SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
சிவபுராணம் 02.05.2020 28:05
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவப்பிரகாசம்.மாணிக்கவாசகப்பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமான் எவ்வாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்கு தம்முடைய உளமார்ந்த வணக்கங்ஙளை கூறித் துவக்குகிறார்.
கம்பர் நூல்கள் _அறிமுகம் 02.05.2020 3:53
கம்பர் 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் உண்டு.இவர் கம்ப ராமாயணம்,ஏரெழுபது,திருக்கை வழக்கம்,சரஸ்வதி அந்தத்தி,சடகோபர் அந்தத்தி,சிலையெழுபது முதலிய ஒன்பது நூல்களை எழுதியுள்ளார்
சைவ சித்தாந்த சாத்திரங்கள்_விவரம் அறிவோம். 02.05.2020 4:22
சைவ சித்தாந்த நூல்கள் மொத்தம் 14 ஆகும்.இவை 6,7,8 ம் நூற்றாண்டில் தோன்றியது.
ஔவையாரின் நல்வழி-நூல் அறிமுகம். 02.05.2020 4:39
ஔவையாரின் நூல்களில் ஒன்று நல்வழி. இந்நூலில் 41 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்றும், 40பாடல்களும் உள்ளன.வெண்பாவில் அமைந்தவை.
சங்க கால இலக்கியங்களில் எட்டுத்தொகையும்_பத்துப்பாட்டும். 01.05.2020 4:25
சங்க இலக்கியங்களில் முக்கியமானவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும்.ஈட்டுத்தொகை நூல்கள்.1.நற்றினை2. குறுந்தொகை3. ஐங்குறுநூறு4. கலித்தொகை5. அகநானூறு6. பதிற்றுப்பத்து7 . புறநானூறு 8. பரிபாடல். பத்துப்பாட்டு நூல்கள்_1. திருமுருகாற்றுப்படை2. பொருநராற்று படை3. சிறுபாணாற்றுப்படை4. பொரும்பாணாற்றுப்படை5. மலைபடுகடாம்6. மதுரைக்காஞ்சி7. குறிஞ்சிப்பாட்டு8. பட்டினப்பாலை9. முல்லைப்பாட்டு10.நெடுநல்வாடை என்பதா...
ஔவையாரின் கொன்றைவேந்தன் பகுதி_1 01.05.2020 16:14
கொன்றைவேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதிநூல்.இது முருகக்கடவுளைப் போற்றிப்பாடும் நூலாகும்.இதில் மொத்தம் 91 பாடல்கள் உள்ளன. பகுதி1 ல் 46 பாக்களும் உரையும் வழங்கப்பட்டுள்ளது.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் _6 01.05.2020 5:05
திருமந்திரத்தில் வான்சிறப்பு எனும் தலைப்பில் அமுதூறு மாமழை என்ற பாடலும்,திருக்குறளில் வான்சிறப்பு அதிகாரத்தில் உள்ள வான்நின்று எனத்தொடங்கும் குறள் உரையுடன்....
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும்_5 01.05.2020 2:16
திருமூலரின் திருமந்திரத்தில் அறஞ்செய்வான் திறம்பட என்ற தலைப்பில் ,யாவர்க்கு மாம்இறை எனத் தொடங்கும் பாடலும்,அரியவற்று ளெல்லாம் எனத்தொடங்கும் குறளும் உரையுடன்....
சிறுபஞ்சமூலம்_ நூல் அறிவோம். 30.04.2020 2:05
தமிழ் மொழியில் சிறப்புவாய்ந்த பல ஆயிரம் நூல்கள் உள்ளன.இவற்றில் பதினென்கீழ்கணக்கு நூல்கள் முக்கியமானது. சிறுபஞ்சமூலமும் அதில் ஒன்று. இயற்றியவர்-காரியாசான் எனும் புலவர்.வாழ்க்கைத் துன்பங்களைப்போக்கும் 5உண்மைகளை ஒவ்வொரு பாடலிலும் அடுக்கிக் கூறும் நூல்.
ஏலாதி_நூல் அறிவோம். 30.04.2020 2:17
பதினென் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று-ஏலாதி.இயற்றியவர்_கணிதமேதாவியார்.ஆறு அறநெறிக்கருத்துக்களை கூறும் நூல்.இதில் 82 பாடல்கள் உள்ளன.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும்-2 30.04.2020 3:48
திருமந்திரத்தில் சிவநிந்தை எனும் தலைப்பில் ஓரெழுத் தொருபொருள்...எனத்தொடங்கும் பாடலும்,திருக்குறளில் புறங்கூறாமை எனும் அதிகாரத்தில் பகச்சொல்லி ..எனத்தொடங்கும் குறளும் உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.
திருமூலரின் திருமந்திரமும், திருவள்ளுவரின் திருக்குறளும் 29.04.2020 2:17
திருமூலரின் திருமந்திரத்தில் சிவநிந்தை என்றத்தலைப்பில் அப்பகையாலே எனத்தொடங்கும் பாடலும்,திருக்குறளில் பகைத்திறந்தெரிதல் எனும் அதிகாரத்தில் உள்ள பகைஎன்னும் எனத் தொடங்கும் திருக்குறளும், ஏமுற் றவரினும் எனத்தொடங்கும் குறளும் உரையுடன் வழங்கபட்டுள்ளது.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos