durai arasu

Pattikkaadu

News TA ↓ 128 episódios

Become a Paid Subscriber: https://podcasters.spotify.com/pod/show/durai-arasu/subscribe ஒரு எளிய கிராமத்தானின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதே எனது இந்தக் களம்.ஆர்வம், ஆர்வக்கோளாறு, அறிவுத் தீட்சண்யம்(!), கடுமை, இனிமை, எளிமை, கறார் என்று எல்லாம் கலந்த கதம்ப சாதம் இது.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

durai arasu

Categoria

News

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

21 de out de 2024

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

டி.என்.பி.எஸ்.சி: தேவை வெளிப்படைத்தன்மை 27.02.2023

குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத்திருத்திக்கொள்ள அவ்வமைப்பு தயாராகவேண்டும். நடந்து முடிந்த மெயின் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நியாயமாகத் தேர்வு எழுதிய தேர்வர்கள் நம்புகிறார்கள். 

ஒரு வடக்கன் சோக( !) கதா.... 22.02.2023

வட இந்திய தொழிலாளர்கள் ஏன் தமிழகத்தில் குவிகிறார்கள்? இது, தமிழ்த் தொழிலாளி வர்க்கத்தைப்பாதிக்குமா?  தொழில்துறை என்ன சொல்கிறது? புலம் பெயர் தொழிலாளியின் சட்டப்பூர்வ உரிமைகள் என்னென்ன? (படம்: பிக்ஸாபே)

வாழ்க்கை உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்ன? 31.01.2023

வாழ்க்கை எனும் பெருங்கடல், நமக்கு தினமும் ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் அதைப் புரிந்துகொள்கிறோமா? எதையாவது கற்றுக்கொள்கிறோமா?

கேரளப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாத விலக்கு விடுமுறை 20.01.2023

பல்கலைக்கழக மாணவியருக்கு மாத விலக்கு விடுமுறை, பேறு கால விடுமுறை ஆகியவற்றை அறிவித்திருக்கிறது கேரளம். இதன் பின்னணியில் முற்போக்கான ஒரு பெண் அமைச்சர் இருக்கிறார்.

சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி: திரு.ஆழி செந்தில்நாதன் அவர்களுடன் நேர்காணல் 15.01.2023

சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் பபாசி புத்தகக் கண்காட்சி வளாகத்திலேயே பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நாளைமுதல் நடக்க இருக்கிறது. மொத்தம் 3 நாட்கள் நடக்கும் (ஜன.16-19) இந்நிகழ்வில் பன்னாட்டு பதிப்பாளர்களுடன் நம்மவர்கள் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கின்றனர். அக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஆழி பதிப்பகத்தின் உரிமையாளருமான திரு.ஆழி செந்தில்நாதன் அவர்களுடன் ஓர் உரையாடல் இது.. 

நூல் பரிந்துரை: தமிழர் திருமணம்-அன்றுமுதல் இன்றுவரை. 11.01.2023

பாரதி புத்தகாலயம், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ‘தமிழர் திருமணம்-அன்று முதல் இன்றுவரை’ என்ற சிறு நூலை இன்று பரிந்துரைக்கிறேன். 

நூல் பரிந்துரை: பெத்தவன் (எழுத்தாளர்: இமையம்) 05.01.2023

சாதி ஆணவக் கொலைகள், காதலிப்பவர்களை மட்டும் குறிவைப்பதில்லை. காதல் கொண்ட இளம் நெஞ்சங்களைப் பெற்ற வயிறுகளையும் தீய்த்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு கதையை துள்ளத்துடிக்க நம் கைகளில் போடுகிறார் எழுத்தாளர் இமையம். என்னை அழ வைத்த கதை இது. 

வாசிப்பும் நேசிப்பும் 31.12.2022

நூல் வாசிப்பு ஏன் முக்கியமானது, அது வாசகனை என்னவெல்லாம் செய்யும்...இன்றைய வாசிப்புப் பழக்கம் எதை நோக்கிச் செல்கிறது?-இவற்றையெல்லாம் எனது நண்பரும் திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தின் சமூக விலக்கல் துறையின் (social exclusion) தலைவருமான பேரா.வெ.பெ.ராமஜெயம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன்.  பச்சையப்பன் கல்லூரி, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களின் தயாரிப்பு அவர்.  எனது முன்னாள் இந்...

கவிதா ராமு, இ.ஆ.ப வாழ்க! 28.12.2022

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் பகுதியில் பட்டியலின மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களை அழைத்துச்சென்று உடனடியாக ஆலய நுழைவை  மேற்கொண்டிருக்கின்றனர்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இ.ஆ.ப மற்றும் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப. ஆகிய இருவரும்.  இதுதான் நீதி! இதற்குத்தான் அதிகாரம்! நீவிர் வாழ்க! (படம்: அவரது முகநூல் பக்கத்திலிருந்து) 

ஐ.சி.ஐ.சி.சி. வங்கியின் முன்னாள் தலைவர் கைது 23.12.2022

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சாந்தா கோச்சாரும் அவரது கணவர் தீபக் கோச்சாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்குவதுபோல் கொடுத்து, அவர்களிடமிருந்து தங்கள் நிறுவனத்துக்குப் பணத்தைக் கைமாற்றிக்கொண்ட ‘சாதுர்யத்துக்கு’ கிடைத்திருக்கும் பரிசு இது. அந்தக்கடனை வராக்கடனாக அறிவித்தது இன்னும் பிரமாதம்! காலம், சாந்தா கோச்சாருக்கு தகுந்த பாடத்தைக் கற்பித்திர...

இலக்கியவாதிகளும் இடக்கரடக்கலும் 23.12.2022

வணிக எழுத்துக்கும், ‘இலக்கிய’ எழுத்துக்கும் சண்டை நடப்பது காலம் காலமாகத்தொடர்கிறது. இவ்விரு உலக ரசிகர் மன்றங்கள் மாறி மாறி மோதிக்கொள்வதும் தொடர்கிறது. இது இப்படியே இருக்கலாமா?  எது இலக்கியம்? எது இலக்கியமன்று? நமது அளவுகோல்கள் எப்போது மாறும்? சாதியும் மதமும்  ஒரு கட்சி அரசியல் சார்பும் தனிநபர் துதியும் இலக்கியமாகும் சூழலில் எதுதான் இலக்கியம்?

’நம்ம ஸ்கூல் Vs நம் பள்ளி’ 22.12.2022

அரசுத்திட்டங்களுக்குப் பெயர் சூட்டும்போது எழுத்துத்தமிழிலும் பிழையற்ற மொழியிலும், பிற மொழிக்கலப்பின்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

விவசாயிகள் தற்கொலை என்றுதான் நிற்கும்? 11.12.2022

மத்திய அரசின் தகவலின்படி தினசரி 15 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதனால் இது நேர்கிறது? இதனைத்தடுக்க என்னதான் வழி? (படம்: நன்றி: பிக்ஸாபே)

மனித உரிமைகள் தினம் 10.12.2022

சர்வதேச மனித உரிமைகள் தினமான (டிச.10) இன்று, நீதியரசர் டி.கே. பாசு அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. கைது செய்யப்படும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதற்குக் காரணம், திரு.டி.கே.பாசு அவர்கள். அவர் மறைந்தாலும் அவரது பங்களிப்பை மனித உரிமை ஆர்வலர்களால் என்றென்றைக்கும் மறக்க முடியாது. 

தமிழுக்கா இந்நிலை!? 08.12.2022

தமிழ் ஓர் அற்புதமான மொழி. நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வ்தில் பெருமையடைகிறோம். ஆனால், நம் தாய் மொழியை எந்த அழகில் வைத்திருக்கிறோம்?

"Getting to Know Gandhi: A biographer's journey "-speech by Ramachandra Guha 07.12.2022

Eminent historian and think tank Mr. Ramachandra Guha delivered an extraordinary speech in the Bangalore Literary Festival on 3rd Dec 2022. Sorry friends... it was shot by me using my Vivo phone without additional professional equipment. So, beg your pardon pls!

பெங்களூரு இலக்கியத் திருவிழா பட்டையைக் கிளப்பிவிட்டது. 06.12.2022

200க்கும் மேற்பட்ட இலக்கியவாதிகள் வாசகர்களோடு உரையாடும் திருவிழாவை பெங்களூரு இலக்கியத் திருவிழா அழகாக, நேர்த்தியாக செய்துகாட்டியது.

பாலியல் துன்புறுத்தலும் குழந்தைகளும்... 02.12.2022

தொழில்நுட்பமும் நாகரீகமும் இவ்வள்வு முன்னேறியும் குழந்தைகளைப் பாலியல் ரீதியில் அணுகுவதும், பாலியல் சந்தையில் அவர்களது அந்தரங்கத்தை விற்பதும் நாட்டில் நடக்கிறது. இதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டாமா? இதுகுறித்து விரிவாக உரையாட வேண்டாமா? (படம்: நன்றி: அலெக்ஸா, பிக்ஸாபே)

தமிழினிது 30.11.2022

தமிழ் மொழியின் சிறப்புகளைச் சொல்ல சொற்கள் போதாது. தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளைச் சொல்ல வாழ்நாள் போதாது. அத்தகைய இலக்கியச் சொத்தின் ஒரு துளி இது:  முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. (இலக்கியம்: குறுந்தொகை. இயற்றியவர்: கூடலூர்க்கிழார்)

72 வயது இளைஞர் 27.11.2022

அமெரிக்காவைச்சேர்ந்த 72 வயது பாட்காஸ்டர் எட்கர்லி, 15 ஆண்டுகளாக பாட்காஸ்டிங்கில் மும்முரமாக இருக்கிறார். தனக்குப்பிடித்த கிண்ட்ல் மின்னூல் சாதனத்தைப் புகழ்ந்து தள்ளுகிறார். பாடம் நடத்துகிறார். இவரைப்போலவே நாமும் நமது விருப்பங்களை வெளிப்படுத்துகிறோமா? நமது திறமைகளுக்கும் ஆர்வங்களுக்கும் தீனி போடுகிறோமா?

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு... 25.11.2022

25% வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.9 ஆயிரம் கோடியை இழந்திருக்கின்றனர் தமிழர்கள்....

கர்ப்பிணி நாயை 25 பேர் அடித்தே கொன்றிருக்கிறார்கள் தில்லியில். 21.11.2022

எப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் வாழ்கிறோம் நாம்!?

10% இட ஒதுக்கீடு: தத்துவமும் கணக்குகளும் 19.11.2022

10% இட ஒதுக்கீட்டை வரவேற்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் வலுவான காரணங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்தால் சுவையான பல தகவல்கள் கிடைக்கும். 

10% இட ஒதுக்கீடும் சமூக நீதியும் 12.11.2022

உயர் சமூகத்தினருக்கான 10% இட ஒதுக்கீடுதான் இன்றைய பேசுபொருள். தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இது, சமூக நீதிக்கு எதிரான தாக்குதல் என்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்துக் கொஞ்சம் பேசுவோம்.

சமயச் சார்பின்மை குறித்து எஸ்.ஆர். பொம்மை (எ) இந்திய அரசு வழக்கு சொல்வது என்ன? 31.10.2022

ஆளுநர்களின் பணி, நடத்தை விதிகள், அதிகாரம் ஆகியவை இன்றும் பேசுபொருளாகின்றன.

Ouça o podcast Pattikkaadu no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos