Ezhuna

எழுநா

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: ezhunaonline.com

Autor

Ezhuna

Kategorie

Society

Web podcastu

ezhunaonline.com

Nejnovější epizoda

29. kvě 2025

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

சில்லறைக்கங்காணி; அடக்குமுறையின் இன்னொரு ஆயுதம் | கண்டி சீமை | இரா சடகோபன் 07.11.2022

கசக்கிப் பிழிந்து, அடக்கி ஆண்டு, வன்முறையின் பிடியில் வைத்திருந்து, தொழிலாளரிடமிருந்து உழைப்பை உச்ச அளவில் பெற்றுக் கொள்கின்ற பாங்கு பெருந்தோட்ட வரலாற்றின் முழுப்பக்கங்களிலும் ஒரு கறைபடிந்த காரணியாக இருந்தது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதற்கென பல்வேறு வழிமுறைகளை துரைமார்கள் தேர்ந்தெடுத்து கடைப்பிடித்துள்ளனர் என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. 

தமிழ் வணிகன் பற்றிக் கூறும் பெரிய புளியங்குளம் கல்வெட்டுக்கள் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம் 05.11.2022

வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் ஒரு உயரமான கற்பாறைத்  தொகுதி காணப்படுகிறது. சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன இங்கு மொத்தமாக 38 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள 38 கல்வெட...

வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் உருவாக்கிய மருத்துவர் ஐரா கௌல்ட் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 04.11.2022

மருத்துவர் ஐரா கௌல்ட் 1850 இல் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மருத்துவமனை (FINS Hospital - தற்போதைய போதனா  மருத்துவமனை) ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவமனையின் முதலாவது டிஸ்பென்சராகவும் முதலாவது வதிவிட சத்திரசிகிச்சை மருத்துவராகவும் கடமையைப் பொறுப்பேற்றார். மருத்துவர் கிறீன், மானிப்பாயில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடமையாற்றியவாறு யாழ். நகரத்தில் 1850 இல் தாபிக்கப்...

விவசாயமும் தமிழர் வாழ்வியலும் | இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் | கந்தையா பகீரதன் 03.11.2022

இந்த உலகில் வாழ்கின்ற மனித இனம் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரீகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. இதில் மூத்த இனமாக தமிழினம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதனால்தான் நாமக்கல் கவிஞர், தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு' என்று தமிழரை அடையாளப்படுத்தினார். 

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் - பகுதி 3 | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம் 02.11.2022

கனடாவின் சமஷ்டியின் வரலாறு 'பிரிந்து வேறாதல்' 'ஒன்றாக இணைதல்' என்ற இருவேறு செயல்முறைகளும் சமாந்தரமாகச் செயற்பட்டதொன்றாகவே இருந்துள்ளது. சமஷ்டிச் சட்டம், 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புக்களும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன் 31.10.2022

வடக்கு - கிழக்கு மாகாணத்தின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக  விவசாயத்துறை விளங்குகின்றது.  இவ்விரு மாகாணங்களினதும் பொருளாதாரத்தில் 15 சதவீதமான பங்களிப்பை விவசாயத்துறை வழங்கிவருவதுடன் 65 சதவீதமானோர் வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்கும் துறையாகவும் இது செயற்பட்டு வருகின்றது. நிலப்பாவனை என்ற வகையில்  விவசாயச் செய்கைக்காக கிழக்கு மாகாணத்தின் 42 சதவீதமான நிலப்பரப்பும், வடமாகாணத்தின் 33...

வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு | தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன் 30.10.2022

மகத்தான ஒக்ரோபர் புரட்சி (1917) ருஷ்யாவை "சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்" என மாற்றிப் புனைந்து முழு உலக நாடுகளது மக்களுக்கும் நம்பிக்கை நட்சத்திமாசத் திகழ்ந்தது.  எழுபதாம் ஆண்டுகள் வரை விடுதலை நாடும் மக்களுக்குச் 'சோசலிசம்' என்ற கருத்தியல் உத்வேகமூட்டும் நிவாரணியாக இருந்தது. அநேகமான நாடுகள் 'ஜனநாய சோசலிச', 'சோசலிச ஜனநாயக' என்பதான அடைமொழிகளை ஒட்டி தம்மை அழகுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்...

கோட்டைகளுக்குப் பதிலாக பாதைகள் | இலங்கையின் இனவாத அரசியல் | பி.ஏ. காதர் 28.10.2022

1818 இல் கிளர்ச்சி வெடிக்கும் வரை தமக்கு சரியான தகவல் கிடைக்காததற்கும், கிளர்ச்சி  வெடித்தபின்னர் அதனை நசுக்குவதற்கும்  தாம் மிகுந்த சிரமப்பட்டதற்கும் இரு காரணங்களை பிரித்தானியர் இனம்கண்டனர். ஒன்று கண்டியை சிறப்பாக கண்காணித்து நிர்வகிப்பதற்கு மலைப்பாங்கான கண்டி பிரதேசத்தினை பாதைகளால் இணைக்கவேண்டும் . மற்றையது தமக்கு விசுவாசமான உள்ளூர்த் தலைவர்களை உருவாக்கி தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள...

வேடரும் காலனியமும் | வேடர் மானிடவியல் | கமலநாதன் பத்திநாதன் 27.10.2022

இலங்கைத்தீவின் பூர்வீககுடிகளாக வேடர்கள் காணப்படுகின்றமை பலருக்கும் தெரிந்த விடயமாகும். அண்மைக்காலமாக வேடர் மானுடவியல் சார் பார்வைகள் பல ஆய்வாளர்களிடையே அகலித்துள்ளன. இது இலங்கையர்களான நமக்கும் மிகத் தேவையான விடயப்பொருள்தான். காரணம் இன்றைய  நவீன உலகானது  வரலாறு, பண்பாடு  மற்றும் மானிடவியல்  சார்ந்த ஆய்வாளர்களையே பெரிதும் வேண்டி நிற்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வகையான மானி...

கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகள் : கல்வெட்டுக்களும் பொறிப்புகளும் | ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன் 26.10.2022

கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு மூன்று வகையான ஆதாரங்களை நாம் பயன்படுத்தலாம். முதலாவது பொறிப்புச் சான்றுகள், இரண்டாவது எழுத்துச் சான்றுகள், மூன்றாவது வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகள். பொறிப்புச் சான்றுகள் (Epigraphic Sources): - அண்ணளவாக பொ. மு 4ஆம் 3ஆம் நூற்றாண்டிலிருந்து கீழைக்கரையெங்கணும் தொடர்ச்சியாக கல்வெட்டுக்களும் உலோக மட்பாண்டப் பொறிப்புகளும் பரவலாகக் கிடைத்துள்ளன. இவற்றில...

இலங்கையின் பாலுற்பத்தித் துறை - ஒரு பார்வை | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன் 21.10.2022

இலங்கையில் 1977 ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட முன்னர் அன்றைய பால் தேவையின் 80 %  உள்ளூர் உற்பத்தியில் இருந்தே நிறைவு செய்யப்பட்டிருந்தது. பல்தேசிய பால் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கைச் சந்தையில் தமது பாலுற்பத்திகளை குறிப்பாக பால் பவுடரை அறிமுகப்படுத்திய  பின் படிப்படியாக இலங்கை மக்களின் பால் நுகர்வு கலாசாரம் மாற்றமடையத் தொடங்கியது. 2020 வருட இலங்கை மத்திய வங்கி ஆண்டறி...

வன்செயல் மரபுரிமையும் ஈழத்தமிழர்களும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 19.10.2022

அனைத்து வகைப்பட்ட போர்கள், இனவழிப்புக்கள், சர்வாதிகாரம், காலனியங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வெளிப்பாடுகளை மரபுரிமையின் பகுதியாகக் கொள்ளும் போக்கு முக்கியமானதாகும். இவற்றை இன்று ‘வன்செயல் மரபுரிமை’ (violence heritage) என்ற பெயரால் இப்புதிய பார்வைகள் சுட்டுகின்றன. இவை இருண்ட, எதிர்மறையான, வலிமிகுந்த, அதிருப்தி நிறைந்த, கடினமான நிலைமைகளது வாழும் சாட்சியங்களாகப் பொதுவாக வரையறைக்கப்படுகின்றன. இதே...

தொழிலாளர் எழுச்சி குரல்களின் எதிரொலிகள் | கண்டி சீமை | இரா.சடகோபன் 18.10.2022

அரசாங்கத்தினதும் துரைமார்களதும் தொழிலாளர் விரோத நடத்தைகள், சட்டங்கள், கொள்கைகள் தொடர்பிலான சேர் பொன். அருணாசலத்தின் கண்டன நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து எரிச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தன. அதன் காரணமாக பல அரச உயர் அதிகாரிகள் சேர். பொன். அருணாசலம் அரசின் சுமுகமான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுகின்றார் என்று காலனித்துவ செயலாளருக்கு புகா...

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் - பகுதி 2 : பிரஞ்சும் ஆங்கிலமும் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம் 17.10.2022

கனடா என்னும் பரிசோதனையின் மிகவும் சிக்கலான பிரச்சினை மூலமாக, பிரஞ்சு மொழிபேசும் கனடா மக்களுக்கும், கனடாவின் பிறமக்களுக்கும் இடையிலான பிளவு இருந்துவந்துள்ளது. கியூபெக்கின் பிரஞ்சுமொழி பேசுவோர் அனைவரிடமும் பிரஞ்சு என்ற அடையாள உணர்வு ஆழமாக உள்ளது. அவர்களில் தனிநாட்டை அல்லது தனித்த இறைமையைக் கோருவோர், சமஷ்டி ஆதரவாளர் என்ற இரு பிரிவுகள் இருந்தாலும் யாவரும் பிரஞ்சு என்ற அடையாள உணர்வாலும், கியூபெக் ஒரு த...

வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு - பகுதி 1 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 14.10.2022

1806 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கக் கட்டளைச் சட்டம் உயர்சாதியினருக்குரிய மரியாதைகளை மரபுவழி வழமைகளின்படி வழங்கவேண்டும் என்று விதித்தது. (அருமைநாயகம் 1976). 1859 ஆம் ஆண்டில் குடியேற்ற நாட்டுச்செயலாளராக இருந்த எமர்சன் ரெனன்ட் சாதிமுறை கொடுமையானது எனக் கருத்துரைத்தாராயினும், சாதிமுறை மீது அரசாங்கம் நேரடியாகத் தலையிடுவது முறையன்று என்ற முடிவுக்கே வந்தார். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட நி...

பெருந்தோட்டச்சமூகம்: சமூக மாற்றங்களும் நகர்வுகளும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி 13.10.2022

இலங்கையில் வாழும் இந்திய தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேறுபட்ட பெயர்களால் அழைப்பது அவர்கள் தமது இனஅடையாளத்தை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக டேனியல் என்ற அறிஞர் கூறுகிறார். 1946இல் இந்தநாட்டின் மொத்தசனத்தொகையில் இந்தியத்தமிழர் 11.7 வீதமாக இருந்தனர். ஆனால் 1981 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டில் அவர்களது சனத்தொகைப்பங்கு 5.5 வீதமென மதிப்பிடப்பட்டது. இவ்விரு சனத்தொகைக...

உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சர்வதேச மட்டத்தில் சந்தைவாய்ப்பை பெறுவதே எமது நோக்கம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | பிரதாப் புஸ்பமாலா 12.10.2022

நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டீரியல்ஸை இறக்கி இங்க இருந்து ஒரு பொருளை செய்வதை விட இங்க தேவையான வளம் இருக்கு. அந்த வளத்தை பயன்படுத்தி முடிவுப்பொருளை சர்வதேச மட்டத்தில் சந்தைப்படுத்த வேண்டும் என்டுதான் இதை தொடங்கியிருக்கிறம். ஆனால் அந்த அளவுக்கு நாங்கள் என்னும் வளரவில்லை. உற்பத்தியாளர் எண்ணிக்கை கூடினாத் தான் அதை செய்ய முடியும். உள்ளூர் மக்கள் இதை வாங்குவது குறைவு. அவர்கள் இதை ஆடம்பரப் பொருளாகத்தா...

குயர் மக்கள் பற்றிய சமூகப்பார்வை : தனிநபர் வாழ்வு அவர்களது தீர்மானம் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்ஷி கபிலன் 11.10.2022

குயர் மக்கள் என்போர் யார்? அவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? என்றவாறாக ஏராளமான வினாக்கள் எம்மத்தியில் காணப்படுகின்றன. பால், பால்நிலை, பாலீர்ப்பு போன்ற விடயங்களின் அடிப்ப...

தமிழர் தொடர்பாக பலரும் அறிந்திருந்த 5 பிராமிக் கல்வெட்டுக்கள் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம் 10.10.2022

தமெத”எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுக்களும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில், மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.  இக்கல்வெட்டுக்களும் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும். ...

மூலிகை மருந்துகள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால. சிவகடாட்சம் 08.10.2022

அரபு நாட்டவர்களால் அருமருந்தாக எண்ணப்படுவது கருஞ்சீரகம். சாவு ஒன்றைத்தவிர மீதி எல்லா நோய்களையும் தீர்த்துவைக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு என முகம்மது நபி அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும் உள்ளது. ஏராளமான இரசாயனப்பொருட்கள் கருஞ்சீரகத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  சதகுப்பை மூலக்கடுப்பு, தலைவலி, காய்ச்சல் என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். வயிற்றோட்டம், வாய்வு, செமியாக்குணம், வயிற...

இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரி | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 07.10.2022

மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சையால் பண்டிதர் முத்துத்தம்பி உயிர்பெற்றமை அன்று யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற சுதேச மருத்துவராக விளங்கிய இளையதம்பி அவர்களது மைந்தன் வைத்திலிங்கம் அவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தையும் சத்திரசிகிச்சை முறையையும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. வட்டுக்கோட்டையில் மருத்துவப் பணியை ஆரம்பித்த மருத்துவர் கிறீன் அமெரிக்க மிசன...

தமிழ் காங்கிரஸ் X தமிழரசுக் கட்சி | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் 06.10.2022

1950 கள்  தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948 இல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950 களில் இருந்தே அவருடைய பிரசாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினா...

கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் - பகுதி 4 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் 05.10.2022

தமிழ் சிங்கள மக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் மொழிகளின் வேறுபாட்டால் தோன்றியதெனக் கூறும் அறிஞர்களில் சிலர்  இனத்தால் அவர்களின் மூதாதையினர் இயக்கர், நாகர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர்.  ஆயினும் அம்மக்களின் பண்பாட்டுடன் சிங்கள மக்களுக்குள்ள தொடர்புகளும், நினைவுகளும் பௌத்த மதத்தின் வருகையோடு தோன்றிய புதிய பண்பாட்டால் மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டன என்றே கூறலாம். ஆனால் இலங்கைத் த...

தொழிலாளர்கள் மீதான சட்டத்தின் பாய்ச்சல்; எதிர்விளைவுகளும் மாற்றங்களும் | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன் 04.10.2022

கோ. நடேசய்யரின் அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரேயே நகர்ப்புற மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மிக உரத்துக் குரல் கொடுத்தவர் சேர். பொன். அருணாசலம் (1853 - 1924) என்றால் அது மிகையாகாது.  இவரது கருத்துக்கள் மிக ஆணித்தரமாகவும்  உச்சந்தலையில் சம்மட்டி கொண்டு  ஓங்கி அடிப்பது போலவும் காணப்பட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குக் க...

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் சிறுதானியங்கள் | மாறுபாடில்லா உண்டி | தியாகராஜா சுதர்மன் 03.10.2022

வரகு, கம்பு, சோளம், சாமை, குரக்கன், தினை போன்ற சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. சிறுதானியங்கள் பெரும்பாலும் வறட்சியிலும் விளையக்கூடிய பயிர்களாகும். ஏனைய தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். B வகை உயிர்ச்சத்துகளையும், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், நாகச்சத்து போன்ற கனிமங்களையும் கொண்டுள்ளன. சிறுதானியங்கள் &nbsp...

Poslouchej podcast எழுநா v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály