்தன் உவோட் ஆவர். மருத்துவர் நேத்தன் உவோட்டின் வருகையைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை குருமடத்தின் (Batticotta Seminary) முதல்வராக இருந்த டானியல் பூவர், யாழ்ப்பாணத்தில் மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பிப்பதன் அவசியம் பற்றி 1835 இல் அமெரிக்காவிலுள்ள மிசன் பணியகத்துக்குக் கடிதம...

மாக்ஸ்சிசக் கொள்கை அறிமுகமாதல் | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் 22.07.2022

1890 ஆம் ஆண்டுகளிலிருந்தே மாக்ஸ்சிசச் சிந்தனைகள் இலங்கைக்கு அறிமுகமாயின. இக் காலப்பகுதியில் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிற்சங்கப் போராட்டங்களும் முனைப்புப் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர்கள் தங்களுக்கிடையிலான இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் என்பவற்றைக் கடந்து வர்க்கங்களாக அணிதிரண்டனர். 1930 களில் பெருமளவிலான மலையாளத் தொழிலாளர்கள் இலங்கையின் பல்வேறு தொழிற்துறைகளிலும் வீடுகளிலும் கடைகளிலும் த...

பனையே எங்கள் வாழ்வியலின் ஆதாரம் | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன் 20.07.2022

னை ஒரு காலத்திலே எங்கள் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயிருந்தது. இலங்கை தேசம் பல்லினப் பனை மரங்களின் இருப்பிடமாக, வாழிடமாகத் திகழ்ந்திருந்ததன் சான்றுகளாக காலனித்துவ கால நூல்களே இன்று எம் மத்தியில் எஞ்சியிருக்கின்றன.  தாளிப்பனையின் ஓலையை விரித்து வைத்தால் 12 தொடக்கம் 15 அடி ஆரையுள்ள அரை வட்டத்தை ஆக்கமுடியுமெனவும் அதன் பரப்பளவு அண்ணளவாக 150 சதுர அடிகளாகவிருக்கும் எனவும் காலனித்துவ கால நூல்களிலே கு...

ஈழத்துக் கீழைக்கரை – ஓர் வரைவிலக்கணம் | ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன் 19.07.2022

காலனிய காலத்திலிருந்தே “இலங்கையின் கிழக்குக்கரை” கிழக்கு மாகாணத்தை சாதாரணமாகக் குறிப்பிடப் பயன்பட்டு வந்த சொல் தான். ஆனால் அதை சமூகவியல் ரீதியில் வரையறுக்கப்பட்ட கலைச்சொல்லாக முன்வைக்கவேண்டிய தேவை ஐரோப்பிய அறிஞர்களுக்கு ஏற்பட்டிருந்தது. தமிழ் அறிஞர்கள் ஊன்றிக் கவனிக்கத் தவறிய, அல்லது மேலோட்டமாக மட்டும் தொட்டுச் சென்ற முக்கியமான இரு பண்பாட்டு அம்சங்களை “இலங்கையின் கிழக்குக் கரை”யில் அவர்கள் அடையாளம...

மலையக இளைஞர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வியும் தொழில்சார் பயிற்சியும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி 18.07.2022

மலையகத் தமிழரிடையே படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ளதோடு, பாடசாலை செல்லாதோர் விகிதம், பாடசாலைக்கல்வியை இடைநடுவில் விட்டு விலகுவோரின் விகிதம் என்பன உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. மலையக மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலைமை, பிள்ளைகளின் கல்வி தொடர்பான அவர்களது பெற்றோரின் அலட்சியப்போக்கு, பிள்ளைகளிடம் கல்வியில் ஆர்வம் போதாமை, இரண்டாம் நிலைக்கு அப்பால் கல்வியைத் தொடர்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வே...

ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 16.07.2022

ஐடா ஸ்கடர் 1912 இல் பெண்களுக்கென தனியான ஒரு மருத்துவக்கல்லூரியை ஆரம்பிக்கும் எண்ணத்தை வெளியிட்ட போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டார். அமெரிக்க மிசனரியினரும் ஆரம்பத்தில் அனுமதியளிக்கவில்லை. ஐடா ஸ்கடரின் பிரார்த்தனை 1918 இல் நிறைவேறியது.  ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி 1918.08.12 அன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்க மருத்துவ மிசன...

கோத்தாபயவுக்கு பின்னர்.. அடுத்தவர் யார்? எப்படி தெரிவாவார்? | சட்டம் அறி 4 | சட்டத்தரணி குருபரன் 16.07.2022

ஜனாதிபதியொருவர் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்னர் பதவியிலிருந்து விலகினால் அதைத் தொடர்ந்து இடம்பெறும் அரசியலமைப்புச் செயன்முறை என்ன என்பது தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.  #SriLankaCrisis #GotabayaRajapaksa #SriLankaprotest #GotabayaResign #SLFPChairman #SriLanka #LK #SriLankaCrisis #SriLankaEconomicCrisis #SriLankaParliament #SriLankaNewPresi...

18ம் நூற்றாண்டில் வட இலங்கையில் வேளாளர்கள் : யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்கு முன்பும் பின்பும் – பகுதி 2 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 15.07.2022

'யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்' என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் த...

உள்ளுர் உற்பத்திகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | வி.ஞானமூர்த்தி, செம்புலம் உற்பத்தி 14.07.2022

உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களை பெறுமதி சேர்த்து உற்பத்தி செய்வது எங்களுடைய நோக்கம்.  இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிய பின்பு நாங்கள் விவசாயத்தைத் தான் மேற்கொண்டோம். விவசாயம் இலாபகரமாக இல்லாமையால், மலியுற நேரங்களில் கிடைக்கின்ற காய்கறிகளை காயவைத்து சந்தைப்படுத்த தொடங்கினோம். அதனூடாக எங்களுடைய உற்பத்தியை விரிவுபடுத்தினோம். சிறுதொழில் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செய்வோரோடு தொட...

படித்த சமுதாயம் புதிய சிந்தனைகள் | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன், சட்டத்தரணி, சிரேஷ்ட ஊடகவியலாளர் 13.07.2022

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி காரணமாக கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாகின.  ஏ. ஈ. குணசிங்க என்ற ஆரம்பகால தொழிலாளர் தலைவர், நகர்ப்புற தொழிலாளர்களான துறைமுக, ரயில்வே , டிராம்வே தபால் துறை, கரத்தை (வண்டியில்) இழுப்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், அச்சுத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாள...

அடையாள அரசியலும் இலங்கையும் | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் 09.07.2022

தமிழர்கள் தங்களுடைய போராட்ட அரசியலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 வருடங்கள் எனலாம். இந்த எழுபது வருட காலத்தில் தமிழர்களின் அடிப்படைக் கொள்கையும் அதனை அடைவதற்கான போராட்ட வடிவங்களும் அணுகுமுறைகளும் பலவாறு மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இவை தமிழர்களுடைய அடிப்படை அரசியல் இருப்பை, அதனூடான அரசியல் உரிமைகளை எந்தளவுக்கு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்றொரு கணக்கெடுப்புக்கு வருவோமா...

நியூயோர்க் மாவட்ட நீதிமன்ற வழக்கு இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுமா? | சட்டம் அறி 3 | சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் 07.07.2022

அமெரிக்காவின் ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தாங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி இலங்கை மீது நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கு இலங்கை மீது தொடரப்படுவதற்கான காரணங்கள் மற்றும் இந்த வழக்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி கலாநித...

மாறுபாடில்லா உண்டி | மாறுபாடில்லா உண்டி – அறிமுகம் | தியாகராஜா சுதர்மன் 07.07.2022

உடல் நலத்தைப் பொறுத்தவரையில் அருகி வரும் பாரம்பரிய உணவுமுறைகள் தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக்குறைபாடுகள் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடுகளுக்கு காரணமாகின்றன.  எனவே இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் பொருளாதார ரீதியில் இலகுவாகப் பெறக்கூடியனவாகவும் உணவுவகைகள் இருத்தல் அவசியம். இதற்கு சித்தமருத்துவத்தில் சித்தர்கள் எவ்வகையான உணவுகளை கூறியிருக்கின்றார்கள் என்பதை அவை எ...

கட்டிப்போட்ட கயிறுகளும் சங்கிலிகளும் | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன் 06.07.2022

இன்னமும்கூட தமிழ்ச் சமூகத்தில் பெண்கள், ஆண் அடிமைத்தனம் அல்லது ஆணாதிக்க வாதத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பதற்கு அவர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் இந்துமதமும் அதில் மிக தந்திரமாக நுணுக்கமான முறையில் பின்னப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் “பதிவிரதம்” என்ற மிகப் பிற்போக்கான எண்ணக்கருவும் காரணமாகும் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.  பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரையில் இந்த நிலைமையே ஆண...

மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 05.07.2022

சென்னையில் 1890 களில் ஒருநாள் இரவு பிரசவத்தின் போது மருத்துவம் பார்க்க ஒரு பெண் மருத்துவர் இல்லாத காரணத்தால் 3 பதின்ம வயதுப் பெண்கள் மரணித்தமை ஐடா ஸ்கடர் என்ற அமெரிக்க இளம்பெண்ணை மருத்துவர் ஆக்கியது. ஐடா சோபியா ஸ்கடர் – மருத்துவ உலகின் வரலாற்றை மாற்றி, புதிய அத்தியாயம் படைத்த பெண் மருத்துவ வல்லுநர்களில் ஒருவர் என்று அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்டுள்ளார். ஐடா தான் ஒரு மருத்துவராக வந்து இந்தியாவில் பெ...

விரைந்து மறையும் சுதேசிய விளையாட்டுக்கள் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 04.07.2022

காலனிய காலத்தோடு நடந்தேறிய பண்பாட்டு மாற்றங்களில் பிரதானமானவொன்று சுதேசிய விளையாட்டுக்களின் தேய்வும் – அதனிடத்தை மேற்கத்தைய விளையாட்டுக்கள் இட்டு நிரப்பியமையுமாகும். இது விளையாட்டுக்களை மட்டுமின்றி அதன் நினைவுகளைக் கூட எங்கள் எண்ணங்களில் இருந்து பெரிதும் துடைத்தளித்து விட்டன. ஆங்காங்கு பாரம்பரியமாக தொடர்ந்த சிலவும், இன்றைய கல்வி உருவாக்கிய ‘படிப்பு’ எனும் பௌதீக – உளவியலின் சிக்கல்கள், அந்தப் படிப்...

18ம் நூற்றாண்டில் வட இலங்கையில் வேளாளர்கள் : மேலாதிக்கச் சாதிக்குழுமத்தின் சமூக வரலாறு – பகுதி 1 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 02.07.2022

இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

Poslouchej podcast எழுநா v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály