Raja Nagarajan

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Kids TA ↓ 241 avsnitt

Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:ainkaran2020@gmail.com

Skapare

Raja Nagarajan

Kategori

Kids

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

15 apr 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

நூற்றி எண்பத்தி ஒன்பதாவது கதை:அபு காஸிமின் காலணிகள்:(Abu Kassim's Shoes) 17.01.2024

இது ஒரு மோராக்கா நாட்டுக் கதை. அபு காஸிம் ஒரு பணக்காரர். ஆனால்,அவர் ஒரு கஞ்ச மஹா பிரபு. அவர் நேசிப்பது எல்லாம், அவருடைய காலணிகளை தான். 30 வருஷமாக அதை உபயோகிகிறார். யாருடைய கேலியையும் பொருட்படுத்த மாட்டார். ஒரு சமயம் அந்த காலணிகளினால், அவருக்கு பெருத்த அவமானம் ஏற்படுகிறது. அதை தூக்கி எறிகிறார். அது திரும்ப அவரிடமே வருகிறது. அவர் தன்னுடைய முயற்சியில் வெற்றி பெற்றாரா? கதையை கேளுங்கள்....

நூற்றி எண்பத்தி எட்டாவது கதை:அரசருக்கே கடுக்காய் கொடுத்த ஒரு புத்திசாலி டெமரி (A Clever Temari giving the slip to a king) 10.01.2024

இது ஒரு எதியோப்பிய நாட்டுக் கதை. அந்த நாட்டில் உள்ள டெமரிகள் , ஒரு நாடோடிகள். கிழிந்த ஆடைகளுடன்,மேலே ஒரு ஆட்டு தோலை போர்த்திக் கொண்டு , பசிக்கும் நேரத்தில் பிச்சை எடுத்து மடங்களில் படுத்து உறங்குவார்கள். அவர்கள் ரொம்ப புத்திசாலிகள். பசிக்காக திருவார்கள். அகப்பட்டு கொள்ள மாட்டார்கள். அவர்களில் ஒருவரான ,ஒரு டெமரி, அரசருடைய ஆட்டை திருடுகிறான். அதற்கு தண்டனை-மரணம். அதிலிருந்து தப்ப, தன் புத்திசாலித்தன...

நூற்றி எண்பத்தி ஏழாவது கதை:சிறிய சிவப்பு சேவலும் சுல்தானும்(Little Red Rooster and Sulthan) 03.01.2024

இது ஒரு ஹங்கேரிய நாட்டுக் கதை. ஒரு ஏழை பெண்மணிக்கு ,சொந்தமான ஒரு சிறிய சிவப்பு சேவல், ஒரு நாள்,குப்பையிலிருந்து ஒரு வைர பித்தானை எடுக்கிறது. அப்போது,அந்த ஊர், சுல்தான், அதை பிடுங்கி கொள்கிறார். சேவல் விடுவதாக இல்லை. விடாமல்,சுல்தானை நச்சரிக்கிறது. சுல்தானும் பல வழிகளில், அதை கொல்ல முயற்சிக்கிறார். சேவல்,எல்லா சோதனைகளையும் சமாளித்து,அந்த பட்டனை திரும்ப பெறுகிறது. எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி எண்பத்தி ஆறாவது கதை-ஒரு நாய் சண்டை,ஜாதி கலவரமான கதை (Story of a dogfight becoming a caste riot) 27.12.2023

இது ஒரு எதியோப்பியா நாட்டுக் கதை. 2 ஜாதிகள் சமாதனமாக வாழும்,ஒரு கிராமத்தில் 2 நாய்கள்.ஒரு எலும்பு துண்டுக்காக சண்டை போடுகின்றன.அந்த சண்டையை நிறுத்த ஒரு பெரியவர் சொல்கிறார்.யாரும் கேட்கவில்லை. அந்த சண்டை ஒரு ஜாதி கலவரமாக மாறி நிறைய பேர்கள் கொல்லப்படுகிறார்கள். அப்புறம் என்ன ஆச்சு? சண்டை முடிந்ததா? சமாதனமாக வாழ்ந்தார்களா? கதையை கேளுங்கள்......

