Viji Venkat
கதைப் பயணம்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கதைப் பிரியர்கள் அனைவரும் கேட்டு மகிழும் கதைகள்
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com
Autor
Viji Venkat
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
19 iun. 2024
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
7. அப்பளம் சதுரமானது 22.03.2022 13:43
அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள். அப்புசாமியின் கைத்தடியை வெந்நீர் வைப்பதற்காக பாய்லரில் போட்டுவிட்ட சீதாப்பாட்டியிடம் நஷ்ட ஈடாக வெள்ளிப் பிடி போட்ட கைத்தடி வாங்கித் தரக் கேட்டார் அப்புசாமி. சீதாப்பாட்டி முடியாது என்று சொல்லிவிட்டார். கீதாப்பாட்டியின் பாராட்டு விழாவிற்காக வெள்ளி அப்பளக் குழவியை சீதாப்பாட்டி பரிசாக கொடுக்க ஏற்பாடு செய்ததை அறிந்த அப்புசாமி என்ன செய்தார்?
6. விடாப்பிடி - அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள் 21.03.2022 11:28
அப்புசாமி, சீதாப்பாட்டி குடியிருந்த வீட்டை வீட்டின் சொந்தக்காரர் வேறொருவருக்கு விற்பதாகவும் வீட்டை காலி செய்யும்படியும் சொன்னதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு என்ன திட்டம் போட்டு வீட்டைக் காப்பாற்றினார்கள் என்பதே மீதிக்கதை
5. அப்புசாமியும் அழகிப் போட்டியும் - அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள். 27.12.2021 18:50
சீதாப்பாட்டி நடத்தும் "கிழவியோபாட்ரா" அழகிப் போட்டியை நடத்த விடாமல் அப்புசாமி போட்ட திட்டம் தவிடுபொடியானது எப்படி?
கெடுவான் கேடு நினைப்பான் 27.12.2021 5:16
திருக்குறள் நாலடியார் நன்னெறி கதைகள்
3. நந்தவனத்தில் ஓர் ஆண்டி - ஜெயகாந்தன் சிறுகதைகள் 24.12.2021 15:43
ஆண்டி வசிக்கும் நந்தவனம் அவன் வேலை செய்யும் இடுகாடு. மனைவி முருகாயி மற்றும் பதினைந்து வருடம் கழித்து பிறந்த குழந்தையுடன் மகிழ்வோடு வாழ்ந்து வந்த அவன் வாழ்க்கை திரும்பிய திசை என்ன?
சிறுகதைகள் - முதல் அடி - ஆசிரியர் நர்சிம் 17.12.2021 16:40
சிறு வயது ஆசைகளை கிளறி மனம் மகிழ வைக்கும் கதை
2.சிறு நெருப்பும் சுடும் - நாலடியார் - திருக்குறள் நன்னெறி கதைகள். 15.12.2021 14:51
"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தோர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து"
4. பென்ஷன் இல்லாத மன்ஷன் - அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள். 15.12.2021 15:14
சீதாப்பாட்டியின் தம்பி சிகிளி பெங்களூரிலிருந்து ஆலிண்டியா கான்ஃபிரன்ஸில் கலந்து கொள்ள வருவது அப்புசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவரிடம் அவர் வெகு அலட்சியமாக நடந்து கொள்வதே அதற்கு காரணம். அவர் தன் பென்ஷன் படணத்தைப் பற்றிப் பேசி அவரை அவமதிக்க சீதாப்பாட்டியும் அப்புசாமியும் போட்ட நாடகம் என்ன என்பதே கதை☺️
வீரயுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 33 என்று 12.12.2021 19:50
விண்மீன், நிலவு, சூரியன், பூக்கள் என் இயற்கையோடு காலத்தையும் முருகன் மற்றும் வள்ளியின் அன்பினையும் அழகாய் கொண்டு செல்லும் அத்தியாயம்.
நாலடியார் - திருக்குறள் நன்னெறி கதைகள் - முயற்சி முன்னேற்றத்திற்கு ஊன்றுகோல் 12.12.2021 13:53
"அருமை உடைத்தென்று அமாவாசை வேண்டும் பெருமை முயற்சி தரும்"
படித்ததில் பிடித்தது - 1. மரத்தின் ரகசியங்கள் 11.12.2021 6:57
உணர்வு: அனைத்து விதமான கஷ்டமான சூழ்நிலைகளிலிருந்தும் வெளியே வருவதற்கான தைரியத்தை எனக்கு கொடுத்த இயற்கைக்கு நான் நன்றி உடையவனாக இருக்கிறேன்.
3. நானா பைத்தியம்? - அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள் 11.12.2021 12:59
சீதாப்பாட்டி சோம்பேறித்தனமாய் தூங்கிக் கொண்டிருந்த அப்புசாமியை இரண்டு நாள் முன்பு வாங்கி வந்த சாத்துக்குடி பழத்தை மாற்றி வாங்கி வரச்சொல்லி எழுப்பினாள். அப்புசாமி முடியாது எனவே சீதாப்பாட்டி பைத்தியம் என்று சொல்லக் கோபம் கொண்டார் அப்புசாமி. தான் பைத்தியம் இல்லை என்று சீதாப்பாட்டி ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதற்காக பைத்தியக்கார ஆஸ்பிட்டலில் தஞ்சம் புகுந்தார்☺️. பிறகு அங்கு நடந்த வேடிக்கை என்ன? முடிவு...
2. பிறந்த நாள் - அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் - நகைச்சுவைக் கதைகள் 07.12.2021 15:16
அப்புசாமிக்கு தன் பிறந்த நாளை விமரிசையாகவும் அனைவரும் தன்னை வாழ்த்தும் படியாகவும் கொண்டாடுவதில் மிகவும் விருப்பம். சீதாப்பாட்டி தினமும் காலையில் கண் விழித்ததும் அப்புசாமியின் கால்களை தொட்டுக் கும்பிட்டுத்தான் அந்த நாளையே தொடங்குவார். அந்த பழக்கம் தன்னாலேயே விட்டுப் போனதை எண்ணி வருந்தாத நாளில்லை அப்புசாமிக்கு. பிறகு தன் புகழ் பற்றி நிரூபிக்க அப்புசாமி எடுத்த முயற்சியும் அதனால் விளைந்தது என்ன என்பது...
1. ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் - ஆசிரியர் பாக்கியம் ராமசாமி 05.12.2021 15:35
அரசாங்கத்திடம் பென்ஷன் பணம் வாங்கும் தனது நண்பரான ஜெய்ஹிந்த் ஜெயராஜ் மீது பொறாமை கொண்டு நம்மால் வாங்க முடியவில்லையே என்று ஜெயிலுக்குப் போக முயற்சி செய்து சீதாப்பாட்டி தனக்கு கொடுக்கும் பாக்கெட்மணியைக் கூட கொடுக்காதவாறு மாட்டிக் கொண்டார்.
நீதிக்கதைகள் 10 - சீறலாம்..கடிக்கக் கூடாது... 05.12.2021 7:20
ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை
3. இரண்டு குழந்தைகள் - ஜெயகாந்தன் சிறுகதைகள் 02.12.2021 14:00
யாருமற்ற அனாதையான சிவப்பி தன் மகனுடன் கிடைத்த வேலைகளைச் செய்து தன் குழந்தைக்கு கஞ்சி ஊற்றுகிறாள். அதிகார வர்க்கம் மற்றும் வறுமையை சீண்டிப் பார்க்கும் சுப்பு ஐயருக்கு அவள் கொடுத்த பதிலடி வயிற்றுப் பசிக்கு சுய தன்மானத்தை இழக்கும் பெண் அல்ல என்று உரைக்க வைப்பதே கதையின் முத்தாய்ப்பு....
நீதிக்கதைகள் - 9 எல்லா உயிர்களுக்கும் உதவி செய் 02.12.2021 5:56
குழந்தைகளுக்கான சிறுகதைகள் செய்த உதவியும் இட்டு வைத்த விதையும் வீணாகப் போகாது.
2. யுக சந்தி - ஜெயகாந்தன் சிறுகதைகள் 30.11.2021 27:45
முற்போக்கான சிந்தனை கொண்ட கதை... இள வயதில் கணவனை இழந்த கோமதிப் பாட்டியின் ஆதங்கமும் வருத்தமும் அவளது நியாயமான தேவைகளும் நிறைவேறாது வாழ்வைத் கழித்த அவளது மனநிலையை ஆசிரியர் கனத்த இதயத்தோடு நம் மனத்தில் புகுத்தி விடுகிறார். கதையின் முடிவில் கோமதிப் பாட்டி நம் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறார். பழையன கழிதலும் புதியன புகுதலுமே யுகம் பிறக்க காரணம் - இதுவே என் மனமறிந்தது.
சுஜாதாவின் சிறுகதைகள் - 1. அனாமிகா 24.11.2021 5:56
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய சிறுகதைகள்
நீதிக்கதைகள் - 9 (எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்) 24.11.2021 3:32
மன உறுதியோடு இருப்பது நம் கையில்தான் உள்ளது.
வீரயுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் 32 23.11.2021 18:17
கபிலரிடம் பாரி கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றி விளக்குதல். முருகன் மற்றும் வள்ளியின் காதல் நிகழ்வு. வள்ளி முருகனை அழைத்துச் சென்ற இடத்தைப் பார்த்த முருகனின் கண்கள் அவனை அசைய விடாமல் அப்படியே நிறுத்தியது.
நீதிக்கதைகள் -8 உணர்வு 23.11.2021 4:05
நாம் நம்முடைய உள்முக மனசாட்சியை தூய்மையாக வைத்திருந்தால் வெளிப்புறமாக பார்க்கும்போது எல்லாமே தெளிவாக நன்றாகத் தெரியும்.
ஆசிரியரின் ஆசிரியர் - நீதிக்கதைகள் 18.11.2021 23:49
இன்றைய சிறுவர்களே நாளையத் தலைவர்கள்... கற்பித்தல் மற்றும் கற்றல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது.
தெய்வங்கள்... பேய்கள்... தேவர்கள் - இரண்டு கதையுலகங்கள்-1 11.11.2021 9:42
ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் சிறுகதை தொகுப்பு...
மாஜிக் மாலினி - 20 (முடிவு) 08.11.2021 12:11
பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா விளையாட்டுப் போட்டியில் மங்காத்தா மாலினியை தன் தவறான செயலால் தோற்கடித்தல். மங்காத்தாவின் அப்பா செய்த திருட்டுத்தனத்தால் பள்ளியில் நடந்த விபரீதம். மங்காத்தா மனம் மாறுதல். மீண்டும் மாலினி போட்டியில் வெற்றி பெறுதல். மாஜிக் மாலினி தொடர்கதை முற்றிற்று....🙏🙏😊
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice