uk

Raja Nagarajan

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Kids TA ↓ Епізодів: 241

Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:ainkaran2020@gmail.com

Автор

Raja Nagarajan

Категорія

Kids

Сайт подкасту

podcasters.spotify.com

Останній епізод

15 кві 2026

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

நூற்றி முப்பத்தி ஒன்பதாவது கதை:மிக மோசமான விஷம்:(The Worst Poison) 05.01.2023

இது ஒரு எகிப்திய நாட்டுக் கதை. இதன் கதாநாயகன்,ஒரு டாக்டர். பெயர்-Moses Ben Maimon பொதுவாக,டாக்டர்களின் கடமை, உயிரை காப்பது. கொலை செய்வது இல்லை. கதாநாயகன், டாக்டரை ஒருவர் கொலை செய்ய வந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தார்? கதையை கேளுங்கள்...

நூற்றி முப்பத்தி எட்டாவது கதை: ஒரு அரிய தம்பதிகள்: பில்மோன்- பாஸி (A Rare Couple: Philmon-Baucis) 30.12.2022

இது ஒரு கிரேக்க புராண கதை. உங்களில்,பல பேருக்கு,ரோமியோ-ஜுலியட், லைலா-மஜ்னு,அம்பிகாபதி-அமராவதி கதைகள் தெரிந்திருக்கும். அவர்கள் மாதிரி,ஏன் அவர்களை விட ஒசத்தியான ,ஆனால்,அதிகம்  தெரிந்திராத தம்பதி தான், பில்மோன்- பாஸி யார் இவர்கள்? இவர்கள் கதை என்ன? தெரிந்து கொள்வோமோ....

நூற்றி முப்பத்தி ஏழாவது கதை:புத்திசாலித்தனமான மோசடியை முறியடித்த அதிபுத்திசாலியான பெண்மணி (A smart fraud spoilt by a smarter lady) 22.12.2022

இது ஒரு இங்கிலாந்து நாட்டுக்கதை. 16ம் நூற்றாண்டில்,ஆங்கிலேயர்கள், காலனிகளில் வேலை பார்க்க  கடல் கடந்து தனியாக போவர்கள்.  சேமித்த பணத்தை, நம்பிக்கையானவர்களிடம்  கொடுத்து தங்கள் குடும்பத்தினர்க்கு  அனுப்புவார்கள். இந்த கதையிலும்,ஒரு நபர், தன் காப்டன்  மூலமாக தன் மனைவிக்கு  பணம் அனுப்புகிறான் அந்த காப்டன்,ஒரு திட்டம் மூலம், 90 சத பணத்தை அபேஸ் பண்ண  நினைக்கிறான். ஆனா...

நூற்றி முப்பத்தி ஆறாவது கதை:பொது அறிவுள்ள இளவரசி(A Princess with Commonsense) 16.12.2022

இது ஒரு ஐரோப்பா நாட்டுக்கதை. பொதுவாக,அரசர்கள், தங்கள் குமாரிகள் அழகாகவும் வசீகரமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். இது மட்டும் போதுமா? போதாது என்கிறது இந்த கதை. அழகோடு பொதுஅறிவும்-Commonsense- குறிப்பாக-இளவரசிகளுக்கு இருக்க வேண்டும் என்கிறது,இந்த கதை அழகும் பொது அறிவும் உள்ள ஒரு ராஜகுமாரி பல  சாகஸங்கள் புரிந்த்து தன் நாட்டையும் தன் உயிரையையும் காப்பாற்றி கொள்கிறாள். எப்படி? கதையை கே...

நூற்றி முப்பத்தி ஐந்தாவது கதை: நடப்பது நன்மைக்கே-3 குட்டிக் கதைகள்(What is happening is for good) 08.12.2022

இதில் 3 குட்டிக் கதைகள். 1.யூத நாட்டுக் கதை 2.இந்திய நாட்டுக் கதை 3.சீன நாட்டுக் கதை. மூன்றும் ,ஒரே கருத்தை தான் சொல்கிறது. வாழ்க்கையில் எது நடந்தாலும், அது நன்மைக்கே என்று நம்பினால், நிம்மதியாக இருக்கலாம். எப்படி? கதைகளை கேளுங்கள்....

நூற்றி முப்பத்தி நாலாவது கதை:குருட்டு பெண் டெவோராவும் தீர்க்கதரிசி எலைஜாவும்:(Blind Girl Devorah & Prophet Elijah) 30.11.2022

இது ஒரு யூத நாட்டுக் கதை. யூதர்களுக்கு,எலைஜா ஒரு Prophet. கடவுளின் தூதர்.நல்லவர்களுக்கு  நம்பிக்கை அளிக்கவும் கெட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவும் பூலோகத்திற்கு வருவார். ஒரு சமயம்,ஒரு நல்ல மனம் படைத்த குருட்டு பெண்ணை சந்திக்கிறார். அவர்களுக்குள் ஒரு விவாதம் நடக்கிறது. அந்த நல்ல பெண்ணுக்கு ஒரு வரம் கொடுக்கிறார். என்ன விவாதம்? என்ன வரம்? கதையை கேளுங்கள்....

நூற்றி முப்பத்தி மூன்றாவது கதை:இளவரசி பீட்ரோனெல்லா (Princess Petronella) 24.11.2022

இது கரீபியன் தீவுகளில் சொல்லப்படும்  கதை. வழக்கமாக, நாடோடி கதைகளில், ஒரு அரசகுமாரன், ஒரு அரசகுமாரியை, பூதத்திடமிருந்தோ, மந்திரவாதியிடமிருந்தோ,  காப்பாற்றி  கல்யாணம்  பண்ணிக் கொள்வான். இந்த கதை,அதற்கு மாறுபட்ட, வித்தியாசமான  கதை. ஒரு தைரியமான,அழகான இளவரசி ஒரு ராஜகுமாரனை மீட்க   கிளம்பிகிறாள். அவனை மீட்டாளா?  அவனை கல்யாணம் பண்ணிக் கொண்டாளா? கதையை கேளுங்கள்.....

நூற்றி முப்பத்தி இரண்டாவது கதை:பயந்தாங்குளி வீரர் பில்பெர்ட்(Sir Philbret,the Fearful) 17.11.2022

இது ஒரு இங்கிலாந்து நாட்டுக் கதை. Sir Philbret ஒரு பயந்தங்குளி Knight. அவருடைய கொள்கை-தைரியசாலியாக இருந்து உயிரை விடுவதை விட, புத்திசாலித்தனமாக,பயந்தங்குளியாக இருந்து உயிரோடு இருப்பது தான். இப்படிப்பட்ட குணமுள்ள ஒருவர், ஒரு ராஜகுமாரியை ஒரு பூதத்திடமிருந்து காப்பாற்றுகிறார். எப்படி? கதையை கேளுங்கள்...

நூற்றி முப்பத்தி ஒன்றாவது கதை:ஒரு ஏழை பெண் ராணியான கதை:(Story of a poor girl who became a queen) 10.11.2022

இது ஒரு மத்திய ஆசிய நாட்டுக் கதை. ஒரு நாட்டு அரசர்,புதிர்கள் மூலம்,தனக்கு வரப்போகும் மனைவியை தேட முயற்சிக்கிறார். ஒரு ஏழை பெண்,அந்த புதிர்களுக்கான விடைகளை சொல்லி,அந்த அரசரை கல்யாணம் பண்ணிக் கொண்டு அந்த நாட்டு  ராணியாக ஆகிறாள். எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி முப்பதாவது கதை:லாமெட் -வாவ்னிக் ஏரியல்லா (Lamed-Vavnik Ariella) 03.11.2022

யூத மத நூல்களின்படி,எந்த நேரத்திலும் உலகத்தில் உத்தமமான 36 நப்ர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கு,ஹீப்ரூ மொழியில்,லாம்னெட் வாவ்னிக என்று பெயர்.யார் இவர்கள்,என்று அவர்களுக்கே தெரியாது.அவர்களுக்குள் ஒரே ஒற்றுமை இரக்க குணமும், தயாள மனதும் தான். அவர்களில் ஒருவரின் கதை தான் இது. கதையை கேளுங்கள்.....

நூற்றி இருபத்தி ஒன்பதாவது கதை:சுவிஸ் நாட்டு ஹீரோ-வில்லியம் டெல்(Swiss Hero-William Tell) 27.10.2022

சுவிஸ் நாடு ஒரு அழகான, நடு நிலையை கடைபிடிக்கும்  சுதந்திர நாடு. ஆனால்,15ம் நூற்றாண்டில், அது ஆஸ்ட்ரியா நாட்டுக்கு  அடிமையாக இருந்தது. நிறைய பேர்கள், நாட்டு  விடுதலைக்காக  போராடினார்கள். அதில்,முன்னோடியாக  இருந்தவர், வில்லியம் டெல்  அவர் யார்?  அவர் என்ன சாதித்தார்? கதையை கேளுன்கள்.....

நூற்றி இருபத்தி எட்டாவது கதை: அரசர் கானின் மகள் (King Khan's Daughter) 20.10.2022

இது ஒரு மங்கோலியா நாட்டுக் கதை. ஒரு ஏழை ஆடு மேய்ப்பவருக்கு ஒரே மகன். மோன்கே-அவன் பெயர். அவன் அப்பா ஒரு நாள்,அவனை பார்த்து, மோன்கே!,நீ ஒரு நாள், பணக்காரானாக ஆகி,கானின் மகளை கல்யாணம் பண்ணி  கொள்வாய்" என்று. மோன்கே ,அது நடக்கும் என்று  நம்பினான். பெரியவனாக ஆனவுடன், நேராக  அரசரை சந்தித்து, அவர் மகளை கல்யாணம்  பண்ணிகொடுக்க கேட்டான். அப்புறம் என்ன ஆச்சு? கதையை கேளுங்கள்....

நூற்றி இருபத்தி ஏழாவது கதை: கடல் நீர் எப்படி உப்பாக மாறியது( How Sea Water became salty) 12.10.2022

கடல் நீர் எப்போதும் உப்பாக  இருந்தது  இல்லை. ஒரு காலத்தில் அது சுவையாக  இருந்தது. பின்,எப்போ,எப்படி அது உப்பாக  மாறியது? பல நாடுகளில்,வெவேறு மாதிரி  கதைகள் சொல்லி வந்திருகிறார்கள். இந்த கதை,டென்மார்க்,ஸ்வீடன் நாடுகளில் சொல்லப்படும் கதை. கதையை கேளுங்கள்....

நூற்றி இருபத்தி ஆறாவது கதை:சாமுராய் பெண் போர் வீரர் (Samurai Woman Warrior) 05.10.2022

இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. ஜப்பான் தேசத்தில் ஒரு சாமுராய் வீரர் இருந்தார்.அந்த ஊர் அரசர், அவரை நாடு கடத்துகிறார்.அப்போது அவருக்கு ஒரு சிறு பெண் இருந்தாள். தகப்பனை பிரிந்து அவள் ஏங்கினாள்.அவள் சாமுராய் பயிற்சி எடுத்து ஒரு சிறந்த பெண் போர் வீரரானாள். 18 வயதில், அப்பாவை தேடி ஒரு கஷ்டமான  பயணத்தை  மேற்கொள்கிறாள். அந்த பயணம் எப்படி இருந்தது? அப்பாவை  சந்தித்தாளா? கதையை  கேளுங்கள...

நூற்றி இருபத்தி ஐந்தாவது கதை: அனுமானும் மயில் ராவணனும் (Hanuman and Mayil Ravan) 29.09.2022

இது ஒரு ராமாயண கதை. வால்மீகி ராமாயணத்தில், மயில் ராவணன் கதை இல்லை. வங்காள மொழியில் எழுதப்பட்ட கிரித்திவாஸ ராமாயணத்தில் இருக்கிறது. மயில் ராவணன் என்ற அரக்கனிடமிருந்து ராம லட்ச்மணர்களை அனுமான் காப்பாற்றுகிறார். எப்படி? கதையை கேளுங்கள்...   

நூற்றி இருபத்தி நாலாவது கதை: பெண் மாவீரர் மிசில்கா(Female Knight Mizilca) 22.09.2022

இது ஒரு ருமேனியா நாட்டுக் கதை. இளம் பெண்கள்,ஆண்கள் வேடத்தில் பல சாகஸங்களை செய்தது பற்றி, நிறைய நாடோடி கதைகள் இருக்கின்றன. இந்த கதையிலும் ஒரு பெண்,ஆண் உடை அணிந்து பல சாகஸங்களை செய்கிறாள். அப்படி என்ன சாதித்தாள்? கதையை கேளுங்கள்...

நூற்றி இருபத்தி மூன்றாவது கதை: மூன்று முழுமையான பீச் பழங்கள்(Three Perfect Peaches) 15.09.2022

இது ஒரு பிரான்ஸ் நாட்டுக்கதை. ஒரு அரசகுமாரிக்கு உடல் நலம்  சரியாக இல்லை. முழுமையான 3 பீச் பழங்களை  சாப்பிட்டால்,குணமடையாலாம்  என்று நம்பினாள். அரசரும்,யாருடைய பழங்கள், இளவரசியை குணபடுத்துகிறதோ, அவருக்கு இளவரசியை கல்யாணம்  செய்து கொடுப்பதாக அறிவிக்கிறார். ஒருவராலும் முடியாத காரியத்தை, ஒரு கிராம வாலிபன் செயது இளவரசியை  குணபடுத்துகிறான். அரசர்,பட்டிக்காட்டானை  மருமகனாக &...

நூற்றி இருபத்தி இரண்டாவது கதை: கடவுளால் சபிக்கப்பட்ட தேவதூதன் (An Angel cursed by God) 07.09.2022

இது ஒரு ரஷ்ய நாட்டு நாடோடி கதை. கடவுள்,தன் கட்டளையை மீறியதற்காக ஒரு தேவ தூதனை,3 ஆண்டுகள் பூலோகத்தில் வாழ வேண்டும் என்று சாபம் விடுகிறார். அந்த தூதன், பூலோகத்தில் எப்படி வாழ்ந்தான் என்பது தான் கதை. கதையை கேளுங்கள்...

நூற்றி இருபத்தி ஒன்றாவது கதை: ஜூவான் போபோ (Juan BoBo) 01.09.2022

இது ஒரு போர்ட்டோரிகா நாட்டுக் கதை. ஒவ்வொரு நாட்ட்டிலும்,அடி முட்டாள்  பையன்களை பற்றி கதைகள் உண்டு. ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில், அடி முட்டாள்களை-ஜூவான் போபோ- Juan BoBo -Silly John  என்று அழைப்பார்கள். அப்படிபட்ட ஒரு ஜூவான் போபோவை  பற்றியது  இந்த கதை கதையை கேளுங்கள்...

நூற்றி இருபதாவது கதை:உண்ணி பூச்சி (The Flea) 25.08.2022

இது ஒரு ஸ்பெயின் நாட்டுக் கதை. ஒரு Shepherd, ஒரு எறும்பு மற்றும் ஒரு சுண்டெலி உதவியால்,ஒரு அரசர் போட்ட புதிருக்கு விடை சொல்லி,அரசரிடமிருந்து பரிசு பெறுகிரான். எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி பத்தொன்பதாவது கதை:குரங்கிலிருந்து பிறந்தவன்,மனிதன்(Man is born from Monkey) 18.08.2022

இது ஒரு திபெத்திய  நாட்டுக் கதை. மனித இனம்,ஒரு குரங்குக்கும் ஒரு அரக்கிக்கும்(Ogress) பிறந்த  குழந்தைகளிடமிருந்து உருவானது என்று ஒரு நம்பிக்கை. அது என்ன கதை? கதையை கேளுங்கள்...

நூற்றி பதினெட்டாவது கதை: ஒன்றில் ஒன்பது.. க்ர்ர் (Nine-in-One ..grr) 10.08.2022

இது ஒரு லாவோஸ் நாட்டு பழம்குடி  மக்கள சொல்லும்  கதை. ஒரு புலி,ஷாவோ கடவுளிடம் சென்று எத்தனை குட்டிகள் பிறக்கும்  என்று கேட்டது. அவர் ,அதற்கு,வருஷத்திற்கு 9 குட்டிகள்  பிறக்கும்  என்றும்,அது கிடைக்க அது ஒன்றில் ஒன்பது-Nine-in-one) என்ற வார்த்தைகளை மறக்க கூடாது  என்றும் சொல்கிறார். இது நடந்தால்,புலிகள் மாத்திரம்  தான் இருக்க்கும்  என்ற பயத்தில்  ஒரு பருந்த...

நூற்றி பதினேழாவது கதை: பூட்ஸ் அணிந்த புஸ் (Puss in Boots) 05.08.2022

சார்ல்ஸ் பெரால்ட் என்ற பிரான்ஸ் நாட்டு  ஆசிரியரால்எ ழுதப்பட்ட இந்த கதை,  பிரபலாபமான நாடோடிகதைகளில் ஒன்று. ஒரு பூனையை மாத்திரம்,சொத்தாக அடைந்த  ஒரு ஏழை மில்லரின் மகனுக்கு  அந்த பூனை  ஒரு பேசும் பூனை என்றும் அதற்கு நல்ல திறமைகள் உண்டு என்றும் தெரியாது. அதன் உதவியால்,அவனுகு ஒரு நல்ல  வாழ்க்கை அமைகிறது. எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி பதினாறாவது கதை:தந்திரக்கார செருப்பு தைப்பவர்(The Crafty Cobbler) 29.07.2022

இது ஒரு இத்தாலிய  நாட்டுக் கதை. ஒரு ஏழை செருப்பு தைப்பவர், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு திருடர்கள் கூட்டம் அபகரிக்க முயற்சிக்கிறது. அந்த செருப்பு தைப்பவர்  புத்திசாலித்தனத்தால்  தன் பணத்தை  காப்பாற்றிக்  கொள்வதோடு அந்த திருடர்களுக்கும்,  தண்டனை கிடைக்க உதவுகிறார். எப்படி? கதையை கேளுங்கள் .....

நூற்றி பதினைந்தாவது கதை:மந்திர முட்டை (The Magical Egg) 21.07.2022

இது ஒரு ஜாதக கதை. போதி சத்வர்,புத்தராக அவதாரம் எடுப்பதற்கு முன்னால்,மனிதனாக,யானையாக, குரங்காக என்று பல அவதாரங்கள் எடுத்து இருக்கிறார்.எல்லா சமயத்திலும்,நல்லவனாக வாழ்ந்து நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். இந்த கதையிலும் ஒரு தன்னலமற்ற மனிதனாக, பிறந்து தன் நண்பர்களுக்கு உதவுகிறார். எப்படி? கதயை கேளுங்கள்.......

Слухайте подкаст ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали