Raja Nagarajan

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Kids TA ↓ 241 bölüm

Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:ainkaran2020@gmail.com

Yazar

Raja Nagarajan

Kategori

Kids

Podcast web sitesi

podcasters.spotify.com

Son bölüm

15 Nis 2026

Nereden dinlenir?

Uygulamada podcast'ler Replaio Radio Çok yakında

Podcast'ler çok yakında uygulamaya geliyor. Şimdi yükle ve podcast'lere yepyeni bir bakışı ilk gören sen ol

Google Play'den indir Ücretsiz yükle Android 5 Mn+ indirme · 4,8 puan iOS yakında

Bölümler

முப்பத்தி ஒன்பதாவது கதை:சூனியகாரி பாபா யாகாவும் சிறுமி நடாஷாவும் 31.12.2020

இது ஒரு ரஷ்ய நாட்டுக் கதை. பாபா யாகா என்ற சூனியகாரியிடமிருந்து எப்படி ஒரு சிறுமி(நடாஷா) தப்பித்து வருகிறாள் என்பது தான் கதை

முப்பத்தி எட்டாவது கதை:புத்திசாலி தையற்காரர் 24.12.2020

இது ஒரு ஜெர்மன் நாட்டுக் கதை. ஒரு சாதரண தையற்காரர் தன் புத்திசாலித்தனத்தினால் பல சாகஸ செயல்கள் புரிந்து எப்படி அரசர் மகளை கல்யாணம் பண்ணி கொள்கிறார் என்பது தான் கதை

முப்பத்தி ஏழாவது கதை:12 மாதங்கள்-4 பருவ காலங்கள்-இது வேற கதை 17.12.2020

36 வது கதை தலைப்பு தான் இதற்கும். ஆனால்,இது வேறு கதை. செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக் கதை. ஒரு இளம் பெண்ணை அவள் சித்தியும்(Step- Mother) அவள் மகளும் ரொம்பவே கொடுமை  படுத்துகிறார்கள். அவளை யார் காப்பற்றுகிறார்கள்  என்பது தான் கதை

முப்பத்தி ஆறாவது கதை:12 மாதங்கள்-4 பருவ காலங்கள் 10.12.2020

இது ஒரு கிரேக்க நாட்டுக் கதை. மேற்கத்திய நாடுகளில் 12 மாதங்களை 4 பருவ காலங்களாக பிரித்து சொல்வார்கள்.  அவை,வஸந்த காலம்,கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம். ஒவ்வொரு காலத்திற்கும் நல்ல அம்சங்களும் கெட்ட அம்சங்களும்  இருக்கின்றது, எப்படி 2 பெண்மணிகள்-அவர்கள் பார்வையில் காலங்களை புரிந்து கொள்கிறார்கள், என்பது தான் கதை

முப்பத்தி ஐந்தாவது கதை: 3 அறிவுரைகள் 03.12.2020

இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை. ஒரு தொழிலாளி தன் எஜமானிடமிருந்து சம்பளத்திற்கு பதிலாக 3 அறிவுரைகளை பெற்று வீடு திரும்புகிறான். அதனால் அவன் வாழ்க்கை எப்ப்டி மாறுகிறது என்பது தான் கதை  

முப்பத்தி நாலாவது கதை: ஒரு புத்திசாலி திருடன் 26.11.2020

இது ஒரு கொரியா நாட்டுக் கதை. ராபின் ஹூட் மாதிரி இருக்கும் ஒரு அதிசய திருடனைப் பற்றியது. தன் புத்திசாலித்தனத்தால் எப்படி சிறை தணடனையிலிருந்து தப்புகிறான் என்பது தான் கதை.

முப்பத்தி மூன்றாவது கதை:ஒரு அரிதான நட்பு (A Rare Friendship) 20.11.2020

இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை. நட்பு,நண்பன் என்பதை பற்றி எல்லோருக்கும் ஒரு விதமான தீர்மானம் இருக்கும். இந்த கதையில் சொல்லப்படும் நட்பு கொஞ்சம் வித்தியாசமானது. எப்படி ? கதையை கேளுங்கள்

முப்பத்தி இரண்டாவது கதை:அறிவுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் நடந்த போட்டி (Intelligence vs Luck) 11.11.2020

இது ஒரு   செக்கோஸ்லோவாக்கியா  நாட்டுக் கதை. ஓரு சமயம்  அறிவு தேவதைக்கும்  அதிர்ஷ்ட தேவதைக்கும்  போட்டி நடந்தது. யார் ஜயித்தார்கள்? கதையை கேளுங்கள்.

முப்பத்து ஒன்றாவது கதை:இளம் பெண் மோலியின் சாகச செயல்கள் 04.11.2020

இது இங்கிலாந்து நாட்டுக் கதை. மோலி என்ற இளம் பெண்  தன் இரண்டு சகோதரிகளுடன்  காட்டில்  தனியாக விடப்பட்டு  ஒரு அரக்கன் வீட்டில்  தங்க நேரிட்டது. மோலி எப்படி அரக்கனை  தன் சாகச செயல்களால்  வென்றாள்  என்பது தான் கதை

முப்பதாவது கதை: பா-கோவும் பயங்கர அரக்கனும் 28.10.2020

இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை. 12 வயது சிறுவன், பா-கோ, ஒரு பயங்கரமான அரக்கனை  கொல்கிறான். எப்படி அவன் கொன்றான்?  யார் யார் அவனுக்கு உதவி செய்தார்கள்? விடைகளுக்கு  கதையை கேளுங்கள்

இருபத்தி ஒன்பதாவது கதை: ஒரு வினோதமான வழக்கு 21.10.2020

இது ஒரு அரேபிய நாட்டுக் கதை. இரண்டு நண்பர்களுக்குள் நடந்த  ஒரு வினோதமான வழக்கு,  எப்படி விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட்டார்  என்பது தான் கதை

இருபத்தி எட்டாவது கதை:எரின் நாட்டு அரசரின் 13வது மகன் 14.10.2020

இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை. ஒரு அரசனுக்கு தன்னுடய 13 மகன்களில்  ஒரு மகனை விதி படி வாழ நாட்டை விட்டு  வெளியே அனுப்ப வேண்டிய கட்டாயம். அப்படி அனுப்ப பட்ட மகன்  என்ன ஆனான் என்பது தான் கதை.

இருபத்தி ஏழாவது கதை:வித்தியாசமான வழியில் திருடனை பிடித்த பாட்டி 07.10.2020

இது ஒரு மேற்கு வங்காள நாட்டுக் கதை. ஒரு ஏழை பாட்டியின் வீட்டில் அடிக்கடி திருட்டு நடக்கிறது. ஒரே திருடன் அதை செய்கிறான். பாட்டியின் அண்டை வீட்டுகாரர்கள்  பாட்டியிடம் சில வித்தியாசமான பொருள்களை  கொடுத்து எப்படி திருடனை பிடிப்பது என்று  சொல்லிக் கொடுத்தார்கள். என்ன பொருள்கள்? திருடன் அகப்பட்டானா? கதையை கேளுங்கள்........

இருபத்தி ஆறாவது கதை:வங்கியாளர்(Banker) போட்ட புதிர்கள் பூமராங்காக மாறிய கதை 30.09.2020

இது தெற்கு ஆசிய நாட்டுகளில் சொல்லப்படும் கதை. புதிர் போடுவதில் தனக்கு நிகர் யாருமே இல்லை என்று கர்வம் கொண்ட ஒரு வங்கியாளரிடம் அவர் போட்ட புதிர்களே பூமராங் மாதிரி அவரிடமே திரும்பி வந்து அவரை தாக்கிய கதை. யார் அப்படி செய்தார்கள்? கதையை கேளுங்கள்....விடை தெரியும்

முதலாவது கதை : "உபயோகமில்லாத பொருள் " என்று ஒன்றுமில்லை(Nothing is useless) 25.09.2020

இது ,ஒரு குருவையும் அவன் மாணவனையும் பற்றிய ஒரு இந்திய நாட்டுக் கதை.  இந்த குரு ஒரு வித்தியாசமான பரிசை தன் மாணவனி ட ம் கேடகிறார்.  "யாருக்கும் உபயோகமில்லாத சில காய்ந்த இலைகளை கொண்டுவா" என்று.  மாணவன் கொண்டுவந்தானா?  விடை கதையில்.........

இருபத்தி ஐந்தாவது கதை:சோம்பேறியும் பூதமும் 23.09.2020

இது வெள்ளி விழாக்கதை. கதைக்கு சொந்தக்காரர் பெரிய மஹான் சுவாமி விவேகானந்தர். உழைப்பே உயர்வு என்பதை  இந்த அருமையான கதை மூலம்  சுவாமிஜி சொல்லியிருக்கிறார் 

இருபத்தி நாலாவது கதை:முட்டாளும் பறக்கும் கப்பலும்-பகுதி-2 15.09.2020

பறக்கும் கப்பலை கொண்டு வந்த முட்டாளை(இவான்) மாப்பிளையாக ஏற்க ராஜாவுக்கு இஷ்டமில்லை. இவானுக்கு  சோதனை மேல் சோதனையாக வைத்தார். அவன் எப்படி தன் நண்பர்கள் மூலம் அவைகளை முறியடித்து ராஜகுமாரியை கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்பது தான் 2ம் பகுதி

இருபத்தி நாலாவது கதை:முட்டாளும் பறக்கும் கப்பலும்-பகுதி 1 15.09.2020

இது ரஷ்ய நாட்டில் சொல்லப்படும் நாடோடி கதை. ஓரு அப்பாவியான வாலிபனை எல்லோரும்- அவன் தாய்,தகப்பன் உட்பட்-முட்டாள் என்றே அழைக்கிறார்கள். எப்படி பறக்கும் கப்பலையும் 7 அதிசய  நண்பர்களையும் அவன் அடைந்தான்  என்பது தான்  முதல் பகுதியில்  சொல்லப்பட்டிருக்கிறது.

இருபத்தி மூன்றாவது கதை:ஒரு ஏழை மாணவனும் கடவுளும் 09.09.2020

இது ஒரு வியட்நாம் நாட்டுக் கதை. ஒரு ஏழை மாணவன் தன்னுடைய ஏழ்மை நிலை எப்போது/எப்படி போகும் என்று கடவுளிடம் நேரில் கேட்க புறப்பட்டான். அவன் கடவுளை சந்தித்தானா? அவன் கேள்விக்கு விடை கிடைத்ததா? கேள்விக்கு பதில்-கதையில்..........

இருபத்திரண்டாவது கதை:புத்திசாலி நீதிபதி வழங்கிய 3 தீர்ப்புகள் 02.09.2020

இது ஒரு அரேபிய நாட்டுக் கதை. ஒரு நீதிபதியின் முன்னால் 3 வழக்குகள் வந்தன. மூன்றிலும், வாதி,பிரதிவாதி வாக்குமூலங்கள் தவிர வேறு சாட்சிகள் கிடையாது. நீதிபதி எப்படி விசாரித்து சரியான தீர்ப்புகளை வழங்கினார் என்பது தான் கதை.

இருபதொன்றாவது கதை:டேவிட் கற்றுக்கொண்ட 3 மொழிகள் 26.08.2020

இது ஒரு ஐரோப்ப நாட்டுக் கதை. டேவிட் என்ற ஒரு வாலிபனைப் ப்ற்றியது. உதாவக்கறை என்று அவன் அப்பா அவனை திட்டி கொல்ல உத்திரவு போட்டாலும்,அவன் தான் கற்று கொண்ட 3 மொழிகளினால் காப்பற்றப்பட்டு ,எப்படி பெரிய நிலைக்கு வந்தான்  என்பது  தான் கதை.

இருபதாவது கதை:ஒரு தங்க கட்டி(A Bar of gold) 19.08.2020

இந்த கதை ,வெவ்வேறு ஐரோப்ப நாடுகளில்  சில  மாறுதல்களோடு  சொல்லப்பட்டு வருகிறது  இது ஒரு வித்தியாசமான கதை. கதையின் ஹீரோ -ஒரு தங்க கட்டி. கதை ஒரு பாடத்தை சொல்கிறது. அது என்ன? கதையை கேளுங்கள்....

பத்தொன்பதாவது கதை:ஒரு விவசாயியும் ஏழை கடவுளும் 12.08.2020

இது ஒரு ஜப்பான் நாட்டு நாடோடி கதை. பிம்போகாமி  என்ற ஏழைக் கடவுள் இருக்கும் வீட்டில் எப்போதும் தரித்திரம் தான் இருக்கும் என்று ஜப்பானியர்களுக்கு ஒரு நம்பிக்கை. ஓரு ஏழை விவசாயி தான் ஏழையாக இருப்பதுக்கு காரணம் அவன் வீட்டில் ஏழை கடவுள் இருப்பது தான் என்று  எண்ணி வீடடை விட்டு போக நினைத்தான். போனானா? கதையை கேளுங்கள்

பதினெட்டாவது கதை: அபூர்வ மச்சத்தோடு பிறந்த அதிர்ஷ்டகார வாலிபன் 06.08.2020

இது ஒரு ஜெர்மன் நாட்டுக் கதை. அபூர்வ மச்சத்தோடு  பிறந்த ஒருஅதிர்ஷ்டகார வாலிபன் பற்றியது. பல கஷ்டமான தடைகளை கடந்து எப்படி அரச குமாரியை கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்பது தான் கதை

பதினேழாவது கதை:எஜமானனை திணற அடித்த புத்திசாலி பெண் 29.07.2020

  இது ஒரு யூத நாட்டுக் கதை. புதிர் போடுவதில் தன்னை விட  மேதாவி யாரும் இல்லை என்று  கர்வம் கொண்ட  ஒரு பணக்கார பிரபுவை  தன் புத்திசாலித்தனத்தால் திணற அடித்த  ஒரு புத்திசாலி பெண்ணைப்  பற்றிய கதை

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) podcast'ini Replaio'da dinle

Radyo ve podcast'ler tek uygulamada - ücretsiz, kayıt gerektirmez. Bugün yükle ve lansmanı kaçırma

Google Play'den indir

Replaio bir podcast yayıncısı değildir; program adları, kapak görselleri ve ses içerikleri yazarlarına aittir ve herkese açık RSS beslemeleri aracılığıyla dağıtılır