Raja Nagarajan

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Kids TA ↓ Epizody: 241

Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:ainkaran2020@gmail.com

Autor

Raja Nagarajan

Kategorie

Kids

Web podcastu

podcasters.spotify.com

Nejnovější epizoda

15. dub 2026

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

நூற்றி அறுபத்தி நாலாவது கதை:அமீரும் தேவ தூதரும் (The Emir snd the Angel) 28.06.2023

இது ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை. நாட்டு அரசர்-அமீர்-ஒரு கெட்டவர். கொடுங்கோல்ஆ ட்சி செய்பவர். மக்கள் நலனை பற்றி கவலைபடாதவர். ஒரு நாள்,அவர் கனவில், ஒரு தேவ தூதர்தோன்றி, அவர் நல்ல ,நியாயமான அமீராக மாற வேண்டும் என்கிறார். அமீர்,அந்த கனவை பெரிதாக எடுத்து கொள்ளாமல். வேட்டைக்கு போகிறார். அங்கே அவருக்கு பெரிய ஆபத்துக்கள் வருகின்றன. என்ன நடந்தது? அமீர் தப்பினாரா? கதையை கேளுங்கள்....

நூற்றி அறுபத்தி மூன்றாவது கதை:நோவாவும் சாத்தானும் (Noah and The Devil) 21.06.2023

நோவாவின் ஆர்க் (கப்பல்) கதை நிறைய பேருக்கு தெரிந்த கதை. கடவுள் கட்டளைப்படி கட்டப்பட்ட அந்த கப்பலில்,நோவாவின் குடும்பத்தோடு உலகத்தில் உள்ள எல்லா பறவை-மிருக இனத்திலிருந்து ஆண்-பெண் ஜோடியை நோவா அழைத்து கொள்கிறார். சாத்தான் எப்படி அங்கே வந்தார்? சாத்தான் திருட்டுத்தனமாக கப்பலுக்குள் வந்து கப்பலை மூழ்க அடிக்க முயற்சிக்கிறார். நோவா சாத்தானின் திட்டத்தை முறியடிக்கிறார்.. எப்படி? இந்த ருமேனியா நாட்டு நாடோ...

நூற்றி அறுபத்தி இரண்டாவது கதை:உண்மையான கருணை(True Kindness) 14.06.2023

இது ஒரு பாலஸ்தீன நாட்டுக் கதை. நாட்டு அரசருக்கும் அவருடைய பிரதம மந்திரிக்கும் ஒரு விவாதம்- உண்மையான கருணையை பற்றி- அரசர் சொன்னார்-கருணை உள்ளம் படைத்தவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். மந்திரி சொண்ணார்-ஏழைகள், முட்டாள்கள்.கெட்ட குணம் படைத்தவர்கள்-என்றார். அரசர்,அதற்கு பதில் சொல்லாமல் மறு நாள்,நீதிபதியோடு,மாறு வேடத்தில் ,ஊர் சுற்றினார் அவர் தேடலில்,அவருக்கு உணமையான கருணையை பற்றி விளக்கம்...

நூற்றி அறுபத்தி ஒன்றாவது கதை: அடுத்த சுல்தான் (The Next Sultan) 07.06.2023

இது ஒரு ஏமன் நாட்டுக் கதை. ஏமன் நாட்டு சுல்தானுக்கு 3 மகன்கள். 3 பேரும் நல்ல கெட்டிகாரர்கள். அவர்களில் ஒருவரை சுல்தானாக ஆக்க அவர் முடிவு செயதார். யாரை சுல்தானாக்குவது? கடினமான் முடிவு.. சுல்தான் எப்படி முடிவு செயதார்? கதையை கேளுங்கள்.....

நூற்றி அறுபதாவது கதை:பெர்சிபனியும் மாதுளம் பழமும் (Persephone and The Pomegranate) 01.06.2023

இது கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதை. கடவுள்களின் தலைவரான் ஜீயஸுக்கும் விவசாய கடவுளான, டெமெடருக்கும் பிறந்த மகள் தான், பெர்சிபனி. அவளை,பாதாளஉலகத்தின் அதிபதியான,ஹேடிஸ்,கடத்தி செல்கிறார். அவளை மீட்க,அம்மா,டெமெடர், ஒரு போராட்டமே நடத்துகிறார். அதில் வெற்றி பெற்றாளா? அம்மாவும் பெண்ணும் மறுபடி சேர்ந்தார்களா? கதையை கேளுங்கள்...

நூற்றி ஐம்பத்தி ஒன்பதாவது கதை: மந்திரிக்கப்பட்ட குடை(The Enchanted Umbrella) 24.05.2023

இது ஒரு பிரான்ஸ் நாட்டுக் கதை. படோவ் என்ற வாலிபன், ஏமாற்றப்படுகிறான். அவனுக்கு ,நியாயமாக சேர வேண்டிய சொத்துக்கு பதில், ஒரு கிழிந்த பழைய குடை மட்டும் கிடைக்கிறது. அந்த குடை,மழைக்கு அவனுக்கு உபயோகமாக இருந்ததோடு,இன்னும் பல வழிகளில் அவனுக்கு உதவி செய்கிறது. எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி ஐம்பத்தி எட்டாவது கதை:ஒரு தங்க நாணயம் (One Gold Coin) 18.05.2023

இது ஒரு போலந்து நாட்டுக் கதை. யூதர்களின் புனிதமான சாபாத்(Sabbath) அன்று ஒரு பக்தியுள்ள ஏழை யூதர்,தேவாலயம் செல்லும் வழியில்,ஒரு தங்க குவியலை பார்க்கிறார். சாபாத் அன்று பணத்தை தொட கூடாது என்ற நியதி படி அவர் மேலே செல்கிறார். சாபாத் முடிந்து திரும்பி வந்த போது அந்த பணத்தை யாரோ எடுத்திருந்தார்கள். ஒரே ஒரு தங்க நாணயம் மட்டும் அங்கே இருந்தது.அதை அவர் எடுத்து வீட்டில் தன் மனைவியிடம் கொடுக்கிறார்.' அப்...

நூற்றி ஐம்பத்தி ஏழாவது கதை: மானும் நத்தையும் (The Deer and The Snail) 10.05.2023

இது ஒரு பிலிப்பைன் நாட்டுக்கதை. வேகமாக ஓடும் மானுக்கும், மெதுவாக செல்லும் நத்தைக்கும் ஒரு ஓட்ட பந்தயம். யாருக்கு வெற்றி? கதையை கேளுங்கள்... .

நூற்றி ஐம்பத்தி ஆறாவது கதை:கடவுள் மேல் நம்பிக்கை-2 கதைகள்(Trust in God-2 Stories) 03.05.2023

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது காலம் காலமாக சொல்லப்படும் அறிவுரை. கடவுளை நம்ப வேண்டும்: கடவுளை மட்டும் நம்பவேண்டும். அந்த நம்பிக்கை முழுமையாக இருக்க வேண்டும். அப்படி செயதால், கடவுள்அருள் நிச்சயம் கிடைக்கும். இந்த கருத்தை விளக்க 2 கதைகள் 1.2 பிச்சைகாரர்கள்(2 Beggars) 2.நம்பிக்கை (Faith) Listen to the story...

நூற்றி ஐம்பத்தி ஐந்தாவது கதை:பாட்டியும் பெரிய சுரைக்காயும்(Grandma & The Big Gourd) 26.04.2023

இது வங்காள மாகணத்தில் சொல்லப்படும்ஒ ரு நாடோடி கதை. இதை ஆங்கிலத்தில்எழுதி பிரபல படித்தியவர், சித்ரா பானர்ஜி திவாகருனி என்ற கதாசிரியர். ஒரு பாட்டி,காட்டுக்கு மறுபக்கத்தில் இருக்கும் தன் மகளை பார்க்க அந்த காட்டு வழியாக் சென்று பத்திரமாக திரும்பி வருகிறாள். காட்டில் அவள்பல பயங்கர மிருகங்களை சந்திக்கிறாள். தன் புத்திசாலித்தனத்தால், அவள்அவைகளிடமிருந்து தப்புகிறாள். எப்படி? கதையை கேளுங்கள்.......,

நூற்றி ஐம்பத்தி நாலாவது கதை:காட்டில் சிப்பாயும் ரஷ்ய நாட்டு அரசரும் (Soldier and Tsar in the Forest) 20.04.2023

இது ஒரு ரஷ்ய நாட்டு நாடோடி கதை. அண்ணன் தளபதியால் அவமான பட்ட தம்பி சிப்பாய்,காட்டுக்கு ஓடி போகிறான். அங்கே வேட்டையாட வந்த அரசருடன், அரசர் என்று தெரியாமல், ஒரு இரவை கழிக்கிறான். அங்கே நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. என்ன சம்பவங்கள்? கதையை கேளுங்கள்.....

நூற்றி ஐம்பத்தி மூன்றாவது கதை: உண்மையும் பொய்யும்-2 கதைகள் (Truth&Falsehood-Two Stories) 13.04.2023

உண்மையுக்கும் பொய்க்கும், காலம் காலமாக,போர் நடந்து கொண்டிருக்கிறது. எப்போது எல்லாம்,உண்மை வாய் திறக்காமல்.அமைதியாக இருக்கிறதோ,அப்போது எல்லாம், பொய்க்குத்தான் வெற்றி. இதை விளக்க 2 கதைகள்: 1.உண்மையும் பொய்யும் 2.நெருப்பு,தண்ணீர்,உண்மை,பொய் கதையை கேளுங்கள்.......

நூற்றி ஐம்பத்தி இரண்டாவது கதை:போர்வையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் (A Beggar in The Blanket) 06.04.2023

இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை. அண்ணன் தம்பி உறவுகளை பற்றி அநேக கதைகள் இருக்கின்றன. அண்ணன் மனைவியால்,சண்டைகள் ஏற்பட்ட கதைகளும் உண்டு. இந்த கதையில் வரும் அண்ணி ஒரு நல்ல பெண். பணக்கார நண்பர்களை நம்பி, ஏழை தம்பியை அலட்சிய படுத்தும் கணவருக்கு, ஒரு நல்ல பாடம் கற்று கொடுக்கிறாள். எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி ஐம்பத்தி ஒன்றாவது கதை:யாங்கின் புத்தாண்டு (Yang's New Year) 30.03.2023

இது ஒரு சீன நட்டுக் கதை. சீன நாட்டுக்காரர்களுக்கு,அவர்களுடைய புத்தாண்டு ஒரு விசேஷமான பண்டிகை. குறிப்பாக,New Year Eve dinner, சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒரு பள்ளிகூட ஆசிரியர்,தன் ஒரு வருஷ சேமிப்பை,வெள்ளி கட்டியாக மாற்றி தன் ஊருக்கு திரும்பிகிறார். மனவியுடன்,புது வர்ஷத்தை கொண்டாட போகிறோம் என்ற அவர் எதிர்பார்ப்பு, ஒரே நிமிடத்தில் தகர்ந்தது. பணத்தை இழந்து,ஏழையாக ஆகி, சாப்பட்டுக்காக திருடும் அளவுக்கு போ...

நூற்றி ஐம்பதாவது கதை:ஶ்ரீ ராமகிருஷ்ணரின் 2 நீதி கதைகள் (Sri ramakrishnan's 2 Moral Stories) 23.03.2023

ஶ்ரீ ராமகிருஷ்ணரின் 2 நீதி கதைகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. முதலாவது கதை: கடவுள் எங்கும் இருக்கிறார். God is everywhere இரண்டாவது கதை: இலக்கை அடையும் வரை முயற்ச்சியை நிறுத்தாதே Stop not till the goal is achieved கதையை கேளுங்கள்......

நூற்றி நாற்பத்தி ஒன்பதாவது கதை: இளவரசனும் 3 உயிர் ஆபத்துகளும் (The Prince and 3 Perils of Life) 16.03.2023

இது ஒரு நைல் நதி பகுதி நாடுகளில் சொல்லப்படும் நாடோடி கதை. ஒவ்வொரு கலாசாரத்திலும்  ஒரு நம்பிக்கை. குழந்தைகள் பிறக்கும் போதே, அவர்களுடையு வாழ்க்கையில் நடக்க  போகும் நல்லது கெட்டதுகளை கடவுள் எழுதி வைப்பதாகவதும், அதை யாராலும்  மாற்ற முடியாது என்பது. ஆனால்,சில சமயங்களில்,விதியை  மதியால் (புத்திசாலித்தனம்) வென்றாதாக கதைகள் உண்டு. இந்த கதையிலும்,ஒரு இளவரசி, தன் புத்திசாலித்தனத்தால், த...

நூற்றி நாற்பத்தி எட்டாவது கதை (சேவல் விடியற்காலையில் வானத்தை பார்த்து ஏன் கூவுகிறது?(Why the Rooster looks Skyward and crows at the Dawn) 09.03.2023

இது  ஒரு கொரிய நாட்டுக் கதை. தினசரி அதி காலையில், சேவல்,வானத்தைபார்ர்து “கொக்கரக்கோ” என்று கூவுகிறது. ஏன் அப்படி செயகிறது? அதற்கு பின்னால்.ஒரு சுகமான ,சோகமான  கதை இருக்கு. அது என்ன? கதையை கேளுங்கள்….

நூற்றி நாற்பத்தி ஏழாவது கதை:சந்திரனில் ஒரு முயல் (A Rabbit in the Moon) 03.03.2023

இது   ஜாதக கதைகளில் ஒன்று. புத்தர்,புத்தராக  பிறப்பதற்கு முன் நிறைய அவதாரங்கள் எடுத்து இருக்கிறார். அவைகளில் ஒன்று, முயலாக பிறந்தது. மற்றவர்களுக்காக, தன் உயிரை தியாகம் செய்ய  தயாரான  முயலுக்கு பரிசாக  கடவுள், அதற்கு சந்திரனில் இடம் கொடுக்கிறார். இது தான், Moon Rabbit  கதை. கதையை கேளுங்கள

நூற்றி நாற்பத்தி ஆறாவது கதை:மீனவனும் வெள்ளி மீனும் (The Fisherman and The Silver Fish) 23.02.2023

இது ஒரு யூத நாட்டுக் கதை. ஒரு சாதாரண மீனவனுக்கு  அதிர்ஷ்ட வசமாக, ஒரு பேசும்  வெள்ளி மீனின் நட்பு கிடைக்கிறது. அதன் உதவியால், உயர்ந்த பதவிகள் அவனுக்கு கிடைக்கின்றன. முடிவில் கடவுளாக ஆக ஆசை படுகிறான். அதன் விளைவு என்ன? கதையை  கேளுங்கள்......,

நூற்றி நாற்பத்தி ஐந்தாவது கதை: நேர்மையற்ற நீதிபதி காராகோஷ் (The Dishonest Judge Karakosh) 16.02.2023

இது ஒரு சூடான்-எகிப்து நாடுகளில்  சொல்லப்படும் நாடோடி  கதை.  இந்த கதையின்,ஹீரோ,ஒரு ஜட்ஜ். இவர் ஒரு வித்தியாசமான,சுயநலமுள்ள, நேர்மையற்ற நீதிபதி .இவர் கோர்டில், எவருக்கும் நியாயமான தீர்ப்பு கிடைக்காது. இவர் யார்? என்ன வழக்கை விசாரித்தார்? என்ன தீர்ப்பு வழங்கினார்? கதையை கேளுங்கள்.....

நூற்றி நாற்பத்தி நாலாவது கதை:ஒரு கட்டு குச்சிகள் (A Bundle of Sticks) 09.02.2023

இது ஒரு பாரசீக நாட்டுக் கதை. கம்பளங்களுக்கு பேர் போன பாரசீக நாட்டில்,ஒரு புகழ் வாய்ந்த நெசவாளி தன் 3 மகன்களோடு வசித்து வந்தார். ஒற்றுமையாக இருந்த அந்த  பிள்ளைகள்ஒ ரு பரிசு போட்டிக்காக  சண்டை போடுகிறார்கள். பெரியவர்,ஒரு சிறு நாடகத்தின் மூலம், ஒற்றுமையின் முக்கியத்தை அவர்களுக்கு புரிய வைக்கிறார். எப்படி? கதையை கேளுங்கள்.....

நூற்றி நாற்பத்தி மூன்றாவது கதை:ஒரு ராஜாவும் நான்கு பெண்களும் (A King and Four Girls) 02.02.2023

இது பஞ்சாப் மானிலத்தில் சொல்லப்படும் ஒரு நாடோடி கதை. 4 பெண்கள்,தங்களுக்கு பிடித்தமான ருசியை (Taste) பற்றி பேசியதை,அந்த ஊர் ராஜா ஒட்டு கேட்கிறார். மறு நாள்,அவர்களை கூப்பிட்டு அதன் காரணங்களை கேட்கிறார். ஒரு பெண்,பொய் சொல்வது தான் ஒசத்தியன ருசி என்றும்,பொய்யே சொல்லாதவர்கள் கூட பொய் சொல்ல  வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம் என்று ஒரு சவால் விடுகிறாள். அதில்,வெற்றியும் அடைகிறாள். எப்படி? கதையை கேளுங்கள...

நூற்றி நாற்பத்தி இரண்டாவது கதை:அத்ரி நகரத்தின் ஆராய்ச்சி மணி (Atri City's Bell of Justice) 27.01.2023

இது ஒரு இதாலி நாட்டுக்கதை. மன்னர்கள் ஆண்ட காலங்களில், மக்களின் குறைகளை கேட்க, நகரத்தின் மத்திய பகுதியில், ஒரு மணி மண்டபம் கட்டி,அதில் ஒரு பெரிய மணியை வைத்திருப்பார்கள். யாருக்காவது தீங்கு இழைக்கப்பட்டால், அவர்கள் இந்த மணியை அடிப்பார்கள். நீதிபதிகள்,மணி சத்தத்தை கேட்டவுடன் அங்கு வந்து குறைகளை கேட்டு,நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். மக்கள் குறைகளை கேட்க உதவும்' இந்த மணிக்கு,ஆராய்ச்சி மணி  (Bell of...

நூற்றி நாற்பத்தி ஒன்றாவது கதை:நூல் நூற்பவர் பாதிமாவின் நீண்ட பயணம் (Spinner Fatima's Long Journey) 20.01.2023

இது ஒரு மொராக்கா நாட்டுக் கதை. மொராக்கா நாட்டில் பிறந்த ஒரு பெண்- பாத்திமா-சீன தேசம் வரை பிராயணம் செய்கிறாள்.அது அவள் விரும்பி செய்த பயணம் இல்லை.ஒவ்வொரு இடத்திலும் அவளுக்கு நிரைய கஷ்டங்கள். முடிவில்,சீனாவை அடைந்தவுடன், தனக்கு ஏற்பட்ட துர அதிர்ஷ்டங்கள் தன் வாழ்க்கை பூர்ணம் அடைவதற்கான முன் ஏற்பாடுகள் என்று புரிந்து  கொள்கிறாள் எப்படி? கதையை கேளுங்கள்...

நூற்றி நாற்பதாவது கதை: ஒரு கால் -கொலுசின் கதை(Story of An Anklet) 12.01.2023

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. உலக பிரசித்த பெற்ற ,Cinderella கதை மாதிரி இருந்தாலும்,இந்த கதை 1000 ஆண்டுகள் முன்னாலேயே எழுதப்பட்ட கதை. 2 கதைகளின்,கருத்து ஒன்றாக இருந்தாலும்,சம்பவங்கள் முற்றிலும் மாறுபட்டவை. எப்படி? கதையை கேளுங்கள்....

Poslouchej podcast ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály