Raja Nagarajan

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Kids TA ↓ 241 avsnitt

Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:ainkaran2020@gmail.com

Skapare

Raja Nagarajan

Kategori

Kids

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

15 apr 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

அறுபத்தி நாலாவது கதை:கள்ளம் கபடம் தெரியாத அப்பாவி பெண்களை ஏமாற்றும் ஆண்கள் 08.07.2021

இது ஒரு ஐரோப்பா நாட்டுக் கதை. புத்திசாலித்தனம் குறைவான அப்பாவி பெண்கள் மற்றவர்களால் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தான் கதை.

அறுபத்தி மூன்றாவது கதை:ஒரு தையல்கார இளைஞனின் கதை 01.07.2021

இது ஒரு ஐரோப்பிய நாட்டுக் கதை. ஒரு தையல்கார இளைஞன்  தன் புத்திசாலித்தனால் நாட்டின் இளவரசியை கல்யாணம் பண்ணிக்  கொள்கிறான். எப்படி? கதையை கேளுங்கள்

அறுபத்தி இரண்டாவது கதை:கோடீஸ்வர கஞ்ச மஹா பிரபு 24.06.2021

இது புத்தபிரானின் முந்தய பிறப்பின் அவதாரங்களை பற்றி தொகுக்கப்பட்ட Jathaka Tales என்று சொல்லப்படும் ஜாதகா கதைகளில் ஒன்று. ஒரு கஞ்ச பிரபுவை தேவ உலக அதிபதி சாகா (புத்தரின் முன் அவதாரம்)  பூலோகத்திற்கு வந்து ஒரு நாடகம் ஆடி  திருத்துகிறார். எப்படி?..... கதையை கேளுங்கள்.    

அறுபத்தி ஒன்றாவது கதை:மந்திரத்தினால் கட்டி போடப்பட்ட பாம்பு (The Enchanted snake) 16.06.2021

இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை. குழந்தை இல்லாத ஒரு ஏழை தம்பதி  ஒரு பாம்பை குழந்தையாக வளர்க்கிறார்கள். பல சாகஸ செயல்கள் செய்து அந்த பாம்பு அந்த நாட்டு இளவரசியை கல்யாணம் பண்ணிக்க தயாரானது. அப்புறம் என்ன ஆச்சு? கதையை கேளுங்கள்.......

அறுபதாவது கதை:தங்கம் நிறைந்த 7 ஜாடிகள் (Seven Jars of gold) 09.06.2021

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. மஹான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. குருட்டு அதிர்ஷடத்தில் ஒரு நாவிதருக்கு (Barber) தங்கம் நிறைந்த 7 ஜாடிகள் கிடைக்கின்றன. அந்த தங்கம் அவரை என்ன பாடுபடுத்தியது என்பது  தான் கதை. கதையை கேளுங்கள்...

ஐம்பத்தி ஒன்பதாவது கதை:அரசரை விட புத்திசாலியான ஒரு ஏழை பெண் 02.06.2021

இது ஒரு செர்பியா நாட்டுக் கதை. புத்திசாலியான ஒரு ஏழை பெண், அந்த நாட்டு அரசர் வைத்த எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்று,அந்த அரசரையே கல்யாணம் பண்ணிக் கொள்கிறாள். எப்படி?... கதையை கேளுங்கள்.... .

ஐம்பத்தி எட்டாவது கதை:ஜட்ஜ் ஊக்கா-ஜப்பானிய கிமொனா உடையில் சாலமன் அரசர்(Judge Ooka-King Solomon in Kimono) 25.05.2021

இது ஒரு ஜப்பான் நாட்டுக் கதை. பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் தேசத்தில் ஊக்கா என்று ஒரு நீதிபதி இருந்தார். அவர் விசாரித்த ஒவ்வொரு வழக்கிலும்  புது புது யுக்திகளை கையாண்டு  குற்றவாளிகளை கண்டு பிடித்து  தீர்ப்பு வழங்குவார். அவர் விசாரித்த வழ்க்குகளில்  ஒன்று தான் இந்த கதை .ஆங்கிலத்தில் Telltale Tale என்று சொல்வார்கள்.குற்றவாளிகளை  கதைகள் சொல்ல சொல்லி உண்மையை கண்டு பிடிப்பார். க...

ஐம்பத்தி ஏழாவது கதை:நான்கு புதிர்கள் (Four Riddles) 18.05.2021

இ து ஒரு பாக்கிஸ்தான் நாட்டுக் கதை. எந்த விதமான புதிர்களுக்கும் விடை தெரிந்த ஒரு திறமைசாலியான விறகு வெட்டியின் மேல் பொறாமை பட்ட அந்த ஊர் அரசர்  ஒரு மந்திரவாதியை அனுப்பி  விறகுவெட்டிக்கு கடுமையான  புதிர்களை போட வைக்கிறார். யாருக்கு வெற்றி? அரசனுக்கா?..விறகுவெட்டிக்கா?... கதையை கேளுங்கள்...

ஐம்பத்தி ஆறாவது கதை:நன்றியுள்ள மிருகங்களும் நன்றி கெட்டமனிதனும் 11.05.2021

இது ரோமனியர்களின் செயல்கள் பற்றி லத்தின் பாஷையில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளில் ஒன்று. ஒரு விறகுவெட்டி நல்ல எண்ணத்தில் ஒரு சிங்கம்,ஒரு குரங்கு, ஒரு பாம்பு, ஒரு மனிதன் -இவர்களை  ஒரு பள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறான். யார் அவனிடம் நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்கள்  என்பது தான் கதை

ஐம்பத்தி ஐந்தாவது கதை:ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்ட பூனை,நாய்,நரி 05.05.2021

இது ஒரு மத்திய ஐரோப்பா நாட்டில் சோர்ப் என்ற  பழங்குடி மக்கள் சொல்லும் கதை. வயதான காரணத்தால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட  ஒரு பூனையும் ,ஒரு நாயும் ,ஒரு நரியை சந்திக்கின்றன.  ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொணடு  தங்கள் லட்சியங்களை நிறைவேற்றி கொள்கிறார்கள். எப்படி ? கதையை கேளுங்கள்...

ஐம்பத்தி நாலாவது கதை:ஒரு ஆட்டிடையனும் அவனுடைய 3 நாய்களும் (A Shepherd and his 3 Dogs) 28.04.2021

இது ஒரு ஜெர்மன் நாட்டுக் கதை. மாய சக்தி படைத்த 3 நாய்களின் உதவியால் ஒரு ஆட்டிடையன் நாட்டின் இளவரசியை கல்யாணம் பண்ணி கொள்கிறான். எப்படி? கதையை கேளுங்கள்... .

ஐம்பத்தி மூன்றாவது கதை:உண்மையே வெல்லும் (Truth Alone Triumphs) 21.04.2021

இது ஒரு போலந்து நாட்டுக் கதை. முன்பின் தெரியாத இரண்டு  பயணிகளுக்குள் ஒரு விவாதம். ஒருவன் சொன்னான்: நேர்மையாக வாழ்வது தான் சிறந்தது- என்று மற்றவன் அதை மறுத்து ,இந்த உலகத்தில்  நேர்மையாக வாழவே முடியாது -என்று. பந்தயம் வைத்தார்கள்… யார் ஜயித்தார்கள்? கதையை கேளுங்கள்———

ஐம்பத்தி இரண்டாவது கதை:மாஜிக் ஏரியை தேடி சென்ற சிறுமி அமாண்டா 14.04.2021

இது ஒரு ஈகுவடார் நாட்டுக் கதை. தன் நாட்டு அரசகுமாரனின் வியாதியை குணபடுத்தும் தண்ணீர் உலகத்தின் கடைசியில் உள்ள ஒரு மாஜிக் ஏரியில் இருக்கிறது. அதை கொண்டு வர அமாண்டா என்ற ஒரு சிறுமி ஒரு கடினமான பயணத்தை மேற்கொகிறாள். அவளுக்கு அந்த நீர் கிடைத்தா? கதையை கேளுங்கள்.... ..

ஐம்பத்தி ஒன்றாவது கதை: மந்திரவாதியின் கருப்புக் குதிரை 07.04.2021

இது ஒரு கிரேக்க நாட்டுக் கதை. ஒரு மந்திரவாதியிடம் அடிமையாக இருந்த ஒரு இளவரசனை அந்த மந்திரவாதியின் கருப்புக் குதிரை காப்பாற்றி அவனை பல சாகஸ செயல்களை செய்ய உதவியாக இருந்தது. எப்படி? கதையை கேளுங்கள்……. . 

ஐம்பதாவது கதை:உண்மையான பக்தி (True Devotion) 30.03.2021

இது ஒரு இந்தி ய நாட்டுக் கதை. மஹான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன  குட்டிக் கதைகளில் இது ஒன்று. தன்னை விட நாராயணரிடம் பக்தி உள்ளவர்  யாரும் இருக்க முடியாதுஎன்று கர்வத்துடன் இருந்த  நாரத மஹரிஷிக்கு நாராயணர்  எபப்டி பாடம் கற்பித்தார்  என்புது தான் கதை

நாற்பத்தி ஒன்பதாவது கதை:செருப்பு தைப்பவர் ஜோஸியரான கதை 11.03.2021

இது ஒரு பெர்ஷியா(ஈரான்) நாட்டுக் கதை. ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளி குருட்டு அதிர்ஷ்டத்தினால் பெரிய ஜோதிடன் என்று பெயர் அடைகிறான். எப்படி? கதையை கேளுங்கள்....

நாற்பத்தி எட்டாவது கதை: குரு பக்திக்கு ஒரு உதாரணம்-உபமன்யு 03.03.2021

இது ஒரு இந்திய நாட்டுக் கதை . இது மஹாபாரத இதிஹாஸத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு குருவையும் அவர் சொல்லை மீறாத மாணவனையும் பற்றிய கதை. உபமன்யு என்ற அந்த மாணவன் தன்னுடைய திடமான குரு பக்தியினால் எப்படி ஒரு உயர்ந்த நிலையை அடைகிறான் எனபது தான் கதை

நாற்பத்தி ஏழாவது கதை:முகத்தில் வடுவுடன் பிறந்த வீரனின் கதை(Story of Scarface) 24.02.2021

இது  வட அமேரிக்கா நாட்டு பழம்குடி மக்களுக்கு (Native Americans) புனிதமான கதை. முகத்தில் வடுவுடன் பிறந்த ஒரு வீரன் (Scarface) தன் கடவுளான சூரியனை சந்தித்து அவர் ஆசியுடன் தன் தலைவர் மகளை   கல்யாணம் பண்ணிக் கொள்கிறான்  என்பது தான் கதை

நாற்பத்தி ஆறாவது கதை:தேவதூதரும் மூன்று சகோதரர்களும் 18.02.2021

இது ஒரு யூகோஸ்லோவாக்கிய நாட்டுக் கதை. ஒரு சமயம்,கடவுள் ,மூன்று சகோதரர்களின்  குணங்களை சோதிக்க  ஒரு தேவதூதரை அனுப்புகிறார்.  அவர்,அவர்களுக்கு என்ன சோதனைகள்  வைத்தார்? யார் ஜயித்தார்கள்? கதையை கேளுங்கள்....                            

நாற்பத்தி ஐந்தாவது கதை:சாலமன் அரசரும் ஷீபா நாட்டு அரசியும் (King Solomon & Queen of Sheba) 11.02.2021

இது ஒரு யூத நாட்டுக் கதை. இஸரேல் நாட்டு மன்னர் சாலமன்.  ஒரு அறிவு ஜீவி. அவரை பற்றி நிறைய கதைகள் உண்டு. அதில் ஒன்று தான் அவரை ஷீபா நாட்டு  அரசி சந்தித்தது. அது என்ன கதை? கதையை கேளுங்கள்...

நாற்பத்தி நாலாவது கதை:பாதிரியை காப்பற்றிய இடையன்(Shepherd) 04.02.2021

இது ஒரு இங்கிலாந்து நாட்டுக் கதை. ஒரு ராஜா போட்ட புதிர்களுக்கு விடை தெரியாமல் மரண தண்டனையை எதிர் நோக்கும் ஒரு பாதிரியை அவருடைய விசுவாசமான இடையன் (Shepherd) காப்பாற்றுகிறான். எப்படி? கதையை கேளுங்கள்...

நாற்பத்தி மூன்றாவது கதை:ஒரு அங்குல உயரமுள்ள இச்சுன்போஷியின் கதை(Story of Issunboshi-Inch Boy) 28.01.2021

இது ஒரு ஜப்பான் நாட்டுக் கதை. தைர்யம்,மன உறுதி மற்றும் தாராள குணம் இவற்றிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்  ஒரு அங்குல உயரமுள்ள இச்சுன்போஷியின் கதை.

நாற்பத்தி இரண்டாவது கதை:ஒரு சிறிய தகர அகப்பை பெரிய அகப்பையான கதை(The Legend of the Dippers) 20.01.2021

இது ஐரோப்பா நாடுகளில் சொல்லப்படும் கதை. ஒரு சிறிய தகர அகப்பை(Dipper) பெரிய அகப்பையான (Big Dipper) ஆன கதை. Big Dipper என்பது சப்த ரிஷி மண்டலம் என்ற நட்சத்திர கூட்டத்தை குறிக்கும். எப்படி நடந்தது? கதையை கேளுங்கள்... .

நாற்பத்தி ஒன்றாவது கதை:மேக்பயின் வாலின் மேல் உப்பு(Salt on Magpie's Tail) 14.01.2021

இது ஒரு சுவீடன் நாட்டுக் கதை. அந்த நாட்டில் மேக்பை என்ற பறவையை பற்றி ஒரு கதை உண்டு. காகா இனத்தை சேர்ந்த இந்த பறவைக்கு  நீணட வால் உண்டு. யாராவது அதன் வாலில் உப்பை தூவினால் அவர்கள் விரும்பிய ஆசைகள் நிறவேறும்  என்று ஒரு நம்பிக்கை ஒரு சிறுவன் தன் ஆசைகள்  நிறைவேறுவதாற்க அதன் வாலில் உப்பை  தூவ முயற்சிக்கிறான். அவனுக்கு வெற்றி கிட்டியதா? கதையை கேளுங்கள்........  

நாற்பதாவது கதை:இளவரசன் காலிப்பும் இளவரசி டூரண்டாவும் 07.01.2021

இது பல நாடுகளில் சிறு சிறு வித்தியாசங்களில் சொல்லப்படும் பிரபலாமான நாடோடி கதை. புதிர் போடுவதில் தன்னை மிஞ்சியவர் யாரும் இல்லை என்ற கர்வத்தில் 99 இளவரசர்களின் உயிரை எடுத்த ஒரு இளவரசியை எப்படி நம் கதாநாயகன் இளவரசன் ஜயிக்கிறான் என்பது தான் கதை

Lyssna på podden ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden