durai arasu

Pattikkaadu

News TA ↓ 128 episodes

Become a Paid Subscriber: https://podcasters.spotify.com/pod/show/durai-arasu/subscribe ஒரு எளிய கிராமத்தானின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதே எனது இந்தக் களம்.ஆர்வம், ஆர்வக்கோளாறு, அறிவுத் தீட்சண்யம்(!), கடுமை, இனிமை, எளிமை, கறார் என்று எல்லாம் கலந்த கதம்ப சாதம் இது.

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

durai arasu

Category

News

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Oct 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

”தமிழர்-கன்னடர் நல்லுறவு-மொழியால் நிகழட்டும்!”- பெங்களூர் மூத்த பத்திரிகையாளர் முத்துமணி நன்னன் நேர்காணல் 21.10.2024

பெங்களூருவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல் பணியில் சிறப்பாக இயங்கி வருபவர் திரு.முத்துமணி நன்னன் அவர்கள். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கி திறம்பட நடத்திவருபவர். தொடர்ச்சியாகத் தமிழ்ப்புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறார். சிறந்த ஆய்வாளர். தமிழ்ப்பற்றாளர். எனது நெருங்கிய நண்பர். அவரிடம் ஒரு பெரிய அறிவுச் செல்வமே இருக்கிறது. அவருடன் ஒரு நீண்ட உரையாடல்…

நாத்திகர் மாநாட்டில் ஒரு ‘மதங்களற்ற’ தோழன்! 20.10.2024

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 12 ஆம் தேதி (அக்.12, 2024) லிட்மஸ் 2024 என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. அறிவியல் பார்வை, சமூக நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்தும் எஸென்ஸ் என்ற அமைப்பு இதனை ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சங்கர் என்ற அருமையான தோழரைச் சந்தித்தேன். ‘மதங்களற்ற மனிதர்கள்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை எர்...

கேரள சினிமா: கடவுளின் தேசத்தில் சாத்தானின் கரங்களா? 21.08.2024

மலையாளத்திரை உலகில் பெண்கள் பாலியல் ரீதியிலாகவும் உழைப்பின் அடிப்படையிலும் கடுமையாகச் சுரண்டப்படுவதாக நீதியரசர் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. முற்போக்குப் பார்வையும் கல்வியறிவும் சமூக நல்லிணக்க மனோபாவமும் கொண்ட கடவுளின் சொந்த தேசம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?  என்ன செய்யப்போகிறது?

இலக்கியமும் கூட்டங்களும் 29.07.2024

இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வதே ஒரு சுகானுபவம். செண்டிமெண்ட், ஆக்ரோஷம், கதாநாயகர் வருகை, ரசிகர்களின் விசில், வெட்டு குத்து சண்டைகள், குரோதம், கோடை வாசஸ்தல பின்னணியில் பாடல்கள், ஆடல்கள் என்று எல்லாம் கலந்த கலவை சாதம் அது.  (pix courtesy: pixabay)

நூல் பரிந்துரை: ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் 24.06.2024

முடி திருத்தும் அழகு நிலையம் பேசும் கவிதைகள் இவை…

பகத் பாசிலுக்கு ‘கொடிய’ நோயா? 31.05.2024

ஏ.டி.எச்.டி என்பது உண்மையில் ஒரு நோயா? எதற்காக இந்தப் புரளி?

பி.இ படிக்கப் போறீங்களா? 23.05.2024

பொறியியலில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. (pic courtesy: Pixabay)

+1 ல் எந்த குரூப் சூப்பர்? 22.05.2024

பத்தாம் வகுப்புக்கு பின்னர் இதுதானே முக்கிய கேள்வி…

பொறியியல் படிப்பைத் தெரிவு செய்யும் முன்… 16.05.2024

பிடியுங்கள் ஆலோசனைகளை!

கலை, அறிவியலையும் கண் வைக்கலாம் 14.05.2024

நமக்குத் தெரியாத எண்ணற்ற படிப்புகளை கலை, அறிவியல் படிப்புகள் வழங்குகின்றன.

+2 க்கு அடுத்து என்ன? 07.05.2024

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு அடுத்து என்ன செய்வது? என்ன செய்ய வேண்டும்?

ராகுல் எடுத்த பிரம்மாஸ்திரம் 15.10.2023

சாதிவாரிக்கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் என்ற பிரம்மாஸ்திரத்தை ராகுல் காந்தி கையில் எடுத்திருக்கிறார். இந்தியா கூட்டணியின் இப்புதிய வியூகத்தின் பின்புலம் என்ன?

ஷவர்மா மட்டுமா பிரச்சனை? 28.09.2023

சுகாதாரமற்ற சூழல், பழைய எண்ணெய், தரமற்ற மூலப்பொருட்கள் என்று பல அம்சங்களும் சேர்ந்து உணவுத்தொழிலையும் நுகர்வோரையும் அச்சுறுத்திவருகின்றன. (Image by  Mariya  from  Pixabay)

பாலுறவுப் படங்கள் பார்ப்பது குற்றமா? 16.09.2023

ஒரு தனிமனிதன்,பாலுறவுக்காட்சிகளை தனது செல்பேசியில் தனிமையில் பார்ப்பது குற்றமல்ல என்று கேரள உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292 ஆவது பிரிவு சொல்வதுதான் என்ன? (Image by  Saji Mohamed  from  Pixabay)

வாடகை சைக்கிள் ஓட்டியிருக்கீங்களா? 04.09.2023

1990கள்வரை உங்களுக்குப் பள்ளிப் பருவம் இருந்திருந்தால் நிச்சயம் வாடகை சைக்கில் ஓட்டிய பழக்கம் உங்களுக்கு இருந்திருக்கும். குரங்குப் பெடல் தொடங்கி, சைக்கிள் சாகசம் வரைக்கும் எல்லாமே வாடகை சைக்கிள்களில்தான் நடக்கும். (Photo courtesy: toodlingstudio)

விஸ்வகர்மா திட்டத்துக்கு ஏன் எதிர்ப்பு? 31.08.2023

கிராம்ப்புற் கைவினைஞர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் விஸ்வகர்மா திட்டத்தை ஏன் தி.க. உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்க்கின்றன?

”அவரு எங்க ஆளுக!” 25.08.2023

அறிவியல் அறிஞர்முதல் தொழிலதிபர்வரை... வெற்றிபெற்ற மனிதர்களின் சாதியை ஆராயும் அளவுக்கு தமிழன் தரம் தாழ்ந்து போயிருக்கிறானா?

காலில் விழலாமா? 22.08.2023

காலில் விழும் கலாச்சாரம் குறித்து திரும்பவும் பேசத்தொடங்கியிருக்கிறோம். ஒரு மனிதன், இன்னொரு மனிதனின் காலில் விழுவது சரிதானா? (Image by freepik)

அமெரிக்க தொழில் வழிகாட்டி டெல்.கணேசன் நேர்காணல் 20.08.2023

திருச்சியில் பிறந்து, அமெரிக்காவில் வெற்றிகரமான தொழில் முனைவோராக உயர்ந்திருப்பவர் திரு.டெல்.கணேசன். ரூ.500 கோடி மதிப்புள்ள கைபா குழுமத்தின் தலைவர். தகவல் தொழில்நுட்பம், திரைப்பட தயாரிப்பு, விநியோகம், துணிகர முதலீடு என்று பல முனைகளிலும் இயங்கிவரும் நிறுவனம் அவருடையது. அவர் அண்மையில் The Pursuit: A manifesto from the American Dream Guru என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அதனையொட்டி அவருடன் இண...

பெண்களை மதியுங்கள்: உச்சநீதிமன்றம் 17.08.2023

நீதிமன்றம் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தீர்ப்புகள், மனுக்களிலும் பெண்களை சட்டப்படியான சொற்களைவைத்துத்தான் விளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியிருக்கிறது. எந்தெந்த சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற கையேட்டையும் வெளியிட்டிருக்கிறது. Image by  Gordon Johnson  from  Pixabay

பரஸ்பர நிதித்திட்டங்களில் முதலீடு செய்யுங்க! 10.08.2023

பங்குச்சந்தையைவிட, ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட் துறை. அவற்றில் முதலீடு செய்வதன்மூலம் நீண்டகால அடிப்படையில் கணிசமான லாபம் பார்க்க முடியும். தற்போது நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வளரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (செயற்கை நுண்ணறிவு, மாற்று எரிசக்தி முதலிய…) முதலீடு செய்யும் பரஸ்பர நிதித் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலா...

ஃபகத் ஃபாசில் எடிட்: என்ன ஆச்சு தமிழ்ச்சமூகத்துக்கு? 02.08.2023

’மாமன்னன்’ திரைப்படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம், சாதிவெறி கொண்ட அதிகார வெறிபிடித்த பாத்திரம். அந்தக்கூட்டத்தால் நசுக்கப்பட்ட எளிய மனிதர்கள் அதிகாரத்துக்கு வருவதோடு படம் முடிகிறது. ஆனால், சாதிப் பெருமிதத் தமிழர்கள், தங்கள் சாதிப்பெருமையைப் பாடுவதற்காக, ஃபகத் ஃபாசிலின் காட்சிகளை எடிட் செய்து வீடியோக்களாக வெளியிட்டு மீசை முறுக்குகிறார்கள். இணையத்தில் எதற்காக இவ்வளவு  ஜாதிப்பெருமை மீசை மயிர் ஒட...

பங்குச்சந்தை ஒரு மர்மக்குகையா? 30.06.2023

பங்குச்சந்தை சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கு நம்மூரில் பஞ்சமே இல்லை. அது, நம் பணத்தைப் பிடுங்கும் இடம் என அஞ்சி ஓடுவோர் இருக்கிறார்கள். அது, எவருமே புரிந்துகொள்ள முடியாத மந்திரம் என்று மயங்குவோர் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்க மக்களுக்கு அது தேவையற்ற தலைவலி என்று ஒதுங்குவோரும் இருக்கிறார்கள். உண்மையில், பங்குச்சந்தை என்பது என்ன?

நான் ஏன் பிறந்தேன்? 28.06.2023

ஒரு பிறந்த நாள் என்பது அன்றைக்கு மட்டுமான நாளா? அதற்கு முந்தைய நாட்களை அசைபோடும் நாள் அல்லவா....

’கெளரவ டாக்டர்’ பரிதாபங்கள் 05.03.2023

கெளரவ டாக்டர், சிறந்த சமூக சேவகர், சிறந்த தொழிலதிபர்-ஆகிய பெயர்களில் பட்டம் வழங்குவதையே ஒரு கும்பல் பல ஆண்டுகளாக ஒரு தொழிலாக செய்துவருகிறது. அண்மையில் நடிகர் வடிவேலு, ’பரிதாபங்கள்’ புகழ் கோபி, சுதாகர் ஆகியோர்கூட இதுபோன்ற ஒரு கும்பலிடம் சிக்கி ஏமாந்திருக்கிறார்கள். புகழ், மயக்கம்தான். தவறில்லைதான். ஆனால், அங்கீகாரம் எவரிடமிருந்து வருகிறது என்று விசாரிக்கவாவது வேண்டாமோ? (Image by 愚木混株 Cdd20 from...

Listen to the Pattikkaadu podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.