நூற்றி எண்பத்தி ஐந்தாவது கதை: மாதுளம் பழ விதை(Pomegranate Seed) 20.12.2023

இது ஒரு அரேபியா நாட்டுக் கதை. ஒரு ஏழை Cobbler,ஒரு பேக்கரி கடையிலிருந்து ஒரு ரொட்டியை திருடுகிறான்.கடைக்காரர்,அவன் திருடியதை பார்த்து கூச்சல் போட,காவல் வீரர்கள், காப்லரை சிறைச்சாலைக்கு கூட்டி செல்கிறார்கள். அந்த நாட்டில்,திருடினால்,மரண தண்டனை.அந்த காப்லர்,தன் புத்திசாலித்தனை உபயோகித்து அந்த தண்டனையிலிருந்து தப்புகிறான். எப்படி? கதையை கேளுங்கள்......

நூற்றி எண்பத்தி நாலாவது கதை:பலி கொடுக்க விற்கப்பட்ட பையன்(The Boy who was sold to be sacrificed) 22.11.2023

இது ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை. ஒரு ராஜா,புதிய தலை நகரம் கட்ட விரும்புகிறார். அவர் கட்ட நினைத்த இடம் கெட்ட சக்திகளால் சபிக்கப்பட்ட இடம் என்று ஜோசியர் சொல்கிறார். அதே இடத்தி கட்ட வேண்டுமானால், ஒரே பையன் இருக்கும் ஒரு தாயார், தன் மகனை பலி கொடுக்க முன் வரவேண்டும். ஒரு ஏழை விதவை,பணக்கத்திற்காக தன் ஒரே மகனை கொடுக்க முன் வருகிறாள். பையன் பலி இடப்பட்டானா? நகரம் கட்டப்பட்டதா? கதையை கேளுங்கள்..

நூற்றி எண்பத்தி மூன்றாவது கதை:அரசனும் ஆட்டிடயனும் (The King and the Shepherd) 14.11.2023

இது ஒரு ஆர்மீனிய நாட்டுக் கதை. ஒரு ராஜா-அவருக்கு புதிர் போடுவதில் ரொம்ப விருப்பம். அடிக்கடி புதிர் போடுவார். விடை தெரியாதவர்களின் தலைகளை எடுப்பார். ஒரு சமயம், தன் 3 பிரபுக்களிடம், 3 கேள்விகள் கேட்கிறார். 7 நாள்,அவகாசம். சரியான விடையோடு வர வேண்டும். தவறினால்,தலைகள் வெட்டப்ப்டும். அரசருடைய கேள்விகள் என்ன? பிரபுக்கள் சரியான விடைகள் சொல்லி தங்கள் தலைகளை தக்க வைத்துகொணடார்களா? கதையை கேளுங்கள்....

நுற்றி எண்பத்தி இரண்டாவது கதை.கொசுக்கள்,ஏன்,நம் காது பக்கம் வந்து ஒலி எழுப்புகின்றன.(Why Mosquitoes buzz our ears) 08.11.2023

இது ஒரு நைஜீரியா நாட்டுக் கதை. இங்கு சொல்லப்படும் கதைகளில், எல்லா மிருகங்களுக்கும் பேச்சு திறன் உண்டு என்று சொல்வார்கள். ஒரே ஒரு மிருகத்தை தவிர. அது,கொசு தான். அது செய்த தவறினால், காட்டி ஒரு களேபரம் உண்டாகி, 4 நாள்கள்,இருட்டாகிறது. அதற்கு விதிக்கப்பட்ட தண்டனையினால்,அதற்கு பேச்சு திறன் போய், வெறும் ஒலி மட்டும் தான் எழுப்புகிறது. அது என்ன கதை? கதையை கேளுங்கள்....

நூற்றி எண்பத்தி ஒன்றாவது கதை:சாலமன் அரசர் சொன்ன கதை (Story told by King Solomon) 01.11.2023

இது ஒரு யூத நாட்டுக்கதை. சாலமன் அரசர், ஒரு மேதை. அவர் வழக்குகளை விசாரிப்பதில் திறமைசாலி.அவர் விசாராணை புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஆனால்,தீர்ப்பு நியாயாமாக இருக்கும். இந்த கதையில், 2 சகோதரர்கள்,அப்பாவின் சொத்துக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அரசரிடம் வழக்கு வந்தது. அரசர் எப்படி விசாரித்தார்? என்ன தீர்ப்பு வழங்கினார்? கதையை கேளுங்கள்.....

நூற்றி எண்பதாவது கதை:விதியும் பிரம்மாவும் மதியால் தோற்கடிக்கப்பட்ட கதை(Story of Fate and Bramma being defeated by Intellect) 25.10.2023

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடம் ஒரு நம்பிக்கை.குழந்தை பிறந்தவுடன்,அதன் நெற்றியில், அதன்வாழ்க்கை எப்படி அமையும் என்று பிரம்மா எழுதி விடுவாராம். அதை தான் நாம்.விதி,தலை எழுத்து,Fate என்று அழைக்கிறோம்.அதை மாற்ற யாராலும் முடியாது என்றும் நம்பி செயல் படுகிறார்கள். அதை மாற்றியதாக,சில பேர் கதைகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம். அந்த சிலரில்,ஒருவருடைய கதையை கேளுங்கள்....

நூற்றி எழுபத்தி ஒன்பதாவது கதை:ஒரே ஒரு சோள தானியத்திற்கு மணமகள் -(A Bride for a Grain of Corn) 18.10.2023

அநான்சி-மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் கரீபியன்பகுதிகளின் Folk Hero- இந்த சிலந்தி மனிதனை பற்றி , 94,95 கதைகளில் கேட்டிருக்கிறோம். இந்த கதை,கானா நாட்டுக் கதை. அநான்சிக்கு ஆகாய கடவுள்-நீயாமானா- ஒரு சவால் விடுகிறார் "7 நாட்களில்,அநான்சி, ஒரே ஒரு சோள விதையை வைத்து ஒரு மணமகளை கொண்டு வரவேண்டும்" அநான்சி சவாலை ஏற்கிறான். சவாலில் ஜயித்தானா? கதையை கேளுங்கள்....

நூற்றி எழுபத்தி எட்டாவது கதை: புனிதமான குதிரை (The Hallowed Horse) 11.10.2023

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. ஒரு ராஜாவின் நாட்டுக்கு,ஒரு பாம்பு அரக்கனிடமிருந்து ஆபத்து வருகிறது. அந்த பாம்பை கொல்ல கூடியது, ஒரு புனிதமான குதிரை தான். அதை தேட அந்த ராஜா முயற்சிக்கிறார். குதிரை கிடைத்ததா? பாம்பின் ஆபத்து விலகியதா? நாடு காப்பாற்றப்பட்டதா? கதையை கேளுங்கள்.....

நூற்றி எழுபத்தி ஏழாவது கதை:தாய் சொல்லை தட்டாத ஜாக்(Obedient Jack) 03.10.2023

இது ஒரு ஐரோப்பா நட்டுக் கதை. ஜாக்,தன் ஏழை தாயாருடன்,வசித்து வருகிறான்.அவர்கள்,ஏழைகள்.. ஜாக்குக்கு மன வளர்ச்சி இல்லை. ஆனால்,அவன் அம்மா எது சொன்னாலும் அதன்படி நடப்பவன். ஒவ்வொரு நாளும்.வேலைக்கான,கூலியை கொண்டுவரும் போது ஏதாவது,முட்டாள்தனமான காரியத்தை செய்வான். ஒரு நாள்,அந்த முட்டாள்தனமான காரியம் அவனுக்கு புது வாழ்வை கொடுக்கிறது. அது என்ன? கதையை கேளுங்கள்....

நூற்றி எழுபத்தி ஆறாவது கதை:ஐங்கரனின் கதை (Story of Ainkaran) 20.09.2023

இது ஐங்கரனை பற்றிய கதை. அவர்,வாழ்க்கை சம்பத்தப்பட்ட, நான்கு விஷயங்கள்,இங்கே சொல்லப்பட்டிருக்கின்றன. 1.ஏன்,அருகம்புல் அர்ச்சனை? 2.ஏன்,கொழுக்கட்டை படைப்பு? 3.ஏன்,தோப்புகரணம்? 4.கடவுள்,எல்லோரிடத்திலும் வசிக்கிறார். கதையை கேளுங்கள்........

நூற்றி எழுபத்தி ஐந்தாவது கதை: தர்மத்திற்கும் தர்மத்திற்கும் போர் (A War between Dharma and Dharma) 13.09.2023

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர், எழுதிய 18 புராணங்களில்,ஒரு புராணமான, மார்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்ட கதை. வழக்காமாக,தர்மத்தை கடைபிடிக்கும், ஹீரோவுக்கும் அதர்மத்தை தழுவுகிற வில்லனுக்கும் தான் போர் நடக்கும். இந்த கதையில்,தர்மத்தை கடை பிடிக்கும், 2 ஹீரோக்கள்போரிட தயாராகிறார்கள். எப்படி ஏற்பட்டது,இந்த சம்பவம்? யார் ஜயித்தார்கள்? கதையை கேளுங்கள்....

நூற்றி எழுபத்தி நாலாவது கதை:ஒரு அடிமையின் கனவு (A Slave's Dream) 08.09.2023

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. ஒரு ராஜாவிடம் வேலை பார்க்கும் அடிமை ஒரு கனவு கண்டு,உரக்க சிரிக்கிறான். அரசர் என்ன கனவு என்று கேட்கிறார். அடிமை சொல்லாமல் அமைதியாக இருக்க, அரசர்,அவனை சிறையில் அடக்கிறார்.அப்படி இருந்தும், நாட்டுக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன், அவன்,தனக்கு தெரிந்த எல்லா திறமைகளையும் உபயோகித்து நாட்டை காப்பாற்றுகிறான். எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி எழுபத்தி மூன்றாவது கதை:அதிர்ஷ்ட தேவதை (The Goddess of Luck) 30.08.2023

இது ஒரு நேபாள நாட்டுக் கதை. ஒரு ஏழை தாய்,தன் மகனுடன் வாழ்கிறார்.மகன்,அம்மாவிடம் கேட்கிறான்,"அம்மா,நாம் ஏன் ஏழையாக இருக்கோம்"என்று. அம்மாவின் பதில்"அது நம் விதி. நாம் பொறுத்து கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று. மகனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. உலகத்தை படைத்த கடவுளை நேரில் பார்த்து,அம்மாவிடம் கேட்ட கேள்வியை கேட்க புறப்படுகிறான். அவன்,கடவுளை பார்த்தானா? அவனுக்கு விடை கிடைத்ததா?...

நூற்றி எழுபத்தி இரண்டாவது கதை:விசுவாசத்தை வாங்குதல் (Buying Loyalty) 24.08.2023

இது ஒரு சீன நாட்டுக் கதை. சீன தேசத்து பிரபு ஒருவர், தனக்கு வர வேண்டிய கடன் பாக்கியை வசூல் பண்ண ,அவரிடம் வேலை பார்க்கும்,ரிடயர்ட் ராணுவ வீரரை அனுப்புகிறார். அந்த வீரர் கேட்கிறார். 'பிரபுவே! நான்,உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும்" என்று. பிரபு சொல்கிறார்."என் வீட்டில் இல்லாத பொருளை வாங்கி வாரும்"எண்று. ராணுவ வீரரும்,ஒரு பொருளை வாங்கி வருகிறார். அது என்ன பொருள்? அது பிரபுவுக்கு பி...

நூற்றி எழுபத்தி ஒன்றாவது கதை:வாட்டர் மெலன்-தர்பூசணி-விதைகள்(Watermelon Seeds) 16.08.2023

இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை. அந்த நாட்டு மக்களுக்கு ,இந்த பழம், அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று ஒரு நம்பிக்கை.இந்த இனிப்பான பழம்,வாழ்க்கையில் செழிப்பையும் நிறைவையும் கொடுக்கும் என்பார்கள். இது எப்படி,அந்த நாட்டுக்கு வந்தது என்பது தான் கதை கதையை கேளுங்கள்...

நூற்றி எழுபதாவது கதை: அங்குலி மாலாவின் கதை-Story of Anguli Mala) 10.08.2023

இது ஒரு இந்திய நாட்டுக்கதை. புத்த மதத்தின்,தேர்வாடா முறையை பின்பற்றும் புத்த குருமார்கள் சொல்லும் கதை. யார் இந்த அங்குலிமாலா? அவன் பெற்றோர்கள் வைத்த பெயர் இல்லை. அங்குலிமாலா என்றால்,அவன் கழுத்தில்,அவன் கொன்ற 100 ஆட்களின் சுண்டு விரல்களை மாலையாக போட்டு கொண்டிருப்பவன் என்று அர்த்தம். அந்த கொடியவனுக்கு பாவ மன்னிப்புகிடைக்கிறது. எப்படி கிடைகிறது? யாரால் கிடைக்கிறது? கதையை கேளுங்கள்....

நூற்றி அறுபத்தி ஒன்பதாவது கதை:ஒரு தெரு வியாபாரியின் கனவு (A Peddler's Dream) 02.08.2023

இங்கிலாந்து நாட்டில் உள்ள,ஸ்வாப்பாம் என்ற ஊரில், மார்கெட்டில், ஜான் சாப்மான் என்பவருடையை சிலை இருக்கிறது. அதன் அடியில் உள்ள கல்லில், "கனவுகளும் தங்கமாக மாறும்"- "Even Dreams can turn into gold" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சிலைக்கும் வாசகத்திற்கும் என்ன சம்பந்தம்? கதையை கேளுங்கள்.......

நூற்றி அறுபத்தி எட்டாவது கதை:விலை மதிப்பற்ற பரிசு (Precious Gift) 26.07.2023

இது ஒரு கிழக்கு ஆசிய நாட்டுக் கதை. ஒரு வியாபார கப்பல், ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. எல்லா வியாபாரிகளும் பேசி கொண்டிருந்தார்கள். அங்கே சற்று தூரத்தில், ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவரை பற்றி,வியாபாரிகள் பேசி கொண்டனர். "யார் இவர்? இதற்கு முன் இவரை பார்த்ததில்லயே! இவர் வியாபாரி என்றால், ஒரு பொருளையும் கப்பலில் ஏற்ற வில்லையே! எதற்காக இந்த பயணம்? இப்படி பல கேள்விகள்......

நூற்றி அறுபத்தி ஏழாவது கதை: கடவுள் படி அளப்பார்:(God will provide) 19.07.2023

இது ஒரு சூடான் நாட்டுக் கதை. ஒரு பணக்கார பிரபு,கோபத்தில்,தன் 2வது மகளை,வெளியே தள்ளுகிறார். அப்போது வாசலில் ஒரு பிச்சைக்காரன் வருகிறான். பிரபு,அவனை பார்த்து "இவள் என் பெண்.உனக்கு சொந்தம். அழைத்து கொண்டு போ" என்கிறார். பிச்சைக்காரன் "நான் எழை,எப்படி இவளை காப்பாற்றுவேன்" என்கிறான். பிரபு சொல்கிறார்."கடவுள் படி அளப்பார்." என்று கடவுள் படி அளந்தாரா? கதையை கேளுங்கள்...

நூற்றி அறுபத்தி ஆறாவது கதை: துறவியும் இரண்டு புழுக்களும்:(The Hermit and the Two Worms) 12.07.2023

இது ஒரு பிலிபெய்ன் நாட்டுக் கதை. வாழ்க்கையில்,நிறைய பேர்கள்,குருட்டு அதிர்ஷ்டத்தில்,பெரிய பணக்காரர்களாக ஆகிறார்கள்.அவர்களில்,பெரும்பாலானோர், அட்ட்காசமான வாழ்க்கயை வாழ்கிறார்கள். விளைவு?... பயங்கரமானது. இந்த கதையில்,ஒரு துறவியின் கருணையினால், 2 புழுக்குகளுக்கு,மனித உருவம் கிடைக்கிறது. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? கதையை கேளுங்கள்....

நூற்றி அறுபத்தி ஐந்தாவது கதை:ஸ்டார்லிங் பறவையின் பதில்(The Starling's Answer) 05.07.2023

இது ஒரு யூத நாட்டுக் கதை. சாலமன் அரசர்,ஒரு சிறந்த அறிவாளி. பறவை மொழிகள் தெரிந்தவர். அவரையே ஒரு சாதாரண, சிறு ஸ்டார்லிங் பறவை ,தன் புத்திசாலித்தனத்தினால், ஏமாற்றுகிறது. எப்படி? கதையை கேளுங்கள்....

Lyssna på podden ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden